Sunday, October 11, 2020

பீகார் தேர்தல் - பிளான் 2020


இந்தியாவில் கொரோனா பேரிடருக்குப் பிறகு, முதல் சட்டமன்றத் தேர்தல் பீகார் மாநிலத்தில்தான் நடக்கவிருக்கிறது. தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாரின் ஆட்சிக்காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. `கொரோனா நேரத்தில் தேர்தலா?’ என்ற விமர்சனத்தையும், பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும், வழக்குகளையும் தாண்டி மூன்று கட்டங்களாக அங்கு தேர்தல் நடக்கவிருக்கிறது.


கோவிட் முன்னேற்பாடுகள்:


வாக்களிக்க ஒரு மணி நேரம் அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது. (காலை 7 முதல் மாலை 6 வரை)


* தனிமைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கும் வசதி.


* வாக்கு சேகரிக்க ஐந்து நபர்கள் மட்டுமே செல்லலாம் என்ற கட்டுப்பாடு.


* 46 லட்சம் முகக்கவசங்கள், ஏழு லட்சம் ஹேண்ட் சானிட்டைஸர்கள், ஆறு லட்சம் பி.பி.இ கிட்டுகள் மற்றும் 23 லட்சம் கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.


* ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 7.2 கோடி கையுறைகள் வாக்காளர்களுக்காகத் தயார்செய்யப்பட்டிருக்கின்றன.




கட்சிகளின் கூட்டணி நிலவரம் என்ன?


தேர்தல் கொலைகள்!

* பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராஜேஷ், அக்டோபர் 1-ம் தேதி காலை பாட்னாவில் நடைப்பயிற்சி செல்லும்போது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பி ஓடினர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

* ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலித் தலைவர் சக்தி மாலிக் (37), தனக்கு சீட் வழங்க வேண்டு மென்றால் தேஜஸ்வி யாதவ் ரூ.50 லட்சம் கேட்பதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதையடுத்து, கடந்த செப்டம்பர் 11-ம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அக்டோபர் 04-ம் தேதி பூர்னியாவிலுள்ள அவரது இல்லத்தில் நுழைந்த மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரான தேஜஸ்வி பிரசாத் யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், அனில்குமார் சாது, பாஸ்வான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இணையவழி பிரசாரங்கள், தேர்தல் கொலைகள், வெள்ள பாதிப்பு, கொரோனா பாதிப்பு எனப் பரபரவென இருக்கிறது பீகார் தேர்தல் களம். நிதிஷ் குமார் தன் முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வாரா, தோல்வியைத் தழுவுவாரா என்பது நவம்பர் 10-ம் தேதி தெரிந்துவிடும்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment