Monday, February 12, 2018

மிஸ்டர் மியாவ்

வைரல்

‘மே
க்ஸிம்’ இதழின் அட்டைப் படத்துக்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் கொடுத்திருக்கும் பிகினி போஸ்தான், சமீபத்திய வைரல். இந்தப் படத்தை  #RakulForMaxim #RakulPreet Singh #HotRightNow எனப் பலவிதமான ஹேஷ்டாக்குகளில் ஷேர் செய்துகொண்டிருக்கிறார்கள்.
கேள்வி

‘சிறுபட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’ என்று கிடைக்கும் மேடைகளில் எல்லாம் பேசுவார்கள், தயாரிப்பாளர்கள். ஆனால், பெரிய படங்களோடு ரிலீஸ் ஆகும் சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காது என்பதுதான், நிதர்சனம். ஸோ, ‘முக்கியத்துவம் கொடுப்போம்னு சொல்றதை நிறுத்திட்டு, அதை நடைமுறைப்படுத்துறீங்களா... ப்ளீஸ்?
றியடி’ படத்தை இயக்கி நடித்த விஜயகுமார், இந்தப் படத்துக்குப் பிறகு புதிய படம் ஒன்றில், ஹீரோவாக கமிட் ஆகியிருக்கிறார். மிஷ்கினின் உதவியாளர் பரத் என்பவர் இயக்கும் இப்படத்துக்கு அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

பிஸி ஹீரோயின்கள் லிஸ்ட்டில், நிவேதா பெத்துராஜும் இடம்பெற்றிருக்கிறார். ஜெயம்ரவியுடன் ‘டிக் டிக் டிக்’, வெங்கட்பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ படங்களைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடிக்கும் ‘திமிரு பிடிச்சவன்’ மற்றும் விஷ்ணுவிஷால் நடிக்க, எழில் இயக்கவிருக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
‘ஏமாலி’ படத்துக்கு எழுந்துள்ள எதிர்மறை விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கும் இயக்குநர் வி.இஸட்.துரை, அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். ஏற்கெனவே சிம்புவை வைத்து, இரண்டு படங்களை எடுக்க இருப்பதாகத் தெரிவித்திருந்த அவர், ‘தொட்டி ஜெயா’ படத்தின் இரண்டாம் பாக வேலைகளை முதலில் தொடங்குகிறார்.
ஹைலைட்
ஜித் - சிவா கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன. அஜித் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத் எனப் பல நடிகைகளின் பரிசீலனைக்குப் பிறகு, நயன்தாரா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அஜித் - நயன்தாரா இணையும் நான்காவது படம் இது. தற்போது, இப்படத்தின் இசையமைப்பாளராக  டி.இமான் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே ஒரு பேட்டியில், ‘‘அஜித் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவரைப் பாட வைப்பேன்’’ எனத் தெரிவித்திருந்தார், இமான். அது, இந்தப் படத்தில் நடக்குமா?
நியூஸ்

‘பத்மாவத்’ படத்துக்குப் பிறகு, ‘மணிகர்னிகா’ என்ற பாலிவுட் படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறாக உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தில், ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடித்துக்கொண்டிருக்கிறார். ‘ராணியின் புகழைச் சீர்க்குலைக்கும் வகையில் இப்படத்தை எடுக்கிறார்கள்’ என்று ‘சர்வ பிராமண மகா சபை’ என்ற அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இறுதிகட்டப் படப்பிடிப்பில் இருக்கும் ‘மணிகர்னிகா’, ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
ஹாட் டாபிக்

‘ல
ட்சுமி’, ‘மா’ ஆகிய இரு குறும்படங்கள் மூலம் இணையத்தை அதிரவைத்த இயக்குநர் சர்ஜுன், நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குகிறார். சத்யராஜ், வரலட்சுமி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்துக்குப் பிறகு, இவர் இயக்கும் இரண்டாவது படம் இது. இப்படம், ஹீரோயினை மையப்படுத்திய ஹாரர் படமாக உருவாகவிருக்கிறது.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment