Thursday, October 01, 2020

மைக் ப்ளீஸ்

 


ஜோ பைடன் ஊக்கமருந்து எடுத்துக் கொள்கிறார். என்னுடன் விவாதத்துக்கு வருவதற்கு முன்னர், அவர் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நானும் சோதனைக்குத் தயார்!


- ட்ரம்ப்


வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் பாரம்பர்யம் சிறப்பானது!


- நரேந்திர மோடி


அ.தி.மு.க-வின் இரண்டு பேர், முதல்வர் வேட்பாளருக்குப் போட்டி போட்டுக்கொள்கிறார்கள்; அவர்கள் இருவரும் இணைந்து பா.ஜ.க உறுப்பினரைக்கூட முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது!


- உதயநிதி ஸ்டாலின்


வேளாண் சட்டங்கள் நமது விவசாயிகளுக்கு மரண தண்டனை போன்றவை; அவர்களின் குரல் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் நசுக்கப்படுகிறது!


- ராகுல் காந்தி


பண்பாடு, வரலாற்றை எழுதும் பணியை கல்வியாளர்கள், வரலாற்று அறிஞர்களிடம் விட்டுவிட வேண்டும்!


- தொல்.திருமாவளவன்


ஈ.வெ.ரா அவர்களின் சிலை அவமதிப்பு கண்டிக்கத்தக்கது. காவி புனிதமானது. அனைவரையும் ஆதரிக்கும் தியாகப் பண்பின் குணமே காவி. காவியைத் தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல!


- எல்.முருகன்


எந்தக் காலத்திலும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுடன் கட்சி உடன்பாடும் இல்லை; அரசியல் உடன்பாடும் இல்லை. சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்!


- சீமான்


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment