Thursday, August 09, 2018

மிஸ்டர் மியாவ்

மிழில் அதிக வாய்ப்பு வராததால் டோலிவுட்டில் பிஸியாக இருக்கிறார் நந்திதா. தனக்கான முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே தேர்ந்தெடுக்கும் இவரது நடிப்பில், அடுத்தடுத்து ஐந்து படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.
மிஸ்டர் மியாவ்

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்திருக்கும் ராஷி கண்ணா, ‘‘தமிழ்ப் படங்கள் என்னை வழக்கமான இயல்பில் இருக்க விடாமல், நிறையக் கற்றுக்கொடுக்கின்றன. அதனால், தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்’’ என்கிறார்.
மிஸ்டர் மியாவ்

‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ‘அட்டக்கத்தி’ தினேஷ், ‘‘நான் ரஜினிக்கோ, கமலுக்கோ ஓட்டு போடமாட்டேன். என் ஆதரவு தினகரனுக்குத்தான். அவரது செயல்பாடுகள்தான் எனக்குப் பிடித்திருக்கின்றன’’ என்று கூறியுள்ளார். இப்படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலகிருஷ்ணா, வித்யா பாலன் நடித்து வரும் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் ராணா டகுபதியும் இணைந்திருக்கிறார். அவருக்கு என்.டி.ஆரின் மருமகன் வேடமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கீலாவின் வாழ்க்கைக் கதையில் நடித்து வருகிறார் ரிச்சா சத்தா. ஷகீலாவைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள அவரின் பூர்வீக வீட்டுக்குச் சென்றார் ரிச்சா. மேலும், அவர் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்த வேண்டுமென்று மலையாளமும் கற்று வருகிறார்.

மிஸ்டர் மியாவ்
ஸ்வர்யா ராய்க்கு படம் இயக்குவதில் ஆசை வந்துள்ளது. ‘‘கணவர் அபிஷேக் பச்சன் இதற்கு முழுச் சுதந்திரமும் ஒத்துழைப்பும் கொடுத்திருக்கிறார்’’ என அவர் கூறியுள்ளார். அனுராக் காஷ்யப் இயக்கத்தில் அபிஷேக் பச்சனுடன் ‘குலாப் ஜாமுன்’ படத்தில் நடித்து முடித்த பிறகு, டைரக்‌ஷனில் முழுக் கவனம் செலுத்த இருக்கிறாராம் ஐஸ்.

மிஸ்டர் மியாவ்
வைரல்

ன்ஸ்டாகிராமில் தன்னை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 14 மில்லியனைத் தொட்டிருப்பதால், மகிழ்ச்சியில் உள்ளார் சன்னி லியோன். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். அதை, சன்னியின் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மிஸ்டர் மியாவ்
ஹாட் டாபிக்

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தைச் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை, தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு, ‘இருவரும் இந்திய இசையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். மனசுக்கு மிகவும் நெருக்கமான தருணமாக இருந்தது’ என நெகிழ்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இருவரும் விரைவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ்டர் மியாவ்
ஹைலைட்

ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில், சமீபத்தில் வைரலான ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் இடம்பெற்றுள்ளது. அதற்கு, ஜோதிகா, லட்சுமி மஞ்சு ஆகியோர் நடனமாடியிருக்கிறார்கள்.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment