Tuesday, September 22, 2020

சசிகலா முதல்வர் ஆக்குவார் என நம்புகிறார் செங்கோட்டையன்!


தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வன். ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனின் நிழலாக வலம்வந்தவர், திடீரென முகாம் மாறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் கே.கே.செல்வனிடம் பேசினோம்.


‘‘ஏன் இப்படியொரு முடிவு?’’


‘‘முப்பது வருடங்களாக சித்தப்பாவின் (செங்கோட்டையன்) அரசியல் பயணத்தில் உடனிருந்தேன். என் அப்பா கே.ஏ.காளியப்பன் 48 வருடங்களாக சித்தப்பாவுக்கு உறுதுணையாக இருந்துவந்தார். ஆனால், இப்போது அமைச்சரைச் சுற்றி நான்கு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. அமைச்சரை நம்பியிருந்த தொண்டர்களின் நலனுக்காக அவர் எதையும் செய்யவில்லை. சென்னையில் என் மருந்துக்கடை திறப்புவிழாவை நடத்தினேன். அதற்கு அழைப்பு விடுத்தும் அமைச்சர் வரவில்லை. எங்களுக்குரிய மரியாதை கிடைக்காததால்தான் இப்படியொரு முடிவை எடுத்தேன்.’’


கே.கே.செல்வன்

``யார் அந்த நான்கு பேர்?”

``அ.தி.மு.க வர்த்தக அணியின் மாநிலச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றியச் செயலாளர் தம்பி சுப்ரமணியம், அமைச்சரின் அரசியல் உதவியாளர் சபேசன், கோபி சேர்மன் மௌலீஸ்வரன்.”

‘‘செங்கோட்டையன் என்றாலே தொண்டர் பலம் நிரம்பியவர் என்றுதானே பார்க்கப்பட்டது?’’

‘‘இப்போது அப்படியில்லை. தொண்டர்கள் மனக் குமுறலில் இருக்கிறார்கள். தற்போது உள்ளாட்சிப் பதவிகளிலுள்ள பலரும் அ.தி.மு.க-விலிருந்து வெளியே வருவார்கள். தேர்தல் நேரத்தில் நீங்கள் இதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.”

‘‘அ.தி.மு.க-வில் இ.பி.எஸ் அணி, ஓ.பி.எஸ் அணி என்றெல்லாம் பிரிவுகளாக உள்ளன. இதில், செங்கோட்டையன் எந்த அணியைச் சேர்ந்தவர்?’’

‘‘அவர் எந்த அணியிலும் இல்லை. தனி அணியாகச் செயல்பட்டுவருகிறார். கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டபோதெ முதல்வராக வேண்டும் என நினைத்தார். அப்போது அது முடியவில்லை.”

``முதல்வராக ஆசைப்பட்டார் என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?”

‘‘அப்போது நானும் அங்குதான் இருந்தேன். கூவத்தூரில் துணிச்சலாகக் காய்களை நகர்த்தியிருந்தால் உறுதியாக முதல்வர் ஆகியிருப்பார். அவர் அவ்வாறு செய்யாததால் முதல்வராக முடியவில்லை.”

‘‘சசிகலா குடும்பத்துடன் இன்றளவும் அவர் தொடர்பில் இருக்கிறாரா?’’


``ஆமாம். அந்தக் குடும்பங்களுடன் அவருக்கு நட்பு இருக்கிறது. டி.டி.வி குரூப் ஆட்கள், திவாகரன் குடும்பம், இளவரசி குடும்பம் என அனைவருடனும் தொடர்பில் இருக்கிறார். சிறையிலிருந்து சசிகலா வெளியில் வந்துவிட்டால், தன்னை முதல்வர் ஆக்குவார் என நம்பிக் கொண்டிருக்கிறார்.”


``தி.மு.க-வில் சேரப்போகும் முடிவை செங்கோட்டையனிடம் தெரிவித்தீர்களா?”


``10 நாள்களுக்கு முன்னரே அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், `நம் குடும்பத்துக்குள் பிரிவுகள் வேண்டாம், என்ன தவறு இருந்தாலும் பேசி சரிசெய்துகொள்வோம்’ என்றார். `இல்லை, நான் முடிவெடுத்துவிட்டேன். இந்த முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை’ என உறுதியாகக் கூறிவிட்டேன்.’’

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment