உங்கள் அன்புக்குத் தகுதியானவனாக மாற நான் தொடர்ந்து பாடுபடுவேன். தேசமும் ஏழைகளின் நலனும் எனக்கு மிக முக்கியமானவை. ஒரு மனிதனாக நான் சில தவறுகளைச் செய்திருக்கலாம். இவற்றையெல்லாம் தாண்டி என்மீதான உங்கள் அன்பு சீராக வளர்ந்திருக்கிறது. - நரேந்திர மோடி
அ.தி.மு.க-வில் அப்பனுக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன், பேரனுக்குப் பின் கொள்ளுப்பேரன் என்ற அரசியல் இல்லை. - எடப்பாடி பழனிசாமி
நான் பஞ்சாப் மக்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். அதுபோலவே தமிழக மக்களுக்கும் கடமைப் பட்டிருப்பதாகவே எண்ணுகிறேன். ஏன் என்று காரணம் தெரியவில்லை. - ராகுல் காந்தி
நான் விவசாயி என்று சொன்னதில்லை; ஆனால், விவசாயியின் கஷ்டத்தை நன்கு அறிவேன். - மு.க.ஸ்டாலின்
எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைக் கடவுளின் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்; கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கடவுள் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். - டொனால்டு ட்ரம்ப்
ஒரு ட்வீட்டுக்கு ரூ.2 வாங்கிக் கொண்டு, ‘நான் பா.ஜ.க-வில் இணையப்போவதாக’ வதந்தி பரப்புகிறார்கள். - குஷ்பு
வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது ஒரு சீர்திருத்த முயற்சி; சட்டங்களில் எந்தவிதக் குழப்பமும் இல்லை. - நிர்மலா சீதாராமன்
No comments:
Post a comment