Friday, October 23, 2020

மைக் ப்ளீஸ்


காங்கிரஸ் அரசாங்கத்தால் கடினமாகக் கட்டமைக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை, பா.ஜ.க அரசாங்கம் ஒரேயடியாக இடித்துவிட்டது!


- சோனியா காந்தி


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது கட்டாயம்; விரைவில் வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்!


- அமைச்சர் ஜெயக்குமார்


சோனியா காந்தி - ஸ்டாலின் - நாராயணசாமி - அன்புமணி

வலிவுடனும் பொலிவுடனும் திகழும் தி.மு.க கூட்டணியில், சலசலப்பை ஏற்படுத்தலாம் என யத்தனிப்பவர்கள் இறுதியில் கலகலத்துப் போவார்கள். தி.மு.க கூட்டணியை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது!


- மு.க.ஸ்டாலின்


ஒருவேளை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால், அதுவும் வரலாற்றிலேயே மிக மோசமான வேட்பாளரிடம் தோல்வி அடைந்தால், நான் என்ன செய்வேன் என உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? நாட்டைவிட்டு வெளியேறினாலும் வெளியேறுவேன்!


- ட்ரம்ப்


மருத்துவப் படிப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு செய்திருப்பது வரலாற்று துரோகம்!


- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி


ஜெயக்குமார் - ட்ரம்ப் - ஹர்ஷவர்தன்

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட தளர்வுகளால், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் விதிகளை அலட்சியம் செய்வதால் ஏற்பட்ட இந்த நிலை, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஓர் எடுத்துக்காட்டு!


- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்


நீட் தேர்வால், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை பேரின் உயிரை ‘நீட்’ காவு வாங்கப்போகிறதோ? ‘நீட்’ என்ற சமூக அநீதிக்கு எதிராகப் போராடி வெற்றிபெறுவதே தீர்வு. தற்கொலை தீர்வு அல்ல!


- அன்புமணி ராமதாஸ்


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment