Thursday, February 15, 2018

அரசியல் துணுக்குகள்!

மனசில்லாமல் வைத்த முதல்வர் படம்!

.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்த எபிஸோடில் அவருடைய அணியில் தீவிரமாகச் செயல்பட்டவர் தஞ்சை மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால். இவர் மகன் புவனேஷ் - அபர்ணா திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. திருமணத்துக்கு வந்த பன்னீருக்கு மட்டும் பெரிய அளவில் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். மேடையில் பன்னீர் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி ஆகியோரின் படங்களை மட்டுமே வைத்திருந்தனர். பிறகு யாரோ சொல்லி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை மனசில்லாமல் அவசரக் கோலத்தில் சேர்த்தனர்.

இரவு 7.30 மணிக்கு ஓ.பி.எஸ் வந்தார். வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் பேசவே இல்லை. ஓ.பி.எஸ் கிளம்பிய பிறகு, இரவு 9.40 மணியளவில்தான் வைத்திலிங்கம் அங்கு வந்தார். ஓ.பி.எஸ்ஸுக்குத் தரப்பட்டதுபோல தடபுடல் வரவேற்பு இவருக்கு இல்லை. எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி என்று இவர்கள் இன்னும் தனித்தனி அணிகளாகவே இருக்கிறார்கள் என்பதை இங்கு கண்கூடாகக் காண முடிந்தது.

‘‘பிடிக்கவில்லை என்றால் விட்டு வைத்திருப்பேனா?’’ 

ணல் கொள்ளையர்களுக்கு எதிராக அதிரடி காட்டிய ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் பேபி, திடீரென டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார். 10 மாதங்களுக்கு முன்புதான் பேபி இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார். பல சந்தர்ப்பங்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை விடுவிக்கும்படி அமைச்சர், உயர் அதிகாரிகள் கூறியபோதும், அதையெல்லாம் பேபி கண்டுகொள்ளவில்லை. இதைத் தொடர்ந்தே இந்தத் திடீர் டிரான்ஸ்ஃபர்.புதிய பணியிடம்கூட வழங்காமல், அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தூண்டுதலில்தான் இவரை டிரான்ஸ்ஃபர் செய்ததாக எதிர்க்கட்சியினர் புகார் சொல்கின்றனர். இதுகுறித்து அமைச்சரிடம் பேசினோம். ‘‘இது வழக்கமான டிரான்ஸ்ஃபர்தான். அந்தம்மாமீது எந்த வருத்தமும் இல்லை. முறையற்ற மணல் குவாரிகளை மூட வைத்தார். அவர் இருந்தது எனக்கு நன்மைதான். அவர்மீது எந்தக் குறையும் சொல்ல முடியாது. எனக்குப் பிடிக்கவில்லை என்றால் இவ்வளவு நாள் விட்டு வைத்திருப்பேனா? முதல்வரிடம் கடிதம் கொடுத்து மாற்றியிருப்பேனே! இந்த டிரான்ஸ்ஃபரில் எனக்குத் துளிகூட சம்பந்தம் இல்லை’’ என்று தடாலடியாகப் பதில் சொன்னார்.

ஓ.பி.எஸ் உளவுத்துறை... தங்க தமிழ்ச்செல்வன் உளவுத்துறை! 

தே
னி மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு இடங்களில் கள்ளநோட்டு கும்பலைப் பிடித்து, ஒன்பது பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளது போலீஸ். அவர்களிடமிருந்து 21 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அளவுக்கு 500 மற்றும் 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன. ஒரே மாவட்டத்தில், ஒரு வார இடைவெளியில் இவ்வளவு பெரிய தொகை பிடிபட்டிருப்பது போலீஸார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உளவுத்துறையின் சுணக்கம்தான் இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
என்னதான் ஆச்சு உளவுத்துறைக்கு என விசாரித்தோம். ‘‘தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ் உளவுத்துறை, தங்க தமிழ்ச்செல்வன் உளவுத்துறைனு ரெண்டு டீம் இருக்கு. ஓ.பி.எஸ் ஆதரவாளர்களைத் தங்க தமிழ்ச்செல்வன் உளவுத்துறை கண்காணிக்கும். அதே போல், தங்க தமிழ்ச்செல்வன் உளவுத்துறை, ஓ.பி.எஸ் ஆதரவாளர்களைக் கண்காணிக்கும். இப்படிக் கண்காணித்துத் தகவல் அனுப்புவதுதான் இவர்களின் முழுநேர வேலை. இவர்களுக்கு கள்ளநோட்டுக் கும்பலையும், கஞ்சா வியாபாரிகளையும், மரம் கடத்துபவர்களையும், மணல் கடத்துபவர்களையும் கண்காணிக்க எங்கே நேரம் உள்ளது?’’ என வேதனையோடு சொல்கிறார்கள் போலீஸார்.

சீமானுக்குத் தந்த அரிவாள் பரிசு!

‘‘யா
ரு வெட்டுனாலும் அருவா வெட்டும்’’ என ‘சாமி’ திரைப்படத்தில் விக்ரம் பேசிய பஞ்ச் டயலாக்கையே மிஞ்சும் அளவுக்கு ஆன்மிக பூமியான திருச்செந்தூரில் அதிரடியைக் கிளப்பியுள்ளனர், நாம் தமிழர் கட்சியினர். முருகனுக்கு ஆண்டுதோறும் ‘திருமுருகப் பெருவிழா’ என்ற பெயரில் விழா நடத்தி வருகிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், ‘திருச்செந்தூரில் சீமான் கால் வைத்தால் வெட்டுவோம்’ என்று ‘நான் அவனில்லை’ என்ற பெயரில் செயல்படும் முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடப்பட்டது. இதைக் கண்டுகொள்ளாமல் பிப்ரவரி 11-ம் தேதி திருச்செந்தூரில் விழா நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “திருச்செந்தூர்ல நான் காலை வெச்சா என்னை வெட்டுவேன்னு எவனோ ஒருத்தன் சொல்லியிருக்கான். வேலை வெட்டி இல்லாதவன் செய்யிற வேலைதான் இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம். நீ தூரத்துல இருந்து அரிவாளை வேடிக்கை மட்டும்தான் பார்த்திருப்பே. ஆனா, நாங்க கையோடும் காலோடும் பிறந்த மாதிரி, அருவாளோடவும் வாளோடவும் பிறந்தவங்க. நான் பாளை அருவாளைத் தலையில் வெச்சு தூங்கினவன். யாரு வெட்டுனாலும் அருவா வெட்டும். இந்த விளையாட்டையெல்லாம் வேற எங்கயாச்சும் வெச்சுக்கணும்’’ எனக் கடுமையாக எச்சரித்தார்.

இந்த விழாவில் சீமானுக்கு வேல் கொடுப்பதுதான் வழக்கம். அவருக்கு மிரட்டல் வந்த சூழலில், அதைக் குறிக்கும்விதமாக இந்த முறை அரிவாள் வழங்கப்பட்டது. இந்த அரிவாளைச் சீமானிடம் வழங்குமாறு நடிகர் மன்சூர் அலிகானிடம் சிலர் சொல்ல, அவர் கையெடுத்துக் கும்பிட்டு மறுத்தார். வற்புறுத்தலுக்குப் பின், மற்ற சில நிர்வாகிகளை மேடைக்கு அழைத்து சீமானிடம் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து அரிவாளைக் கொடுத்தார் மன்சூர்.

- இரா.மோகன், இ.கார்த்திகேயன், கே.குணசீலன், எம்.கணேஷ்
படங்கள்: உ.பாண்டி, ஏ.சிதம்பரம்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment