Monday, February 12, 2018

கணபதிக்கு துணிச்சலைத் தந்தது யார்?

ஞ்சப் புகாரில் சிக்கிய பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியை சஸ்பெண்டு செய்துள்ளார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். இதற்கிடையில், 2016-ம் ஆண்டு முதல் பேராசிரியர் பணி நியமனம் உள்பட பல விவகாரங்களில் நடந்த மோசடிகள் குறித்தும், லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தூசிதட்டி விசாரித்து வருகின்றனர்.

‘பேராசிரியர் பணி நியமனத்தில் மோசடி நடக்க வாய்ப்புள்ளது’ என்று தகவல்கள் வந்ததால், ‘2016-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடத்தக்கூடாது. மறு உத்தரவு வரும் வரை கூட்டம் நடத்தக் கூடாது’ என்று உயர்கல்வித் துறை உத்தரவு போட்டது. இதனால், 19-ம் தேதி நடக்க இருந்த சிண்டிகேட் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனினும், உயர்கல்வித் துறையின் உத்தரவை மீறி, 22-ம் தேதி சிண்டிகேட் கூட்டத்தை கணபதி நடத்தியுள்ளார். முன்கூட்டியே லஞ்சம் கொடுத்தவர்களை மட்டும் நியமனம் செய்வதற்காகப் பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அடுத்த சில நாள்களிலேயே அவசர, அவசரமாக பணியிடங்கள் நிரப்பப்பட்டன. “உயர்கல்வித் துறையின் உத்தரவு குறித்த தகவல் எனக்குத் தாமதமாகத்தான் வந்தது” என்று கணபதி சமாளிக்கிறார். ஆனால், உத்தரவை மீறி சிண்டிகேட் கூட்டம் நடத்தியதற்கான ஆதாரங்கள் போலீஸாரிடம் உள்ளன.
பல்கலைக்கழக ஊழியர்களிடம் பேசியபோது, ‘‘நியமன விஷயத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களுடன் டீல் போட்டார் கணபதி. இந்தப் பணி நியமனங்களில் யு.சி.ஜி விதிமுறைகள் மீறப்பட்டன. இடஒதுக்கீடும் கடைபிடிக்கப்படவில்லை. சுற்றுச்சூழல் அறிவியல் துறையில், அதே துறையில் படித்தவர்களை நியமிப்பதற்குப் பதிலாக, வேறு துறையில் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தகுதியுள்ள பலரைப் புறக்கணித்துவிட்டு, தொலைதூரக் கல்வியில் படித்தவர்களைப் பணியமர்த்தினர். அப்படி நியமித்த ஒருவரை, சமூகவியல் மற்றும் மக்கள்தொகைப் பிரிவின் துறைத் தலைவராக ஆக்கியுள்ளார் கணபதி. அந்தத் துறையின் தலைவராக இருந்த சுரேஷ்பாபு, இணைப் பேராசிரியராக பணியிறக்கம் செய்யப்பட்டார். 

2016-ம் ஆண்டு உறுப்புக் கல்லூரிகளில் பலர் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தக் கல்லூரிகளில் முதலில் தொகுப்பூதிய முறையில் நியமிக்கப்பட்டு, பின்னர்தான் நிரந்தரப் பணியாளர்  ஆக்கப்படுவார்கள். இந்த வழக்கம் மீறப்பட்டுள்ளது. சுயநிதிக் கல்லூரிகளில் 62 வயது வரைதான் ஒருவர் முதல்வராக இருக்க முடியும் என்ற விதியை மீறி, 65 வயதுவரை பணியாற்றலாம் என்று சிண்டிகேட் கூட்டத்தில் இவர் தீர்மானம் நிறைவேற்றினார். அந்த அளவுக்கு கணபதிக்குத் துணிச்சலைக் கொடுத்தது யார் என்பதை விசாரிக்க வேண்டும்’’ என்றனர். 

பேராசிரியர் பணி நியமனத்தில் நடந்த பணப் பரிமாற்றம் தொடர்பாக மூத்த பேராசிரியர்கள் சிலருக்கு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். 64 வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் திரட்டியுள்ளனர். கணபதி, பிப்ரவரி 1-ம் தேதி ஊட்டி சென்றபோது, சில ஆவணங்களை அங்கு வைத்துவிட்டு வந்துள்ளாராம். கணபதி மீது அடுத்தடுத்து வழக்குகள் பாயும் என்று கூறப்படுகிறது. 

- இரா.குருபிரசாத்
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment