Thursday, February 15, 2018

கம்பேரிஸன் கோவாலு!

டந்த ஆண்டு இதேநேரம் ‘தியானச் செம்மல்’ பன்னீருக்காக நாம் எப்படியெல்லாம் கம்பு சுற்றினோம் என்பதை மறக்காமல் நினைவூட்டி அசிங்கப்படுத்துகிறது, ஃபேஸ்புக்கின் ‘ஆன் திஸ் டே’ ஆப்ஷன். பன்னீர் மட்டுமா மாறியிருக்கிறார்? நிறைய பேர் இருக்கிறார்கள் இந்த லிஸ்ட்டில்.
ஜெ.தீபா 

அன்று:
பன்னீர்செல்வம் தலைமையில் உருவான புரட்சிப்படையின் தளபதியாக உருமாறி வாள் சுற்றினார் தீபா. மிட்டாயைப் பார்த்து ஓடிவரும் குழந்தைபோல, கேமராவைப் பார்த்ததும் பாய்ந்துவந்து இவர் கொடுத்த ஸ்டேட்மென்ட்களால் ஜாலியாய் டைம்பாஸானது.

இன்று:
கேமராக்கள் கண்டுகொள்ளாததால் ஃபுல் மேக்கப்பில் வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறார். பொழுதுபோகாத நேரத்தில் கட்சியில் இருப்பவர்களைத் தூக்கிவிட்டு, பின்னர் சேர்த்துக்கொள்ளும் பியூட்டிஃபுல் கேம் வேறு ஆடுகிறார்.

 எடப்பாடி பழனிசாமி 

அன்று:
எடப்பாடி அமைச்சராக இருந்த காலத்தில், அவரை அவரின் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான். பம்மிப் பதுங்கி, பணிந்து உடலை வளைப்பதில் ஓ.பி.எஸ்ஸையே ‘யாரு சாமி இவரு?’ எனப் பார்க்கவைத்த அப்பாவி.

இன்று:
சின்னம்மாவை ஓரங்கட்டி... ஓ.பி.எஸ்ஸோடு மல்லுகட்டி... இப்போது முதல்வராக ஜம்மென அமர்ந்திருக்கிறார். அன்றும் இன்றும் மாறாத ஒரே விஷயம்... மத்தியான வேளையில் வெண்பொங்கல் சாப்பிட்ட மதமதப்பிலேயே இருப்பது போன்ற ரியாக்‌ஷன்தான்.

 செல்லூர் ராஜு 

அன்று:
மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் ‘யார் முன்னாள், யார் இந்நாள்’ என்பது அவருக்கே தெரியாது என்பதால், இப்படி ஒரு கேரக்டர் இருந்ததை யாருமே அறியவில்லை. சுருங்கச் சொன்னால், இவர் மற்றுமொரு அமைச்சர்.

இன்று:
எடப்பாடி அணியின் பிரசார புல்லட் ரயில் இவர்தான். ஓய்வு நேரங்களில் அறிவியல் சாதனைகள் புரிவது, எகிடுதகிடு அறிவிப்புகள் வெளியிடுவது என மொத்த ஃபோகஸ் லைட் வெளிச்சத்தையும் தன்பக்கமே திருப்பி வைத்திருக்கிறார்.
 
ஹெச்.ராஜா 

அன்று:
முன்பொரு காலத்தில் எம்.எல்.ஏ-வாக இருந்த கொஞ்சநஞ்ச பெருமையோடு வலம் வந்தவர். சின்னச் சின்ன பஞ்சாயத்துகளின் வழியே செய்திகளில் அடிபட்டுவந்தார். இவரின் கருத்து ரீச்சான அளவிற்குக்கூட முகம் ரீச்சாகாதது வரலாற்றுச் சோகம்.

இன்று:
ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸின் அடுத்த பாகம் ரிலீஸானாலும் சரி... ஆண்டிபட்டியில் ஆடு முட்டினாலும் சரி... உடனே பரபரவென கருத்துகளைப் பொழிந்துவிடுகிறார். இன்னமும் இவரிடம் வசவு வாங்காதது, நாளை பிறக்கப்போகும் குழந்தைகள் மட்டும்தான் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு.

ஓவியம்: பிரேம் டாவின்ஸி
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment