Friday, February 09, 2018

“தமிழில் மட்டும் தப்புத்தப்பாக கேள்வித்தாள்!”

புறக்கணிக்கப்படும் கேரள தமிழ் இளைஞர்கள்
கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் கேட்கப் படும் கேள்விகளில் தமிழில் மட்டும் பெரும்பாலானவை தவறாக அச்சிடப்பட்டி ருப்பதாகவும், இதனால் தமிழ் இளைஞர்கள் அரசுப் பணிக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகி வருவதாகவும் குற்றம்சாட்டுகிறது, கேரளத் தமிழ்ப் பட்டதாரிகள் அமைப்பு. கேரள அரசின் இச்செயலைக் கண்டித்து இரண்டு முறை போராட்டமும், கட்டப்பனை நகரில் உள்ள கேரள அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகம்முன் மூன்று முறை கண்டனப் பேரணியும் நடத்தியிருக்கிறார்கள் இவர்கள்.
கேரளத் தமிழ்ப் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் விபினைச் சந்தித்தோம். ‘‘கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலமலை, மூணாறு, கட்டப்பனை, பீர்மேடு போன்றவை தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள். தமிழ்ப் பேசும் மக்களை யும், கன்னடம் பேசும் மக்களையும் கேரள அரசு ‘மொழிச் சிறுபான்மையினர்’ என்று வகைப்படுத்தி அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதனால் சில சலு கைகள் உண்டு. கேரள அரசுப்பணியாளர் தேர்வா ணையம் நடத்தும் தேர்வுக்கான வினாத்தாள் தமிழில் கேட்கப்படுவது, அச்சலுகைகளில் ஒன்று. தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் கேரள அரசு வைத் துள்ள பாடத் திட்டத்திலிருந்து தான் பெரும் பாலான கேள்விகள் கேட்கப்படும். இதனால், அரசுப் பணிக்கு அதிகமான கேரளவாழ் தமிழர் கள் செல்ல ஆரம்பித்தனர்.
இது பலரையும் உறுத்தவே, எங்களுக்குப் பிரச்னைகளும் வந்தன. மலை யாளத்தில் தெளிவாகக் கேட்கப்படும் கேள்விகளைத் தமிழில் வேண்டுமென்றே தவறாகக் கேட்பார்கள். முதலில் இரண்டு கேள்விகளில் ஆரம்பித்தது, 2017 ஜூலை 29-ம் தேதி நடந்த தேர்வில் 25 கேள்வி களாக உயர்ந்தது. மூன்று கேள்விகளுக்குத் தவறான பதில் எழுதி னால், ஒரு மதிப் பெண்ணை இழக்க நேரிடும். 25 கேள்வி கள் எனும்போது பலருக்கு வேலையே கனவாகிவிடுகிறது. இங்கிருக்கும் தமிழர் கள் தமிழகத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இல்லை. பாரம்பர்யமாக இங்கே வாழ்பவர்கள். இது எங்கள் மண். நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்’’ என்றார் விபின் கவலையுடன்.
இந்த அமைப்பின் பொருளாளர் சுந்தர், ‘‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்போல ஆண்டுதோறும் தேர்வு எழுதும் முறை இங்கே இல்லை. ஒரு தேர்வு வருகிறது என்றால், அதுதான் ஒரே வாய்ப்பு. அதை நல்லபடியாக எழுதி அதிக மார்க் எடுத்து வெற்றி பெற்று, வேலைக்குக் காத்திருக்க வேண்டும். காலியிடம் ஏற்படும்போது வெற்றி பெற்றவர்களி லிருந்து ஒவ்வொரு வராக வேலைக்கு அமர்த்துவர். தேர்வில் மலையாளத்திலும், கன்னடத்திலும் சரியாக இருக்கும் கேள்விகள், தமிழில் மட்டும் பிழையாக இருக்கும். உதாரணத் துக்கு, `பாக்ஸைட்’ எந்த உலோகத்தின் கூட்டுப்பொருள் என்பது கேள்வி. மலையாளத்தில் அப்படியே இருக்கிறது. ஆனால், தமிழில், `Baited எந்த உலோகத் தின் கூட்டுப்பொருள்?’ என்று கேட்கப் பட்டிருக்கும். எலிக்காய்ச்சல் எதனால் பரவுகிறது என்பது கேள்வி. மலையா ளத்தில் சரியாக இருக்கிறது ஆனால், தமிழில் `Lepta Perosis எந்த தொற்றுநோய் ஆகும்?’ என்று கேட்கப்பட்டிருக்கிறது. இப்படியே 25 கேள்விகள். இது தொடர் பாக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவித்தோம். கேரள அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் எம்.கே.சஹீரி டம் புகார் மனு கொடுத்தோம். எந்தப் பதிலும் இல்லை. உண்ணாவிரதம் இருந்து இறந்தால் தான், எங்களை அரசு நினைத்துப் பார்க்குமோ, என்னவோ’’ என்றார்.
தேர்வாணையத்தின் தலைவர் எம்.கே.சஹீரிடம் போனில் பேசினோம். ‘‘தமிழ் இளைஞர்கள், ‘தவறுதலாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கவேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இது முடிந்த பின்னர்தான் முடிவெடுக்க முடியும்’’ என்றார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தேவிக்குளம் பகுதி ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனிடம் பேசியபோது, ``இந்தப் பிரச்னை பற்றி மாவட்டக் கமிட்டிக் கூட்டத்தில் விவாதித்தோம். தொடர்ந்து, மாநில அளவில் முதல்வர் பினராயி விஜயன் பங்கெடுத்த கூட்டத்திலும் விவாதத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, மொழிச் சிறுபான்மையினர் தொடர்பான பிரச்னைகளை ஆராய்வதற்கான குழுவில் இருக்கும் அதிகாரி கோபாலகிருஷ்ணனின் கவனத்துக்கு   பிரச்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒன்றைச் செல்ல விரும்புகிறேன். மொழிச் சிறுபான்மையினர் நலனில் கேரள அரசு எப்போதும் அக்கறை கொண்டுள்ளது’’ என்றார்.
சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, ‘எப்படியாவது அரசு வேலைக்குச் செல்ல வேண்டும்’ என்ற லட்சியத் துடன், நகரங்களில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கி, வருடக் கணக்கில் படிக்கும் ஆயிரக்கணக் கான தமிழ் இளைஞர்கள் இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நேர்ந்த அநீதிக்கு அரசு பரிகாரம் தேட வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் இனி வரக்கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

- எம்.கணேஷ்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment