Wednesday, September 16, 2020

கழுகார் பதில்கள்

@கருப்புசாமி, சூளைமேடு


ஒரு விஷயத்துக்கு நான் ஐடியா கொடுத்தால் அதை என் மேனேஜர் அப்ரூவ் செய்வதில்லை. இன்னொருவர் கொடுக்கும்போது அதில் என்ன இருந்தாலும் ஓகே ஆகிறது. இதனால், எனக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை எப்படிச் சமாளிப்பது?


‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ஒரு டியூனுக்குப் பாடல் எழுதச் சொல்லி வாலியிடம் இயக்குநர் ப.நீலகண்டன் கேட்கிறார். வாலி எழுதிய வரிகள் எம்.ஜி.ஆருக்கு அனுப்பப் படுகின்றன. எம்.ஜி.ஆர் அதை நிராகரிக்கிறார். பிறகு, அதே சிச்சுவேஷனுக்கு கண்ணதாசன் வரிகள் எழுதுகிறார். அதுவும் ரிஜெக்ட்! அதன் பிறகு, அந்த டியூன் மருதகாசிக்குப் போகிறது. அதைப் படித்த எம்.ஜி.ஆர் ஓகே சொல்கிறார். அந்தப் பாடல்தான் ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...’


உங்கள் ஐடியாக்கள் ஓகே ஆகவில்லை என்பதால் நீங்கள் குறைந்துவிடப்போவதில்லை... தொடர்ந்து உற்சாகமாகப் பணிபுரியுங்கள்.@மாணிக்கம், சங்ககிரி.


ஸ்விஸ் வங்கியில் இருக்கும் பணம் எப்போது இந்தியா வரும்?


2024-ம் ஆண்டு வரும். மீண்டும் தேர்தல் வாக்குறுதியாக!


@மு. நடராஜன், திருப்பூர்-7.


‘2021 தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும்; ஆனால், அதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கும்’ என்று ஸ்டாலின் எதை மனதில் வைத்துக்கொண்டு கூறுகிறார்?


ஒருபக்கம் தன் மகன் உதயநிதியை நினைத்துப் பார்த்திருப்பார்போல... இன்னொரு பக்கம் அவர் மனைவி பார்த்த ‘ஜாதக பலன்கள்’ எல்லாம் மனதில் வந்து போயிருக்கலாம்!


@சதீஷ்குமார், ஆறகழுர், சேலம்.


பகுத்தறிவு என்றாலே நாத்திகம்தானா... நாத்திகம் இல்லாமல் பகுத்தறிவு கிடையாதா?


எதையும் பகுத்து அறிவதே பகுத்தறிவு. இதில், நாத்திகம் ஒரு சிறு கூறுதான்.@தாமரை நிலவன், கீழ்க்கட்டளை.


ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கப்போகிறதே... கழுகாருக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டா?


அரசியல் விளையாட்டாகவும், விளையாட்டு அரசியலாகவும் மாறிப்போனதால்... நிச்சயம் ஆர்வம் உண்டு. உங்களைப்போலவே ஐ.பி.எல்-க்கு ஐயாம் வெய்ட்டிங்!


@ப.த.தங்கவேலு. பண்ருட்டி.


பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் தமிழகத்தில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்ததற்கு மூலகாரணம் என்ன?


இதில் மட்டும்தானா... எங்கும் எதிலும் ஊழல் மலிந்துகிடக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் பேராசை.


@பா.ரேஷ்மா, வந்தவாசி.


‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதே?


‘லஞ்சம் வாங்க மாட்டோம் போடா’ என்ற டி-ஷர்ட் எப்போது வரும் என்று காத்திருப்போம்!@பெ. பச்சையப்பன், கம்பம்


இவ்வளவு பொருளாதாரத் தட்டுப்பாட்டிலும் மதுப்பிரியர்கள் உற்சாகம் குறையாமல் இருக்கிறார்களே, எப்படி?


அப்படியா பச்சையப்பன்? எனக்கென்னமோ தாலியிழந்த பெண்களின் அழுகுரல்கள்தாம் அதிகமாகக் கேட்கின்றன.


@ரமேஷ்குமார், கோவை.


ஜப்பானியர்களின் தரம் உலகளவில் போற்றப்படு வதற்குக் காரணம் என்ன?


ஜப்பான் நிறுவனத்துக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று, 10,000 பொருள்களுக்கு ஆர்டர் கொடுத்திருந்தது. ‘நீங்கள் கொடுக்கும் பத்தாயிரம் பொருள்களில், மூன்று பொருள்கள் குறைபாட்டுடன் (Defect Piece) அனுமதிக்கப்படும்’ என அதற்கு ஒரு ‘AQL’ (Accepted Quality Level) செட் செய்திருந்தனர். சில மாதங்களுக்குப் பின்பு, ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்கு அந்தப் பொருள்கள் வந்து சேர்ந்தன. அதில் ஒரு சிறு பார்சலில் தனியாக சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. கூடவே ஒரு குறிப்பும்:


‘பத்தாயிரம் பொருள்களில் மூன்று, குறைபாட்டுடன் இருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். குறைபாடு உள்ள பொருள்களை ஏன் கேட்டீர்கள் என்று புரியவில்லை. இத்துடன் பத்தாயிரம் தரமான பொருள்களும், மூன்று குறைபாடுள்ள பொருள்களும் அனுப்பியிருக்கிறோம். அடையாளத்துக்காக அந்த மூன்று பொருள்கள் மீது சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறோம்’ என்று சொன்னது அந்தக் குறிப்பு!


@இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி


அ.தி.மு.க மறைமுகமாகத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது என்கிறார்களே?


வளையாபதி, நீங்கள் கேட்பதைப் பார்த்தால் ஆய்வுக்கூட்டம் என்கிற பெயரில் முதல்வர் தேர்தல் பிரசாரம் செய்கிறார் என்று சொல்ல வருகிறீர்களோ?


@கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு


இப்போது தமிழக அரசியல் களத்தில் ‘ஐயோ பாவம்’ யார்?


வேறு யார்... தொண்டர்கள்தாம்!@‘மேட்டுப்பாளையம்’ மனோகர், கோவை


சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையானால் அ.தி.மு.க-வில் மாற்றங்கள் நிகழுமா?


மாற்றங்கள் ஒன்றே மாறாதது,


மனோகர்!@இந்து குமரப்பன், விழுப்புரம்


‘என்னுடைய பாதுகாப்புக்கு வழிநெடுக போலீஸாரை சாலையில் நிறுத்தக் கூடாது’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே?


வாயில் வடைசுடக் கூடாது. அவ்வளவு அக்கறை இருந்தால், அதையே ஓர் அரசாணையாகப் போட வேண்டியதுதானே.


நீங்கள்தானே காவல்துறைக்கு அமைச்சர்... மறந்துவிட்டீர்களா முதல்வரே?


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment