Wednesday, September 16, 2020

#Trending #ட்ரெண்டிங்

 #TNStandWithSuriya


‘நீட்’டுக்கு எதிரான சூர்யாவின் அறிக்கையில் ‘உயிருக்குப் பயந்து வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நீதிவழங்கும் நீதிமன்றம்’ என்ற வரிகளுக்காக அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதவே, #TNStandWithSuriya ட்ரெண்டானது! சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற ஆறு நீதிபதிகள், தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினர்.


#NTKForTamilnaduநாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த கல்யாணசுந்தரமும் ராஜீவ் காந்தியும் கட்சியிலிருந்து விலக, மறுபுறம் நாம் தமிழர் கட்சியினர், வரும் தேர்தலை முன்னிறுத்தி #NTKforTamilNadu என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்தனர்.


#UddhavResignNow #KanganaVsUddhavநடிகை கங்கனா ரணாவத் மகாராஷ்டிரா அரசைக் கடுமையாக விமர்சித்துவர #KanganaVsUddhav ட்ரெண்டானது. இதனிடையே, அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்து, ‘கார்ட்டூன்’ ஒன்றைப் பகிர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிமீது சிவசேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதனுடன் கங்கனா ஆதரவாளர்கள் மற்றும் பா.ஜ.க சேர்ந்துவிட #UddhavResignNow என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது!


#AmitShah & AIIMSமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா வுக்கான சிகிச்சை, கொரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சை என்று இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முழுமையாகக் குணமடைந்து மீண்டும் வீடு திரும்பினார். இந்தநிலையில் கடந்த 13-ம் தேதி, மூன்றாம் முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து #AmitShah, #AIIMS போன்ற ஹேஷ் டேக்குகள் ட்ரெண்ட் ஆகின!


#RaghuvanshPrasadSinghபீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மத்திய அமைச்சராக இவர் இருந்தபோதுதான், 100 நாள் வேலை திட்டத்தை வகுத்து அமல்படுத்தினார். `100 நாள் வேலை திட்டத்தின் தந்தை’யாக அறியப்பட்டவர் ரகுவன்ஷ்!


#UmarKhalidடெல்லி ஜே.என்.யூ மாணவர்கள்மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில், மாணவர் சங்க முன்னாள் தலைவர் உமர் காலித், 11 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அம்மாநில போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அவரின் கைதுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர, இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.


#HangRapistsPublically #moterwayincidentபாகிஸ்தானின் லாகூர் தேசிய நெடுஞ்சாலையில் குழந்தையுடன் பயணித்த பெண் ஒருவர், தன் குழந்தையின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் குற்றவாளிகள் பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.


#Comptonஅமெரிக்காவின் காம்ப்டன் நகரில், காரில் அமர்ந்திருந்த இரு அதிகாரிகள்மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து #Compton ட்ரெண்டானது!


#CancelNexflix

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் `க்யூட்டீஸ்’ உள்ளிட்ட சில படங்கள் அல்லது சீரீஸ்கள், இளம்வயதுப் பெண்களை மோசமாகச் சித்திரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. change.org எனும் இணையதளத்தில் ‘க்யூட்டீஸ்’ படத்தை நெட்ஃப்ளிக்ஸி லிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக, சுமார் 6 லட்சம் மக்கள் கையெழுத்திட்டுள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment