அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடாக இதுவரை இருந்துவந்த ‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழுக்குப் பதில், இனி ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ இருக்கப்போகிறது. இந்தப் புதிய நாளிதழுக்கான அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு.
‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டாலும், அந்த நாளிதழின் வெளியீட்டாளர் என்ற பொறுப்பு சசிகலாவின் வசமே இருந்தது. நாளிதழின் கட்டுப்பாட்டை சசிகலாவுக்கு நெருக்கமானவர்களே கையில் வைத்திருந்தனர். அதேபோல, ஜெயா டி.வி-யும் சசிகலாவின் உறவினர்கள் பெயர்களில் பதிவுசெய்யப்பட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. சசிகலா சிறைக்குச் சென்றபிறகு, இரண்டையும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் கவனித்துவருகிறார்.

அ.தி.மு.க-விலிருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டபின், அ.தி.மு.க ஆட்சிக்கு எதிரான கருத்துகளைத் தாங்கிவரும் நாளிதழாக ‘நமது எம்.ஜி.ஆர்’ மாறியது. அதேபோல, ஜெயா தொலைக்காட்சியும் அ.தி.மு.க ஆட்சியின் அவலங்களைத் தோலுரித்துக் காட்டும் சேனலாக மாறிவிட்டது. கலைஞர் டி.வி-யும், ஜெயா டி.வி-யும், ஒரேவிதமாக விமர்சனம் செய்யும் ஆட்சியாக எடப்பாடி பழனிசாமியின் அரசு ஆனது.
அ.தி.மு.க-வைக் கைப்பற்றியவர்களுக்கு அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழையும் தொலைக்காட்சியையும் கைப்பற்ற முடியாமல் போன வருத்தம் இருந்தது. அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ அறிக்கைகள், ஆட்சியின் செயல்பாடுகளை வெளிப்படுத்த நாளிதழோ, தொலைக்காட்சியோ இல்லாத குறை அ.தி.மு.க தலைமைக்கு ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘நமது கட்சிக்கு என்று விரைவில் நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்” என்று அறிவித்தார். அதன்பிறகு அதற்கான வேலைகள் வேகமெடுத்தன. ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டபோது, ‘நமது அம்மா’ என்ற பெயரில் நாளிதழ் தொடங்க ஏற்பாடு செய்துவந்தார். அதையொட்டியே, நாளிதழின் பெயர் ‘அம்மா’ என்றே இருக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அ.தி.மு.க பிரமுகரான ஜெய.கோவிந்தன் என்பவர், ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்திவந்ததை அறிந்து, அந்தப் பத்திரிகையை வாங்கும் முடிவுக்கு வந்தது அ.தி.மு.க தலைமை. கோவிந்தனிடம் அமைச்சர் வேலுமணி பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி, பத்திரிகையின் பெயரை வாங்கினார். ஜெய.கோவிந்தனிடம் ‘‘மாதந்தோறும் ஒரு தொகை உங்களுக்கு வழங்கப்படும்” என்ற உறுதிமொழி கொடுத்துவிட்டே பத்திரிகையின் பெயரை வாங்கியுள்ளார்கள்.
ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி அன்றே புதிய நாளிதழ் வெளிவந்துவிடவேண்டும் என்ற பரபரப்பில் பணிகள் நடந்துவருகின்றன. சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் அலுவலகத்துக்கு எதிரே இருக்கும் ஒரு கட்டடத்தில் இந்த அலுவலகம் செயல்பட உள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘‘புதிய நாளிதழை அ.தி.மு.க அறக்கட்டளை மூலமாகவே தொடங்கலாம் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால், அந்த முடிவு இறுதியாகக் கைவிடப்பட்டு ‘டூ லீவ்ஸ் மீடியா’ என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கப் பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மூலம்தான் பத்திரிகையும் தொலைக்காட்சியும் செயல்பட உள்ளன. ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழின் நிறுவனராக ஜெயலலிதா இருந்தார். ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழின் நிறுவனர்களாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர் இருப்பார்கள். ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் ஆசிரியராக இருந்து, தினகரன் தரப்பினால் வெளியேற்றப்பட்ட மருது அழகுராஜ்தான் இந்த நாளிதழின் ஆசிரியராகச் செயல்பட உள்ளார். ஒரே இரவில் ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழிலிருந்து வெளியேற்றப்பட்ட 56 தொழிலாளர்களை இந்த நாளிதழில் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்கள்’’ என்றனர்.

வண்ணப்பக்கங்களுடன் வெளிவர இருக்கும் இந்த நாளிதழை, முதல் மூன்று மாதங்கள் வெளியில் அச்சிட உள்ளார்கள். பிறகு சொந்தமாக அச்சகம் நிறுவும் முடிவில் உள்ளனர். ‘நமது எம்.ஜி.ஆர்.’ சென்னையில் மட்டும் அச்சிடப்பட்டது. ஆனால், இந்த நாளிதழ் சென்னை, கோவை, மதுரை என மூன்று இடங்களில் அச்சிடப்பட்டு வெளியாகப் போகிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு கடலூர் மற்றும் திருச்சியிலும் அச்சாக உள்ளது. ஐம்பது ஆண்டுகளை நெருங்கும் அ.தி.மு.க-வின் வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் வரலாற்றுப் பக்கங்கள், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெய லலிதாவின் முக்கிய அறிக்கைகள் இதில் இடம் பெற உள்ளன.
தொலைக்காட்சிக்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதலில் ‘அம்மா டி.வி’ என்ற பெயரை வைக்க முடிவாகியது. ஆனால், மக்க ளிடம் பெரிதாக அது எடுபடாது என்று பலர் கருத்து தெரிவித்த பிறகு இப்போது தொலைக் காட்சியின் பெயரை ‘நியூஸ் ஜெ’ என முடிவு செய்துள்ளார்கள். தொலைக்காட்சியின் ஆரம்ப கட்டப் பணிகள் ஆழ்வார்ப் பேட்டை பத்திரிகை அலுவல கத்தில் நடைபெற்று வந்தாலும், விரைவில் நுங்கம்பாக்கத்துக்குத் தொலைக்காட்சி அலுவலகம் மாற்றப்பட உள்ளது. தொலைக் காட்சி, அமைச்சர் பாண்டிய ராஜனின் ஆலோசனையில் செயல்பட உள்ளது என்கிறார்கள். முழு நேர செய்தி தொலைக் காட்சியாக இது இருக்கும். தொலைக் காட்சியின் ஆலோசகராக ஜெயா டி.வி-யின் முன்னாள் ஆசிரியர் மதிவாணனை நியமிக்கும் திட்டமும் இருக்கிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள்.
- அ.சையது அபுதாஹிர்
படம்: வீ.சதீஷ்குமார்

No comments:
Post a Comment