Tuesday, May 07, 2019

நூறு பெண்களை சீரழித்திருக்கிறேன்! - மாணவியை மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்!

பொள்ளாச்சி, பெரம்பலூரில் அரங்கேறிய பாலியல் வக்கிரங்கள் வரிசையில், புதியதாகச் சேர்ந்திருக்கிறது ஈரோடு! இங்குள்ள கல்லூரி மாணவி ஒருவரை, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை அத்துமீறியதுடன் நண்பர்களுக்கும் விருந்தாக்க முயன்றிருக்கிறார், ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர். அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தின் பின்னணியைப் பார்ப்போம்...
ஈரோடு - பெருந்துறை சாலையில், மகளிர் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. அக்கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரிக்கு வெளியே இருக்கும் ஜெராக்ஸ் கடைக்கு வந்துசெல்லும் போது, ஈரோடு வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான  ராதாகிருஷ்ணன் என்பவருடன் பழக்கமாகியிருக்கிறார். 

ஆரம்பத்தில் நட்பாகப் பேச ஆரம்பித்து கடைசியில், ‘பார்ட்டி தருகிறேன்’ என்று மாணவியை ஏற்காட்டுக்கு அழைத்துச்சென்று அத்துமீறியிருக்கிறார் ராதாகிருஷ்ணன். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு மாணவியை மிரட்டி தன் ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறார். இரண்டு முறை மாணவி கர்ப்பமுற்ற நிலையில், கருவையும் கலைத்திருக்கிறார்.

இந்தக் கொடுமையின் அடுத்த கட்டமாக, தன்னுடைய நண்பர்கள் சிலருக்கும் அந்த மாணவியை விருந்தாக்க முயன்றிருக்கிறார் ராதாகிருஷ்ணன். அந்தப் பெண் மிரண்டுபோய் வீட்டில் விஷயத்தைச் சொல்ல... போலீஸில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது. ராதா கிருஷ்ணன்மீது வழக்குப் பதிந்த போலீஸார் அவரைக் கைது செய்திருக்கின்றனர்.

“கைதுசெய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் ஒரு பெண்ணைக் காதலித்து, 2009-ம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. ஒருகட்டத்தில், மனைவி யுடன் ராதாகிருஷ்ணன் சேர்ந்து வாழமறுக்கவே... அவரது மனைவி தர்ணா போராட்டம் நடத்தியிருக்கிறார். அந்தவகையில், ராதாகிருஷ்ணன்மீது மூன்று வழக்குகள் இருக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண், ‘போலீஸில் புகார் அளிக்கப் போகிறேன்’ என்று சொன்னபோது, ‘உன்னை மாதிரி 100 பொண்ணுங்களை நான் லாட்ஜுக்குக் கூட்டிட்டு வந்திருக்கேன். என்னை எதுவும் செய்ய முடியாது’ என்று மிரட்டியிருக்கிறார்” என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

இதற்கிடையே, நம்மிடம் பேசிய போலீஸார் சிலர், “கல்லூரி மாணவி ஒருவருடன் ராதாகிருஷ்ணன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த அவருடைய மனைவி, அந்த மாணவியின் நம்பரை எடுத்துப் பேசியிருக்கிறார். இருந்தும், அந்த மாணவி அதை ஒருபொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து, விஷயத்தை அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்குக் கொண்டு சென்றிருக் கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, போலீஸில் இதுகுறித்துப் புகார் செய்த பின்பே விவகாரம் வெளியே வந்துள்ளது” என்றனர்.

இதற்கிடையே மே 2-ம் தேதி காலை திருமணமான பெண்மணி ஒருவர் ஈரோடு எஸ்.பியைச் சந்தித்து, ராதாகிருஷ்ணன் மீது மேலும் ஒரு புகாரைக் கொடுத்து பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். அதில், ‘குடிக்கு அடிமையான என்னுடைய கணவருக்கு மது வாங்கிக் கொடுத்து ஒயின்ஷாப்பில் நட்பான ராதாகிருஷ்ணன் என்னை மிரட்டிக் கற்பழித்தார். தொடர்ந்து அவர் கொடுத்த தொல்லையை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். அவரைப் பற்றிய செய்திகள் மீடியாக் களில் வந்ததையடுத்து தைரியமாகப் புகார் கொடுத்தேன்” எனக் கண்ணீரோடு கூறியிருக்கிறார். 

- நவீன் இளங்கோவன்
படம்: ரமேஷ் கந்தசாமி

ஃபாலோ அப்

பாலியல் புகார் சொன்னவர் கைது! - பெரம்பலூரில் தொடரும் சர்ச்சை


பெரம்பலூரில் நடந்த பாலியல் விவகாரத்தைப் பற்றி கடந்த ஜூனியர் விகடன் இதழில், ‘பொள்ளாச்சியைப் பின்தொடரும் பெரம்பலூர் - பாலியல் புகாரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ’ என்கிற தலைப்பில் செய்தியாகப் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன்மீது குற்றம்சாட்டி, ஒரு பெண் பேசிய ஆடியோ உரையாடலை வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரான வழக்கறிஞர் அருளை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். அத்துடன் அவருடைய போனில் வைத்திருந்த வீடியோ, ஆடியோக்களை போலீஸார் அழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலு தலைமையில், சென்னை பிரஸ் கிளப்பில் 28-ம் தேதி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், ‘பெரம்பலூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். இல்லையெனில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்’ என்று தெரிவித்திருந்தனர். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சி.பி.ஐ விசாரணை கோரி முறையிட இருந்தனர். இதற்கிடையே ஏப்ரல் 30-ம் தேதி இரவு குன்னம் பகுதியில் வைத்து வழக்கறிஞர் அருளை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்கறிஞர்கள் காமராசு, ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் கொடுத்த புகாரின்பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, சிறையில் அடைத்தனர். 

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களிடம் பேசினோம். “ஆளுங்கட்சியினர் அழுத்தத்தால் அருளை கைது செய்திருக்கிறது காவல்துறை. அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவர், ‘இந்த விவகாரம் தொடர்பாக யார் புகார் கொடுத்தாலும், செய்தி வெளியிட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பகிரங்கமாக மிரட்டுகிறார். இதற்கு நாங்கள் அஞ்சமாட்டோம். பெரிய அளவில் போராட்டம் நடத்தவிருக்கிறோம்” என்றார்கள்.

- எம்.திலீபன், படம்: என்.ஜி.மணிகண்டன்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment