Sunday, February 18, 2018

கம்பேரிஸன் கோவாலு!

‘‘காவியை எதிர்த்து அரசியல் செய்தால் ரஜினியோடு சேருவேன்’’ எனச் சொல்லியிருக்கிறார் கமல். இன்னொரு பக்கம், ‘‘அடுத்தத் தேர்தலில் தி.மு.க-வை வெல்ல வைத்தே தீருவேன்’’ எனப் பொங்கியிருக்கிறார் வைகோ. ஹரி படம் போல இருந்த அரசியல் காட்சிகள், சட்டென ‘லாலாலாலா’ என விக்ரமன் மோடுக்கு மாறியிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால்..?

பா.ம.க - ரஜினி

கருணாநிதி, ஜெயலலிதாவுடன் எல்லாம் ஒருகாலத்தில் மோதிக்கொண்டிருந்த சின்னய்யா, ஓவியாவுக்கு விழுந்த ஓட்டுகளுக்காக மல்லுக்கட்டியதெல்லாம் காலத்தின் கோலம். இப்போது, அநேகமாக ப்ரியா வாரியரைப் பார்த்துப் பொறாமைப்படக்கூடும். இப்படி ‘வளரும் கலைஞர்களுடன்’ போராடுவதற்குப் பதில், பழைய பகையை மறந்து ரஜினியுடன் கூட்டுச் சேர்ந்தால், துணை முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆமா, அதுக்கு முதல்ல ரஜினிக்கு முதல்வர் பதவி கிடைக்கணும்ல!
ஜி.கே.வாசன் - காங்கிரஸ்

தேர்தல் காலம் தவிர்த்துப் பிற நாள்களில், ஆளே இல்லாத மலை ரோடு மாதிரிதான் சத்தியமூர்த்தி பவன் காட்சியளிக்கும். அதிலும் வாசன் அண்டு கோ நடையைக் கட்டியபிறகு இன்னமும் மோசம். கட்சிக்காரர்களைவிட, கன்டென்ட்டுக்காக செல்லும் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. மறுபக்கம், அறிக்கைகள் மட்டுமே வாசன் இருப்பை உணர்த்துகின்றன. இருவரும் மீண்டும் ஒன்றிணைந்து சாலைகளைப் போர்க்களமாக்க வேண்டுகிறோம்.

தினகரன் - அ.தி.மு.க

இவர்களை இணையச் சொல்வதற்கு ஒரே காரணம்தான். ‘‘வேணாம் பாஸ், போரடிக்குது!’’ பிரேக்கிங் பிரேக்கிங் என இருக்கும் ஃபர்னிச்சர்களையெல்லாம் உடைத்து எறிந்தாயிற்று. இதற்கு மேல் உடைக்கவேண்டுமென்றால் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். தமிழக மக்களுக்கு நயா பைசா பிரயோஜனம் இல்லாத இந்தச் சண்டையைச் சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வாருங்கள் ஐயா!

சீமான் - பா.ஜ.க

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிட்டத்தட்ட ‘பி.ஜே.பி-யின் பி டீம்’ போலத்தான் செயல்பட்டுக்கொண்டிருந்தார் சீமான். அதன்பின் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்க நினைத்துப் பாதை மாறியவரை, இப்போது மீம்களில்தான் அதிகம் பார்க்க முடிகிறது. ரட்சகன் நாகார்ஜுனாவுக்கே இன்ஸ்பிரேஷனான இவரை இப்படி காணச் சகிக்கவில்லை. எனவே, பழைய ஃபார்முக்கே போயிடுங்க பாஸ்!
ஓவியம்: பிரேம் டாவின்ஸி
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment