Sunday, August 30, 2020

LOCKDOWN: ப்ளீஸ்... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகணும்!

முழு ஊரடங்கு, முக்கால் ஊரடங்கு, தளர்த்தப்பட்ட ஊரடங்கு... எனப் பல்வேறு பரிணாமங்களை அடைந்திருக்கும் ஊரடங்கு, எப்போது முழுமையாகத் தளர்த்தப்படும் என்று தெரியவில்லை. கொரோனா தொற்று பரவல் இன்னமும் குறையாத நிலையில், தற்போது ஆகஸ்ட் 31 வரை அமலிலிருக்கும் ஊரடங்கு, முழுவதும் தளர்த்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை. கூலித்தொழிலாளிகள், சுயதொழில் செய்பவர்கள் எனப் பலரும் வாழ்வாதாரத்துக்குக் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் 1 முதல் என்ன மாற்றம் இருக்கும்... மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

* “தளர்வுகள் அறிவிச்ச பிறகுகூட, கொரோனா பயம் காரணமா வேலூர் சிட்டிக்குள்ள இருக்கிற இறைச்சிக்கடைகளைத் திறக்க அனுமதி கொடுக்கலை. இதனால, கடந்த நாலு மாசமா சத்துவாச்சாரியில இருக்கிற இன்னொரு கறிக்கடைக்கு, தினமும் 300 ரூபாய் கூலியில் வேலைக்குப் போனேன். லாக்டௌனைத் தளர்த்தணும். இல்லாட்டி, எங்களை மாதிரியான ஏழை இறைச்சி வியாபாரிகளுக்கு லோன் கொடுத்து உதவணும்.’’

முன்னா, இறைச்சிக்கடைக்காரர். வேலூர்

முன்னா - ராசு - தங்ககிருஷ்ணன்

* “சிங்கம்புணரி புழுதிப்பட்டி கிராமத்துல, பஸ் ஸ்டாப் பக்கமா கடைவெச்சிருக்கேன். பஸ் ஓடாம மனுச மக்க ஏன் இங்கே வரப்போறாங்க... வாரத்துக்கு ரெண்டு வாட்டி வெளியூர் சந்தைக்கு செருப்பு விக்கப் போவேன், அந்தப் பொழப்பும் போச்சு. எனக்குக் கிடைக்கிற லாபத்துல ஆட்டோ பிடிச்செல்லாம் போக முடியாது. அதனால, கவர்மென்ட் பஸ்களை ஓடவிட்டா போதும்.’’

ராசு, செருப்பு தைக்கும் தொழிலாளி, சிங்கம்புணரி

* ‘கடந்த அஞ்சு மாசமா குடும்பத்தை நடத்தச் சிரமப்பட்டுக்கிட்டு இருக்கேன். ரயில் சேவையை இயக்கணும். முன்பதிவு செய்யறவங்க மட்டுமே ரயில்ல டிராவல் பண்ணலாம்னு அறிவிச்சா, சமூக இடைவெளியோடு மக்கள் பயணிக்கிற வாய்ப்பு கிடைக்கும். எங்களைப் போன்ற ஆட்டோ தொழிலாளர்களுக்கும் வேலை இருக்கும்.”

தங்ககிருஷ்ணன், ஆட்டோ டிரைவர், திருநெல்வேலி

* ‘‘எங்களை மாதிரி ஆளுங்க பொழைக்கணும்னா எல்லாக் கோயிலையும் அரசாங்கம் தொறக்கணும். கல்யாணம், விசேஷங்களை மண்டபத்துல நடத்த அனுமதிக்கணும். அப்பத்தான் எங்களை மாதிரி ஆளுக வாழ முடியும்.”

முத்துமாரி, பூ வியாபாரி, மதுரை

முத்துமாரி - முகமது ரிஜ்வான்

* ‘‘அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குறதா அரசு அறிவிச்சுது. அதுவும் சரியா வழங்கப்படலை. ஒருவேளை லாக்டெளன் நீடிச்சா, அது முடியுற வரைக்கும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் எங்ககிட்ட தவணைத் தொகையைக் கட்டச்சொல்லிக் கட்டாயப்படுத்தக் கூடாது. இதுக்கு அரசாங்கம்தான் வழி செய்யணும்.”

முகமது ரிஜ்வான், அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கச் செயலாளர், திருச்சி

* ‘‘இந்த இ-பாஸ் கூத்து எதுக்குன்னே தெரியலை. அதை எடுத்துட்டாலே மக்கள் நடமாட்டம் இருக்கும். நூறு ரூம்ஸ் இருக்கிற ஹோட்டல்ல, 30 ரூம்கள்ல ஆளுங்க தங்க அனுமதிக்கலாம். தாராளமா இடவசதி இருக்குற பூங்காக்களை யெல்லாம் திறக்கலாம். பாதுகாப்பு வழிமுறையோட முன்பதிவு அடிப்படையில சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கலாம். பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்குற மக்கள், கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாங்க. எங்க பொழப்பும் நடக்கும்!”

ஜான் பாஸ்கோ, சுற்றுலா வழிகாட்டி, ஊட்டி

* ‘‘யாரைக் குறை சொல்றதுன்னே தெரியலை. மக்கள்கிட்ட பணப்புழக்கம் இல்லை; தேவையைவிடக் குறைஞ்ச அளவுலதான் பொருள்களை வாங்குறாங்க. அரசாங்கத்தைக் குறைசொல்லி என்ன பண்றதுனு புரியலை!’’

சுகுமார், மளிகைக்கடை உரிமையாளர், புதுக்கோட்டை

* ‘‘நான் 10 வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன். லாக்டெளன் தொடங்கினப்போ ஏற்பட்ட நஷ்டம் இப்போ வரைக்கும் சரியாகலை. பள்ளிகள் திறந் திருந்தா, யூனிஃபார்ம் ஆர்டர் நிறைய வந்திருக்கும். கல்யாணங்கள் எளிமையா நடக்குறதால, அந்த ஆர்டர்களும் வர்றதில்லை. இதையெல்லாம் அரசு கவனத்துல எடுத்துக்கணும்.”

காஞ்சனா, டெய்லர், கோவை

ஜான் பாஸ்கோ - சுகுமார்

* “கடந்த மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்தே எங்களுக்குத் தொழில் பாதிப்பு ஏற்பட்டுருச்சு. ஆனாலும், ஈ.பி பில் கட்டுறோம்... வாட்டர் பில் கட்டுறோம். மேனேஜர்களுக்கு, செக்யூரிட்டிகளுக்கு சம்பளம் கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கோம். இ-பாஸை விலக்கினாலே ஓரளவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவாங்க. பார்ப்போம்...’’

ஜான் கென்னடி. லாட்ஜ் உரிமையாளர், கன்னியாகுமரி

* ‘‘ஆட்கள் வெளியே போக, வரன்னு இருந்தாத் தான் எங்களுக்குப் பொழப்பு. பாதிப் பேர் வீட்லயே இருந்து வேலை பார்க்குறாங்க, கொரோனாவால சலவைக்குக் கொடுக்கவும் பயப்படுறாங்க. ஊரடங்கு முடிஞ்சா பாதி பிரச்னை சரியாகிடும். கொரோனா முடிஞ்சாத் தான் பழைய வாழ்க்கை திரும்பும்!”

தெய்வானை, சலவைத் தொழிலாளி, கரூர்.

* ‘‘கோயில் திறக்கறதுல சில தளர்வுகளைக் கடைப்பிடிக்கலாம். காலையில 6 மணிக்குத் திறந்து 9 மணிக்கு மூடிடலாம். சாயந்தரம் 5 மணிக்குத் திறந்து, இரவு 7 மணிக்குப் பூட்டிடலாம். பக்தர்களைக் கூட்டமா விடாம, பத்துப் பத்துப் பேரா விடலாம். மக்களுக்கு நிம்மதியும் நம்பிக்கையும் அதிகரிக்கும்!”

சந்திரசூடன், கோயில் பூசாரி, திருவாரூர்

* ‘‘எல்லாத்தையும் முடக்குறதுல ஒரு பிரயோ ஜனமும் இல்லை. இதனால, பசி, பட்டினியிலதான் சாகணும். எத்தனையோ வியாதி வந்து போயிடுச்சு... இதுவும் போயிடும். `ஊரடங்கு... ஊரடங்கு...’னு சொல்லி எங்களைக் கொன்னுடாதீங்க. எல்லாத் தடையையும் நீக்குங்க. எல்லாம் சரியாகிடும்!’’

ரமேஷ், கட்டடத் தொழிலாளி, நாகப்பட்டினம்

* ‘‘கோடிக்கணக்குல பணத்தைப் போட்டு எத்தனை நாள் தியேட்டரை பூட்டி வெச்சிருக்க முடியும்? மக்கள் கடுமையான மன அழுத்தத்துல இருக்காங்க. தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி கொடுக்கணும். அரசு சொல்ற பாதுகாப்பு வழிமுறைகளையெல்லாம் பின்பற்றி பாதி இருக்கை களோடு தியேட்டர்களை நடத்த நாங்க தயாரா இருக்கோம்.”

பாலு, மேலாளர், அபிராமி தியேட்டர், ஈரோடு

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment