Friday, October 23, 2020

கலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி!

“ஜெயலலிதாம்மா மறைவுக்குப் பிறகு, என்னோட மருத்துவப் படிப்பு என்னாகுமோன்னு நான் கலங்கி நின்னப்போ, என்னோட தவிப்பை ஜூனியர் விகடன்ல எழுதினீங்க. இப்போ எனக்கு மறுபடியும் உதவி கிடைச்சிருக்கு. இனி பிரச்னை இல்லாம படிச்சு முடிச்சிருவேன்; டாக்டராயிடுவேன்னு நம்பிக்கை வந்திருக்கு” - மகிழ்ச்சியின் கண்ணீர் பொங்குகிறது மருத்துவ மாணவி சாந்தினியின் கண்களில்.



தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சேர்ந்தவர் சாந்தினி. ப்ளஸ் டூ-வில் சிறப்பாகப் படித்த சாந்தினிக்கு 2016-ம் ஆண்டு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனாலும், குடும்ப வறுமை காரணமாக, மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தவித்தார். சாந்தினியின் நிலையை அறிந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ‘சாந்தினியின் மருத்துவப் படிப்புக்கான செலவுகளை நான் ஏற்கிறேன்!’ என்று சட்டமன்றத்திலேயே அறிவித்து, முதல் ஆண்டுக்கான கட்டணத்தையும் வழங்கினார்.


ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சாந்தினிக்கு ஜெயலலிதா வழங்குவதாக அறிவித்த உதவித்தொகை வழங்கப்படவே இல்லை. முதல்வர், அமைச்சர்கள் எனப் பலரிடம் முறையிட்டும் எந்த உதவியும் கிடைக்காமல், மருத்துவப் படிப்பைத் தொடர முடியாமல் தவித்த அவரது நிலைமை குறித்து 20.9.2020 தேதியிட்ட ஜூ.வி-யில் “அம்மா கொடுத்த வாக்கு என்னாச்சு? என் மருத்துவப் படிப்பு நின்னுபோச்சு!” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைப் படித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்மைத் தொடர்புகொண்டு, “சாந்தினிக்கு உதவித்தொகை கிடைக்க உடனே ஏற்பாடு செய்கிறேன்” என்று உறுதியளித்ததோடு, தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார். அ.தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்தும் சாந்தினியிடம் பேசி, 17-ம் தேதி சென்னை அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து, ஒரு லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கியிருக்கிறார்.

“என் மருத்துவக் கனவு சிதைஞ்சு போயிடுமோனு நான் தவிச்ச நேரத்துல என் நிலையைக் குறிப்பிட்டு எழுதிய ஜூ.வி-க்கு நான் ஆயுசுக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்” என்று நெகிழ்ந்தார் சாந்தினி.


நமது செய்தியின் எதிரொலியாக, அ.தி.மு.க-வின் 49-வது ஆண்டு தொடக்கவிழாவின்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கல்வி உதவித்தொகை பெற்று படித்துவந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை வரவழைத்து, நிறுத்திவைக்கப்பட்ட அவர்களுக்கான உதவித் தொகைகளை மீண்டும் கொடுத்திருக்கிறார்கள்.

நல்லது நடந்தால் சரிதான்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment