Friday, September 04, 2020

மிஸ்டர் மியாவ்

 * 2016-ம் ஆண்டு, கன்னடத்தில் சுதீப்-நித்யா மேனன் நடிப்பில் வெளியான படம், ‘கோட்டிக்கோபா 2’. தற்போது, இந்தப் படத்தின் சீக்வெலான ‘கோட்டிகோபா 3’ தயாராகிவருகிறது. இதில், சுதீப்- மடோனா செபாஸ்டியன் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகை சன்னி லியோன். ஏற்கெனவே, பாலிவுட்டில் இவர் நடனமாடிய எல்லாப் பாடல்களும் செம ஹிட் என்பதால், இந்தப் படப் பாடலும் ஹிட்டாகும் என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறதாம்.* `பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் வென்ற முகென் ராவ், அடுத்தடுத்து இரண்டு படங்களை கமிட் செய்திருக்கிறார். முதல் படத்தில், ‘பேச்சுலர்’ படத்தின் கதாநாயகி திவ்யபாரதியுடன் நடிக்கிறார். இரண்டாவது படத்தில், இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அள்ளிவீசும் சீரியல் நடிகை ஷிவானியுடன் நடிக்கிறார். ஷிவானிக்கும் இதுதான் அறிமுகப்படம்.


* குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயினாக ஜொலித்தவர், மீனா. தற்போது, ரஜினியுடன் ‘அண்ணாத்த’, மோகன்லாலுடன் ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய படங்களைத் தன் கைவசம் வைத்துள்ளார். ஒரு படத்திலாவது நெகட்டிவ் ரோலில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டகால ஆசையென சமீபத்தியப் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.


* ஒருகாலத்தில் கிளாஸிக் படங்களைக் கொடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா, சமீப காலமாகச் சர்ச்சைக்குரிய படங்களை மட்டுமே எடுக்கிறார். தற்போது, இவருடைய பயோபிக் மூன்று பாகங்களாகத் திட்டமிடப்பட்டிருக் கிறது. முதல் பகுதியின் பெயர் ‘ராமு.’ சிறுவயது தொடங்கி இவர் முதல் படம் இயக்கியது வரை இதிலிருக்கும். இரண்டாம் பகுதியின் பெயர் ‘ராம் கோபால் வர்மா.’ இதில், இயக்குநராக பாலிவுட்டில் இவர் கோலோச்சிய கதை இடம்பெறும். மூன்றாவது பகுதியின் பெயர் ‘RGV.’ இதில், கடவுள், காமம், சமூகம் பற்றிய இவரது பார்வை இடம்பெறும் என்கிறார்கள். முதல் இரண்டு பகுதியை தொரசாய் தேஜா என்பவரும், மூன்றாவது பகுதியை ராம் கோபால் வர்மாவும் இயக்கவிருக்கின்றனர்.


* ‘றெக்க’ படத்துக்குப் பிறகு லட்சுமி மேனன், படங்களில் நடிக்கவில்லை. பிரபு தேவாவுடன் இவர் நடித்த `யங் மங் சங்’ படம் மட்டும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுடன் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் லட்சுமி மேனன். படத்தின் ஷூட்டிங் தொடங்கும் நேரத்தில்தான் லாக்டெளன் வந்துவிட்டது. தற்போது உடல் எடையைக் குறைத்திருக்கும் லட்சுமி மேனன், போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவிட்டுவருகிறார். லைக்ஸ் குவிகிறது!


* மொட்டை மாடி போட்டோ ஷூட்களில் பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு ‘குக் வித் கோமாளி’ கொடுத்தது டபுள் புரொமோஷன். கொரோனா காலகட்டத்தில் செம டென்ஷனாக இருந்த ரம்யாவுக்கு ‘கலக்கப் போவது யாரு’ ஷூட்டிங்கில் கலந்துகொள்வது செம ரிலாக்ஸாக இருக்கிறதாம்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment