Sunday, February 18, 2018

தமிழன்னை சிலை... வெளிவருமா உண்மை நிலை?

‘‘அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைப்போன்று மதுரையில், வைகை ஆற்றின் மையத்தில் தமிழன்னைக்கு ரூ. 100 கோடி செலவில் 177 அடி உயரத்துக்குச் சிலை அமைக்கப்படும்’’ என 
2013-ம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். ‘இந்தச் சிலை எப்போது அமைக்கப்படும்?’ என்று சென்னையைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். ‘பொது இடங்களில் பெரிய அளவில் சிலை வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் வெளியிட்ட ஆணையால், தமிழன்னை சிலை வைக்கும் திட்டம்  தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ எனத் தமிழ் வளர்ச்சித் துறையின் அரசு சார்புச் செயலாளர் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், ‘‘தமிழன்னைக்கு மதுரையில் விரைவில் சிலை அமைக்கப்படும்’’ என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் இப்போது சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, ‘நிறுத்தி வைக்கப்பட்டதாகச் சொல் லப்படும் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அமைச்சர் கூறியது ஏன்’ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், ‘‘அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ‘உலகத் தமிழ்ச் சங்க அருங்காட்சியக வளாகத்துக்குள் 40 கோடி ரூபாய் செலவில் தமிழன்னை சிலை வைக்கப்படும்’ என்று சொல்லியிருக்கிறார். அமைச்சர் ஒருவிதமாகச் சொல்ல, அவரின் துறை அதிகாரிகள் வேறுவிதமாகச் சொல்கிறார்கள். உலக அளவில் மதுரையை ஓர் அடையாளமாக்க எடுக்கப்பட்ட இந்த முயற்சியில், அரசு முனைப்புடன் உள்ளதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார். 

உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்து வதற்குத் திட்டமிட்டு வரும் நிலையில், அந்த நேரத்திலேயே சிறிய அளவில் தமிழன்னை சிலையை அமைத்துவிடலாம் என்று அமைச்சர் பாண்டியராஜன் இந்த அறிவிப்பைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. 
அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘மதுரை உலகத் தமிழ்ச் சங்கத் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகத்தில் தமிழன்னை சிலை நிறுவப்படப்போவது உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழன்னை சிலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதாக வந்த செய்தி இதற்கானது அல்ல. ஏற்கெனவே, 2013-ல் அறிவிக்கப்பட்ட பிரமாண்ட சிலைத்திட்டம்தான் நிறுத்தப்பட்டுள்ளதாகப் பதில் கூறப்பட்டது. அதையும், இப்போது அறிவித்துள்ள தமிழன்னை சிலைத் திட்டத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஜெயலலிதா அறிவித்த திட்டத்தைச் செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. மதுரையில் அதற்குப் பொருத்தமான நீர்நிலைகள் இல்லை. சுற்றுச்சூழல் பிரச்னை உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தைவிட உயரமாக வைத்தால், அதையும் சர்ச்சையாக்குவார்கள். அதனால் தான் அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு, இப்போது அதிக உயரம் இல்லா விட்டாலும் உன்னதமான முறையில் தமிழன்னை சிலை அமைக்கப்படும்’’ என்றார்.

- செ.சல்மான்

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment