Sunday, February 18, 2018

மிஸ்டர் மியாவ்

ஸ்ரேயாவும், ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரும் ரகசியத் திருமணம் செய்துகொண்டதாகக் கடந்த சில நாள்களாகப் பரவிக்கொண்டிருந்த செய்திக்கு, ஸ்ரேயாவின் தாயார் நீரஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘‘ராஜஸ்தானில் ஒரு திருமணத்துக்குச் சென்றார் ஸ்‌ரேயா. அப்போது ஆர்டர் செய்த நகைகள் மற்றும் புடவைகளை வாங்கியபோது எடுத்த புகைப்படங்களை வைத்து வதந்தி பரப்பியிருக்கிறார்கள்’’ என்று தாயார் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
வைரல்
‘ஒரு ஆதார் லவ்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமாகியிருக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியரின் சில க்யூட் ரியாக்‌ஷன்ஸ்தான், இணையத்தைத் திணறடித்த லேட்டஸ்ட் வைரல். சில நிமிட டீஸரில் இடம்பெற்ற ப்ரியாவின் புருவ பாவனைகளைக் ‌‘காதலர் தின’த்தில் தாறுமாறாக ஷேர் செய்து டிரெண்ட் அடித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். அதேசமயம், இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்வரிகள் முஸ்லிம்களை இழிவுபடுத்துவதாக சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன சில அமைப்புகள்.
ஹைலைட்
முதல் படம் ரிலீஸ் ஆகும்முன்பே ‘பிஸி ஹீரோயின்கள்’ லிஸ்ட்டில் இடம்பிடித்துவிட்டார் மேகா ஆகாஷ். ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘ஒரு பக்க கதை’ படங்கள் ரிலீஸுக்கு ரெடி. தவிர, அதர்வா ஜோடியாக ‘பூமராங்’ படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். டோலிவுட்டின் ரைஸிங் ஸ்டார் நிதினின் 25-வது படமாக உருவாகிக்கொண்டிருக்கும் ‘சல் மோகன ரங்கா’ படத்திலும் மேகா ஆகாஷ்தான் நாயகி!
துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகவிருக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார், ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்‌ஷன். இப்படத்தை புதுமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி என்பவர் இயக்குகிறார். தெலுங்கில் வெற்றிபெற்ற ‘பெல்லி சுப்லு’ படத்தில் நடித்த ரிது வர்மா இதில் ஹீரோயின்.
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100% காதல்’ படத்தில் நடித்திருக்கிறார், ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே. காதலர்களுக்குள் இருக்கும் ஈகோவை மையப்படுத்திய கதையாக உருவாகும் இதில், ‘மகாலட்சுமி’ என்ற கேரக்டரில் நடிக்கிறார் ஷாலினி. தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா நடித்த ‘100% லவ்’ படத்தின் ரீமேக் இது. ‘‘தெலுங்கில் தமன்னா நடித்ததைவிட, தமிழில் அருமையாக நடித்திருக்கிறார் ஷாலினி’’ என்பது இயக்குநர் சந்திரமெளலியின் ஸ்டேட்மென்ட். தவிர, சமீபத்தில் நண்பரின் இசைக்குழுவுக்காக ‘பாடகி’யாகவும் புரமோட் ஆகியிருக்கிறார், ஷாலினி.
கேள்வி
காமெடி மட்டும் பண்றவங்களை ‘காமெடியன்கள்’னு சொல்றோம். ஆனா, இப்போ வர்ற பெரும்பாலான படங்கள்ல ஹீரோக்களே காமெடியும் பண்றாங்க. அவங்களை ‘காமெடி ஹீரோ’க்கள்னு சொல்றதா, இல்லை ‘ஹீரோ’ன்னுதான் சொல்லணுமா?
‘மேயாத மான்’ இந்துஜாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு இல்லையென்றாலும், முக்கியமான கேரக்டர்களில் நடிக்கவைக்க ஆர்வம் காட்டுகிறார்கள் இயக்குநர்கள். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘மெர்க்குரி’ மற்றும் அதர்வா - ஷாலினி பாண்டே நடிக்கும் ‘பூமராங்’ படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடிப்பவர், தற்போது ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றிலும் கமிட் ஆகியிருக்கிறார்.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment