கம்போடியா நாட்டில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க உதவிய ஆப்பிரிக்க ராட்சத எலியான `மகாவா’ (Magawa) என்ற எலிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த `நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தக அமைப்பு’ ஒன்று தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்திருக்கிறது. இந்த அமைப்பின் 77 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாகத் தங்கப் பதக்கம் பெறும் எலி மகாவாதான், கடந்த சில நாள்களுக்கு முன்னர் சர்வதேச ஊடகங்களின் முக்கியச் செய்தி!
கம்போடியா ராணுவத்தில் ஐந்து ஆண்டுக்காலமாகச் சேவையாற்றிவரும் மகாவா எலி, இதுவரை 39 கண்ணிவெடிகளை அகற்ற அந்நாட்டு ராணுவத்துக்கு உதவி செய்திருக்கிறது.
இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), சமீபத்தில் இரட்டைத் திமில்கொண்ட ஒட்டகங்களை லடாக் பகுதி எல்லை ரோந்துப் பணியில் பயன்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது.
இதேபோல உலக நாடுகளின் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் சில விலங்குகளைப் பற்றி இங்கே காணலாம்...
No comments:
Post a comment