* நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை, மீண்டும் திரைப்படமாகவிருக்கிறது. ஏற்கெனவே, இந்தியில் வித்யா பாலன் நடித்த ‘தி டர்ட்டி பிக்சர்’ படமும் சில்க் ஸ்மிதாவின் பயோபிக்தான். ஆனால், அதில் அவரின் வாழ்க்கை முழுமையாகச் சொல்லப்பட வில்லையாம். முழுமையான தகவல்களுடன் இதை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். சில்க் ஸ்மிதாவாக யாரை நடிக்கவைப்பது என்ற தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறது படக்குழு.
* அறிமுக இயக்குநர் சுஜானா ராவ் இயக்கத்தில் ‘கமனம்’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்து முடித்திருக்கும் ஸ்ரேயா, ராஜமெளலி இயக்கத்தில் ‘RRR’ படத்தில் நடித்துவருகிறார். எப்போதும் ஸ்ரேயா நடிக்கும் படங்களில், அவருக்குத் தனிப் பாடல் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அவருக்கென்று தனிப்பாடல் காட்சி இல்லையாம். ஆலியா பட்டுக்கும், ஒலிவியா மோரிஸுக்கும்தான் பாடல் காட்சிகள் இருக்கின்றனவாம்.
* சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கிராமத்துப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. அதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார், நிதி அகர்வால். ஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகப்போகும் இவருக்கு இது இரண்டாவது படம். தவிர பாரதிராஜா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
No comments:
Post a comment