Monday, October 19, 2020

பொலிட்டிக்கல் பெண்கள்

சமீபத்தில் உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த நான்கு பெண்கள் பற்றிய ஒரு பார்வை...


இவாங்கா ட்ரம்ப்ட்ரம்பின் மகள். அமெரிக்க இளம் பெண் தொழிலதிபராக வலம்வந்தவர், கடந்த அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்ற பிறகு, அதிபரின் சீனியர் ஆலோசகரானார். தற்போது, மீண்டும் அதிபர் தேர்தல் களத்தில் நிற்கும் தந்தைக்காக, அமெரிக்கா முழுவதும் பம்பரமாகச் சுழன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறார். பயணத்துக்கு நடுவில், ஒரு பீட்ஸா கடைக்கு திடீர் விசிட் அடித்தவர், கிச்சன் ஏரியா வரை சென்று அமர்க்களப்படுத்தினார். மேலும், கொரோனா பரவலைத் தன் தந்தை அளவுக்கு யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என ட்ரம்புக்கே சர்ட்டிஃபிக்கேட்டும் கொடுக்கிறார் செல்ல மகள்.

ஆவா மர்த்தோ


பருவநிலை மாற்றம், மனித உரிமைகள் போன்ற விஷயங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் ஆவா மர்த்தோ. தெற்கு ஃபின்லாந்தின் சிறிய கிராமத்திலிருந்து வந்த இந்த 16 வயது சிறுமி, அந்நாட்டின் ஒருநாள் (அக்டோபர் 7-ம் தேதி) பிரதமராகப் பணியாற்றியிருக்கிறார். அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக இளம்பெண்களும் திறமையுடன் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்கான முன்னெடுப்புக்காகவும், ஐ.நா சபையின் சர்வதேசப் பெண்கள் தினத்தின் `கேர்ள்ஸ் டேக் ஓவர்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்த நிகழ்வு அரங்கேறியது. ‘‘நாம் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைச் சிறுமிகள் உணர வேண்டும்’’ என்கிறார் இந்த ஒரு நாள் பிரதமர்!

மெஹ்பூபா முப்தி


மத்திய அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட ஜம்மூ காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, 14 மாதங்கள் கழித்து அக்டோபர் 13-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.வெளியே வந்ததும், “காஷ்மீரின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்காக எத்தனையோ காஷ்மீரிகள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அதை நாம் பெறுவதற்கான பாதை நிச்சயம் எளிதானதாக இருக்காது” என்று ஆடியோ வெளியிட்டு தன் அரசியல் பணிகளைத் தொடங்கிவிட்டார்.

பெட்ரா டி சட்டர்


`ஐரோப்பாவின் முதல் திருநங்கை துணைப் பிரதமர்’ என்ற பெருமையை பெல்ஜியம் நாட்டின் துணைப் பிரதமர் பெட்ரா டி சட்டர் பெற்றிருக்கிறார். மகப்பேறு மருத்துவர், மூத்த அரசியல்வாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட இவர், திருநங்கைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர். ஒரு திருநங்கையாக, தன் சொந்த அனுபவங்களை வெளிப்படையாகப் பேசியவர். ``எனது 40 வயதில் பெண்ணாக முழுமையாக மாற முடிவுசெய்தேன். அதனால், என் நண்பர்களை இழந்தேன். அதேசமயம், எனக்குக் கிடைத்த வாய்ப்பு, என்னைப் போன்ற மற்ற பலருக்குக் கிடைப்பதில்லை. அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன்’’ என்கிறார்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment