Wednesday, May 08, 2019

மிஸ்டர் மியாவ்

ந்தமுறை மிஸ்டர் மியாவ் வலம்வந்தது பெங்களூரு சிட்டி. அங்கிருந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் பற்றி அவர் அள்ளிவந்த பர்சனல் விஷயங்கள் இதோ... 

தந்தை ஸ்ரீநாத் முன்னாள் ராணுவ வீரர். இவர் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், அஸ்ஸாம், தெலங்கானா என நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பணிமாறுதலாகி செல்லும்போதெல்லாம் மகளையும் அழைத்துச் சென்றதால், ஷ்ரத்தாவுக்கு பல மொழிகளும் அத்துபடி!

அம்மணிக்குத் தனிப்பட்ட வகையில் வெளியே நண்பர்கள் யாரும் இல்லை. சினிமாவில் மாதவனும் தெலுங்கு நடிகர் நானியும் மட்டுமே நெருங்கிய நண்பர்கள்.
மேடை நாடகத்தின்மீது தீராக் காதல் கொண்டவர் ஷ்ரத்தா. வேலையில் இருந்துகொண்டே மேடை நாடகங்களில் நடித்தவர், மலையாளப் படமான ‘கோஹினூர்’ மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

கன்னட பிளாக்பஸ்டர் படமான ‘யூ-டர்ன்’தான் இவரைப் பிரபல நடிகையாக்கிய திரைப்படம். மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 

ஷ்ரத்தாவை, ‘நடிகை நந்திதா தாஸ் சாயலில் இருக்கிறார்’ என்று பலரும் கூறுவதுண்டு. இப்படி யாரேனும் முகத்துக்கு நேராகக் கூறினால், மேடத்துக்கு வெட்கத்தில் கன்னங்கள் சிவந்துவிடுமாம்!  

தெலுங்கில் இவர் நடித்த முதல் படமான ‘ஜெர்ஸி’ வெற்றியடைந்து, சக்சஸ் ஹீரோயின் என்ற சென்டிமென்ட்டும் தொத்திக்கொள்ள... அடுத்தடுத்து தெலுங்குப் பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன.

  யாராவது பரிசுகள் கொண்டுவந்தால், ‘புத்தகமே போதும்’ என்று புத்தகங்களை பரிசாகப் பெறுவதில் ஆர்வம் காட்டுவார். அந்தளவுக்கு ஷ்ரத்தா புத்தகப் பிரியர்.
ஷ்ரத்தாவுக்குப் பிடித்த விளையாட்டு வீரர் தோனி. ஏன் என்று கேட்டால், ‘தோனியின் நிதானம் ரொம்பப் பிடிக்கும்’ என்பார். 

தென் கிழக்காசிய நாடுகளின் உணவுகளை விரும்பிச் சாப்பிடும் ஷ்ரத்தாவுக்கு, சாட் வகை உணவுகள் மிகவும் பிடித்தமானவை. 

தமிழில் அஜித்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, ‘மிலன் டாக்கிஸ்’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் ஷ்ரத்தா.

அருள்நிதியுடன் ஷ்ரத்தா ஜோடி சேர்ந்த ‘கே-13’ படம் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களிடையே தனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருப்பதில் மேடத்துக்கு செம குஷி!
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அந்த நடிகர் லேட்டாக வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், தன் சகோதரரின் திருமணத்துக்கும் லேட்டாகத்தான் வந்தாராம் அந்த நடிகர். அதிலும் நிகழ்ச்சியில் தலைகாட்டிய உடனேயே, தாய்லாந்துக்குப் பறந்துவிட்டாராம்!

படத்துக்குப் படம் தன்னை உருமாற்றிக் கொள்ளும் நடிகரின் தமிழ், இந்திப் படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழில் அடுத்து எந்தப் படத்தையும் கமிட் செய்யாமல் இருக்கிறாராம்.
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment