Thursday, August 09, 2018

கம்பேரிஸன் கோவாலு!

‘என்ன பிரச்னையாக இருந்தாலும் சரி, அதில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது’ என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி கொடுத்திருக்கிறார். யோசித்துப் பார்த்தால், இந்த அரசு நிறைய விஷயங்களில் கண்ணாடிபோல பளபள வெளிப்படைத்தன்மையுடன்தான் இருந்திருக்கிறது.

* 
‘என்னாது... எதிர் டீமுக்குப் போவியா... விட்டாத்தானே!’ என மொத்தமாக பஸ்ஸில் அடைத்து இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துப்போன தில்லெல்லாம் இந்த அரசுக்கு மட்டுமே உண்டு. ‘நாங்க அப்படித்தான் கூப்பிட்டுப்போவோம், என்னா பண்ணுவீங்க?’ என வெளிப்படையாக டிக்ளேர் செய்ததுதான் பின்னாளில் கர்நாடகாவில் ரோல் மாடலாகப் பார்க்கப்பட்டது.
கம்பேரிஸன் கோவாலு!
 ‘மிஸ்! நீங்க இல்லாதப்போ அவன்தான் ரொம்பப் பேசுனான்’ என போட்டுக்கொடுக்கும் வேலையை எல்லாம் இப்போது வருமானவரித் துறைதான் செய்கிறது. அமைச்சர்கள் வீட்டில், கான்ட்ராக்டர்கள் வீட்டில், நெருக்கமான தொழிலதிபர்கள் வீட்டில் எல்லாம் மானாவாரியாக ரெய்டு நடக்கும்போதும், ‘‘சும்மா பேசிட்டுப்போக வந்திருக்காக...’’ என அரசு வெளிப்படையாக இருப்பதெல்லாம் தெய்வ லெவல்.

 ‘40 கோடி ரூபாய் ஊழல், அதில் அமைச்சர், இரண்டு டி.ஜி.பி-க்கள், உதவி கமிஷனர்கள் என ஏகப்பட்ட பேருக்கு பங்கு உண்டு’ என டைரி போட்டு எழுதிவைக்கும் வெளிப்படையான எண்ணமெல்லாம் இந்த ஆட்சி இருக்கும்போதுதான் ஏற்படுகிறது. இதில் தமிழக அரசு தேமேவென இருப்பதும் வெளிப்படையான தில்லுதானே!

 கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பழங்கால சிலைகளை மீட்டுக்கொண்டுவந்த அதிகாரியே சரியாக செயல்படவில்லையாம். இப்படிச் சொல்லித்தான் சிலைக்கடத்தல் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றத் துடிக்கிறது தமிழக அரசு. ‘நேர்மையா இருந்தா எப்படிப்பா... அப்புறம் நாங்க எப்படி பிழைப்பு நடத்துறது?’ என வெளிப்படையாகக் கேள்வி கேட்கும் தைரியம் இந்த அரசுக்கு மட்டுமே உண்டு உண்டு உண்டு!

 நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள், லட்சக்கணக்கில் தொண்டர்கள் ஆதரவு, ஆட்சியும் கையில்.. ஆனாலும், ‘எங்களுக்குச் சொந்தமா கடை நடத்தத் தெரியாது’ என டெல்லியில் வழிகாட்டி வைத்துக்கொள்ளும் வெளிப்படைத்தன்மை எல்லாம் இதற்குமுன் எந்த அரசுக்கும் சாத்தியப்பட்டதில்லை. இதற்காகவே ஸ்பெஷல் பூச்செண்டுகள்!

ஓவியம்: பிரேம் டாவின்ஸி
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment