Thursday, February 15, 2018

மிஸ்டர் மியாவ்

கேள்வி

‘ப
த்மாவத்’ படத்தைப் போலவே, ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘மணிகர்னிகா’ படத்துக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மாதிரி எதிர்ப்பு தெரிவிக்கிற அமைப்புகள், இயக்கங்கள் யாருமே, ‘எங்கள் வரலாற்றைத் தத்ரூபமாகத் திரையாக்கியிருக் கிறார்கள்’ என எந்தப் படத்துக்கும் விழா கொண்டாடுவதில்லையே... ஏன்?

‘அருவி’ படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார், அப்படத்தின் நாயகி அதிதி பாலன். இந்நிலையில், பிரபுசாலமன் இயக்க இருக்கும் ‘கும்கி -2’ படத்தில் அவரை நடிக்கவைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.
ஹைலைட்

ல நடிகர்களின் கூட்டணியில் மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்துக்கு ‘செக்கச் சிவந்த வானம்’ எனப் பெயரிட்டுள்ளார். சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அர்விந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதே ‘மல்டி ஸ்டார்’ கான்செப்ட்டில் கெளதம் வாசுதேவ் மேனனும் ஒரு படத்தை இயக்குகிறார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இடம்பெற்ற கார்த்திக் கேரக்டரை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இப்படத்தில், நான்கு மொழிகளைச் சேர்ந்த முன்னணி ஹீரோக்கள் நடிக்க இருக்கிறார்கள். படமும் நான்கு மொழிகளில் உருவாகிறது.

‘சவரக்கத்தி’ படத்தில் நடித் திருக்கும் பூர்ணாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ‘சுபத்ரா’ என்ற கேரக்டரில் மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் பூர்ணாவுக்கு, ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘‘டாப் ஹீரோயின் என்ற இடத்தில் இருப்பதைவிட, இதுபோன்ற கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பதில் மன நிறைவு பெறுகிறேன்’’ என்கிறார் பூர்ணா.
பாலிவுட்டில் வெளியாகி, பரவலான கவனத்தைப் பெற்றிருக்கும் ‘பேட்மேன்’ படத்திற்காக, கையில் நாப்கினை வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கும் சேலஞ்சை அறிவித்திருந்தது படக்குழு. இதை ஏற்றுக்கொண்டு சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் நாப்கினுடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிந்திருக்கிறார்கள். ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட டாப் ஹீரோயின்களும் இதில் அடக்கம்.

ஹாட் டாபிக்

‘க
ளவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்தை நஷீர் தயாரிக்க, சற்குணம் இயக்குவதாக அறிவித்திருந்தார்கள். கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர். ‘‘தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி, இந்தத் தலைப்பைப் பதிவு செய்திருப்பது நான்தான். ‘களவாணி-2’ படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கும்’’ என அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் நஷீர். இந்நிலையில், விமல், ஓவியா நடிக்க ‘கே -2’ எனப் பெயரிட்டு படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார் சற்குணம். ஒரே படத்தை இருவர் தொடங்கியிருப்பது கோலிவுட்டின் லேட்டஸ்ட் சர்ச்சை.
வைரல்

ரா
ம்சரண், சமந்தா நடிக்கும் ‘ரங்கஸ்தலம்’ தெலுங்கு படத்தின் டீஸர் வெளியாகியிருக்கிறது. படத்தில், ‘ராமலக்ஷ்மி’ என்ற கேரக்டரில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறார் சமந்தா. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகியிருக்கும் இதன் டீஸரை, வெளியான அன்றே 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். யூ-டியூப் டிரெண்டிங்கில் இது நம்பர் ஒன் இடத்தையும் பெற்றிருக்கிறது.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment