Friday, February 09, 2018

மிஸ்டர் மியாவ்

ஹைலைட்
‘பத்மாவத்’ பட சர்ச்சைக்குப் பிறகு, மீண்டும் ஒரு சர்ச்சை பாலிவுட்டில் கிளம்பியிருக்கிறது. சித்தார்த் மல்ஹோத்ரா, மனோஜ் பாஜ்பாய், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘அய்யாரி’, இந்திய ராணுவத்தில் நடக்கும் ஊழல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்புத் துறையின் ஒப்புதல் பெற்றே தணிக்கை செய்யவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட, அதற்காகக் காத்திருக்கிறது படம். ரகுல் ப்ரீத் சிங் நடித்த முதல் பாலிவுட் படம் இது. ஏற்கெனவே ஜனவரி 26 என அறிவிக்கப்பட்ட படத்தின் ரிலீஸ் தேதி, பிப்ரவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

வைரல்

வி
ஜய் டி.வி-யில் வரும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் தீனா. கலாய்த்தலும் கலாய் நிமித்தமுமாக இருக்கும் தீனா, படத்தில் நடிக்கப் போவதாகப் பேசப்பட்டு வந்தது. இப்போது இவர் மலையாளத்தில் ஹிட் அடித்த ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கிறார். ‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’ என்று பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து வருகிறது.
ஹாட் டாபிக்

மா
ர்ச் 1-ம் தேதி முதல் ஸ்டிரைக் நடத்தும் முயற்சியில் இருக்கிறது தமிழ் சினிமா உலகம். பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் நடந்த ஆலோசனையின் இறுதி முடிவு இது. ‘‘டிஜிட்டல் திரையிடல் நிறுவனங்களான யுஎஃப்ஓ, கியூப் போன்றவை படத்தைத் திரையிட அதிகக் கட்டணம் பெறுகின்றன. ஒரு படத்தின் வெளியீட்டை நிறுத்தும் முடிவையும் தன்னிச்சையாக எடுக்கிறார்கள். இதைத் தடுக்கவும், குறிப்பிட்ட சிலரின் கன்ட்ரோலில் இயங்கும் திரையரங்குகளை மீட்டு, தயாரிப்பாளர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுக்கவுமே இந்த முடிவு’’ என்கிறார், தயாரிப்பாளர் ஒருவர். கந்துவட்டி, டிக்கெட் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முடிவுடன் இருக்கிறார்கள், தயாரிப்பாளர் சங்கத்தினர். 

கேள்வி

‘இ
ளைய தளபதி’ விஜய் ‘தளபதி’யாக புரொமோஷன் வாங்கிவிட்டார். அப்போ, அரசியலுக்கு வரத்துடிக்கும் உதயநிதிதான் ‘இளைய தளபதி’யா?

நியூஸ்

 சமீபத்தில், இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி தெலுங்குப் படமான ‘ஹலோ’ மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து, ‘வாரிசு நடிகை’ பட்டியலில் இணைந்திருக்கிறார், ஷிவானி. நடிகர் ராஜசேகர் - நடிகை ஜீவிதாவின் மகளான இவர், விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 

 விஜய் ஆண்டனி இசையமைத்து, கதாநாயகனாக நடிக்கும் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதில் விஜய் ஆண்டனி முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காகவே சிலம்பம் கற்று வருகிறாராம் அவர். இது போக, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், இவர் நடித்துள்ள ‘காளி’ படம் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது.  

 விஜய் சேதுபதி, சிம்பு, ஃபகத் பாசில், அர்விந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் எனப் பலரை வைத்து மணிரத்னம் படம் இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், இப்போது ஃபகத் பாசில் இந்தப் படத்திலிருந்து விலகியிருக்கிறார். கால்ஷீட்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
 ‘நிமிர்’ படத்தில் பார்வதி நாயரின் நடிப்பு நன்றாக இருந்தது என மோகன்லால் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான பார்வதி நாயருக்கு ‘நிமிர்’ நல்ல வரவேற்பைக் கொடுத்ததால், தொடர்ந்து அவருக்குத் தமிழில் வாய்ப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.  

 செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் முதல் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது. ஏற்கெனவே, செல்வா இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி யிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இன்னும் சில மாதங்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். 

 விஜய் தேவரகொண்டா - ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதுகிறார்.
 மலையாளத்தில் ஷாம பிரசாத் இயக்கத்தில் நிவின் பாலி - த்ரிஷா நடித்துள்ள ‘ஹே ஜூட்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மலையாளத்தில் தான் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால் த்ரிஷா மகிழ்ச்சியில் மிதக்கிறார். மூழ்கியுள்ளாராம். இதைத் தொடர்ந்து த்ரிஷாவுக்கு மலையாள வாய்ப்புகள் குவிவதாகப் பேச்சு.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment