Friday, October 02, 2020

புறக்கணிப்பா... புதுப் பதவிகளுக்கான காத்திருப்பா? - படபடக்கும் பா.ஜ.க புதிய நிர்வாகப் பட்டியல்

‘பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில், தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவருக்குக்கூட இடம் இல்லை’ என்ற செய்தி கமலாலயம் தாண்டி ஒட்டுமொத்தத் தமிழக அரசியலையுமே புருவம் நெளியவைத்திருக்கிறது!


அகில இந்திய பா.ஜ.க-வின் தேசியப் பொறுப்புகளில் புதிதாக 12 துணைத் தலைவர்கள், எட்டு பொதுச்செயலாளர்கள் உட்பட 70 புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவர்கூட நியமனம் பெறவில்லை என்பதோடு, ஏற்கெனவே தேசியச் செயலாளர் பொறுப்பில் இருந்துவந்த ஹெச்.ராஜாவின் பதவியும் பறிக்கப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


‘எப்படியாவது தமிழகத்தில் தாமரையை மலரவைத்துவிட வேண்டும்’ என்ற தீவிர முயற்சியில் இருந்துவரும் தொண்டர்களுக்கு இந்தச் செய்தி பேரிடியாக இறங்கியிருக்கிறது. அகில இந்தியத் தலைமையின் செயல்பாடு குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம்... “பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, நிர்வாகிகள் நியமனத்தின்போது பெண்களுக்கு 33 சதவிகிதம், சாதி, வயது மற்றும் புவியியல் ரீதியாக அனைத்துப் பிரிவினரின் பிரதிநிதித்துவமும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். இதுதான் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பு விதி. இந்த அடிப்படை விதிகளுக்கு மாறாக சில நேரங்களில், தேவை மற்றும் திறமையின் அடிப்படையில் சில தலைவர்கள் நியமிக்கப்படுவதும் உண்டு.வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை வெற்றிபெறச் செய்து, எங்கள் கட்சி சார்பிலான எம்.எல்.ஏ-க்களைக் கோட்டைக்கு அனுப்பிவைத்துவிட வேண்டும் என்பதில் தமிழகத் தலைமை மட்டுமல்லாமல், அகில இந்தியத் தலைமையும் ஆர்வமாகவே இருக்கிறது. இதற்கான முதற்கட்டமாக, தமிழகத்தில் பா.ஜ.க வலுவாக இருக்கும் 25 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து, தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டோம். இந்தத் தொகுதிகளில் தமிழக பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடுவார்கள். இவை தவிர, பா.ஜ.க-வுக்குச் சாதகமான தொகுதிகளும் கணக்கெடுக்கப்பட்டு, தேர்தல் பணியைத் தொடங்கும் வேலைகள் முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன.


இப்படியொரு சூழலில், கட்சியின் அகில இந்தியப் பொறுப்புகளில் தமிழகத் தலைவர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டிருப்பது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், கடந்த காலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜனா கிருஷ்ண மூர்த்தி அகில இந்திய தலைவராகவே இருந்திருக்கிறார். அடுத்து, பொருளாளராக சுகுமாறன் நம்பியார் இருந்தார். இல.கணேசன் துணைத் தலைவராகவும் செயலாளராகவும் இருந்திருக்கிறார். கடைசியாக அமித் ஷா தலைமையின் கீழ், கட்சியில் ஹெச்.ராஜா தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். மேலும், அகில இந்தியச் செயற்குழு உறுப்பினர், ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் அணிகள் எனப் பலதரப்பட்ட பிரிவுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த வர்கள் பொறுப்பு வகித்துவந்திருக் கிறார்கள். ஆனால், ஜே.பி.நட்டா தலைமையிலான பா.ஜ.க., தமிழகத்தி லிருந்து ஒருவரைக்கூடத் தேர்ந் தெடுக்காதது இங்கிருக்கும் அரசியல் சூழலில் பல்வேறு கேள்விகளையும் விவாதங் களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியொரு சர்ச்சை எழுவதற்கான வாய்ப்பை மத்தியத் தலைமை உருவாக்கியிருக்கக் கூடாது’’ என்று வருத்தப்பட்டார்கள்.இதற்கிடையே, புதிய நிர்வாகிகள் பட்டியல் குறித்து டெல்லி பக்கம் விசாரித்தால்... “தமிழகத் தலைவர்கள் மட்டுமல்லாமல், பா.ஜ.க-வின் தமிழக மேலிடப் பார்வையாளராக இருந்த முரளிதர ராவ் பதவியும்கூட பறிக்கப்பட்டிருக் கிறது. கட்சியின் துணைத் தலைவராக இருந்துவந்த மூத்த தலைவர் உமா பாரதியும் நீக்கப்பட்டிருக்கிறார். வயது மூப்பு, உடல்நிலை சரியில்லாத காரணத்தாலேயே அவர் கட்சிப் பொறுப்புகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக் கிறார். கட்சியின் இளைஞர் அணித் தலைவராக நல்லமுறையில் கட்சிப் பணியாற்றிவந்த பூனம் மகாஜனும்கூட பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு விரைவில் மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம். இளைஞர்களுக்கும், கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்குமே இப்போது பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. அந்தவகையில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த முகுல்ராய், ஒடிசாவைச் சேர்ந்த பண்டா, ஆந்திராவைச் சேர்ந்த என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி, கேரளா அப்துல்லா குட்டி, வடக்கன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாகப் பொறுப்பேற்றிருக் கிறார்கள்’’ என்கிறார்கள்.


``தமிழகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருக் கிறது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அகில இந்தியத் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்கள் பலர் பங்கேற்றிருந்த காலகட்டங்களில் கூட, குறிப்பிட்ட ஒரு மாநிலத்திலிருந்து ஒருவர்கூட கட்சியின் அகில இந்தியப் பொறுப்பு களில் தேர்ந்தெடுக்கப்படாத சூழல்களும் இருந்திருக்கின்றன. எனவே, இது இயல்பான நடவடிக்கைதான். கட்சியின் அகில இந்தியப் பொறுப்புகளில் தேசியச் செயற்குழு, பல அணிப் பிரிவுகளுக்கான தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு இன்னமும் நிர்வாகிகள் நியமிக்கப்பட வில்லை. எனவே, தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு தேசிய அளவில் பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு மிகப்பெரிய மாநிலம். அடுத்த சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் வரப்போகும் சூழலில், தலைவர்களின் கவனம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காகக்கூட தேசிய அளவிலான பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்திருக்கலாம் என்பது என்னுடைய யூகம். ஏனெனில், வரும் சட்டசபைத் தேர்தல், தமிழக பா.ஜ.க-வுக்கு மிக முக்கியமான தேர்தலாக இருக்கிறது!’’ என்றார் தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.


இதற்கிடையே, வரும் நவம்பர் மாதத்தில் காலியாகவிருக்கும் ‘மாநிலங்களவை உறுப்பினர் பதவி’ மற்றும் ‘அமைச்சர்’ உள்ளிட்ட முக்கிய அரசப் பதவிகளுக்குத் தமிழகத்திலிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவலும் டெல்லியிலிருந்து கசிந்திருப்பது, கமலாலயத்தை உற்சாகத்தில் வைத்திருக்கிறது!


‘வெள்ளத் தனைய மலர்நீட்டம்’ என்கிறார் வள்ளுவர்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment