Thursday, February 15, 2018

கழுகார் பதில்கள்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
இந்திரா காந்தி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறாராமே?
இந்திரா காந்தி நிஜத்தில் காட்டிய கம்பீரத்தை நிழலில் யாராலும் கொண்டுவர முடியாது என்பதே நிஜம்!
மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி.

‘ஒரு தேசம், ஒரே தேர்தல்’ சாத்தியமா? இது வேறு ஏதேனும் குறுக்குவழிக்கு வழிவகுக்குமா?


! ஒரே மாதிரியான ரிசல்ட் வரும் என்பதுதான் ஒரே எதிர்பார்ப்பு!

த.சிவாஜி மூக்கையா, தர்க்காஸ்.

அரசியலில் நல்லவர்கள் குறைவாக இருப்பது ஏன்?


உண்மையில் அரசியலில் நல்லவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், அது வெளியில் தெரிவதில்லை. கெட்டவர்கள் குறைவாக இருக்கிறார்கள். அவர்கள் அதிகமாக ஆடுகிறார்கள். அதனால், அது வெளியில் தெரிகிறது.
சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

‘தமிழகத்தில் கட்சி தொடங்கும் நடிகர்களெல்லாம் எம்.ஜி.ஆர் ஆக முடியாது’ என்கிறாரே அமைச்சர் கடம்பூர் ராஜு?


அது உண்மைதான்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
காவிரி பிரச்னையில் ரஜினிகாந்த் இன்னும் மௌனம் சாதித்து வருகிறாரே?


அதில் மட்டும்தானா மௌனம்? நாட்டில் நடக்கும் எந்த விஷயத்துக்கும் அவர் கருத்துச் சொல்வதில்லை. அவருடைய ரஜினி மக்கள் மன்றத்தினரையும் கருத்துச் சொல்லக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறாரே!
ஏ.ஞானசேகரன், மதுரை-9.

? ‘‘50 ஆண்டுகளாக தமிழகம் கெட்டுப்போனதற்கு திராவிடக் கட்சிகள்தான் காரணம்’’ என்று பழிபோடுகிறார்கள். நான் கூறுகிறேன்... கடந்த 68 ஆண்டுகளாக இந்தியா முன்னேறாமல் போனதற்குத் தேசியக் கட்சிகள்தான் காரணம். சரிதானே? 


68 ஆண்டுகள் ஆனபின்னும் காஷ்மீர் பிரச்னை யைத் தீர்க்க முடிந்ததா? நாட்டின் பட்ஜெட்டில் பாதி அளவு ராணுவத்துக்குச் செலவு செய்தும் இன்னமும் சீனாவுக்குப் பயந்துதானே உள்ளோம். பாகிஸ்தான் இன்னும் நம்மைச் சீண்டிக்கொண்டு தானே உள்ளது? சுண்டைக்காய் இலங்கை நம் மீனவர்களைச் சுட்டுக்கொண்டேதான் இருக்கிறது பயமின்றி. தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்னைகளைத் தீர்த்துள்ளார்களா? இவர் களுக்கு மற்ற கட்சிகளைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

திருப்பூர் அர்ஜுனன், அவிநாசி.


அமைச்சர்கள் ஒருசிலர் மீண்டும் தாடி வளர்க்க ஆரம்பித்து விட்டார்களே?


 முதலில் தாடி வளர்த்தது, அம்மா ரிலீஸ் ஆக! அடுத்து தாடி வளர்த்தது, அம்மா குணமாக! இப்போது தாடி வளர்ப்பது, ஆட்சி கவிழாமல் இருக்க! 

மொத்தத்தில், வேண்டுதலில்தான் அமைச்சர் களின் வாழ்க்கை ஓடுகிறது; மக்களின் வாழ்க்கையோ வேதனையில் வாடுகிறது.
ஏ.இந்திரன், திருமுல்லைவாயல்.

மற்றவர்களையெல்லாம் விட்டுவிட்டு ரஜினியையும் கமலையும் சுப்பிரமணியன் சுவாமி அதிகமாகத் தாக்கிக்கொண்டிருக்கிறாரே?


! அவரால் சும்மா இருக்க முடியாது. ஏதாவது ஒரு வட்டம் போட்டுக் கொண்டு, யாரையாவது குறிவைத்துச் சுட்டுக்கொண்டே இருப்பார். இப்போது சு.சு வட்டத்துக்குள் சிக்கியிருக்கிறார்கள் ர., க.!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பி.ஜே.பி தோல்வி அடைந்துள்ளது பற்றி..?


சில வாரங்களுக்கு முன் நடந்த 17 கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சோனியா, ‘‘பி.ஜே.பி ஒன்றும் வீழ்த்தமுடியாத கட்சி அல்ல’’ என்று சொன்னார். அதை காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானில் செய்து காட்டியுள்ளது. அந்த மாநிலத்தில்   பி.ஜே.பி ஆளும்கட்சியாக உள்ளது. ராஜஸ்தானில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கப்போகிறது. இடைத்தேர்தல் வெற்றி காங்கிரஸை உற்சாகமடைய வைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வழக்கம்போல வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அங்கு ஏற்கெனவே ஆட்சி செய்த காங்கிரஸோ, இடதுசாரிகளோ இரண்டாவது இடத்தைக் கூட பெறவில்லை. அந்தக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பி.ஜே.பி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.  

ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் பி.ஜே.பி-க்கும், மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் பாடம் சொல்கின்றன.
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

அரசியலில் ஜெயலலிதாவை சசிகலா பயன்படுத்தியதற்கும், விஜயகாந்தை அவரின் மனைவி பிரேமலதாவும் மைத்துனர் சதீஷும் பயன்படுத்துவதற்கும் என்ன வித்தியாசம்?


 சசிகலா குடும்பத்தினர் அளவுக்கு சாமர்த்தியம் எல்லாம் இவர்களுக்கு இல்லை.

ஓவியம்: பாரதிராஜா

இயக்குநர் மிஷ்கின்
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சொல்லித்தான் அரசியலுக்குள் எல்லோரும் வருகின்றனர். ஆனால், நாட்டில் 90 சதவிகிதமாக இருக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகள் என்ன என்றுகூட இந்த அரசியல்வாதிகள் புரிந்துகொண்டு செயல்படுவதில்லையே?

பதவியும் பணமும் ஒரு மனிதனின் இயல்புத் தன்மையை மாற்றிவிடுகின்றன. அரசியலுக்கு வரும்போது உள்ள நோக்கத்தை, இந்த இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகின்றன. பிறகு, இவை இரண்டையும் காப்பாற்றுவதே அரசியல்வாதிகளின் நோக்கமாகி விடுகிறது. அதன்பிறகு மக்களை மறந்து விடுகிறார்கள். மக்களைப் பற்றிய நினைப்பே தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகத்தான் வருகிறது. தேர்தல் நேரத்திலும் மக்களை நம்பாமல் பணத்தையே நம்புகிறார்கள். மக்களில் பெரும்பாலானவர்கள் பணத்துக்கு மனம் மாறத் தயாராக இருக்கிறார்கள். இந்த பரஸ்பர பலவீனங்கள்தான் நம் நாட்டு அரசியலை, ஆட்சியை, நிர்வாகத்தை இந்த நிலைமைக்குக் கொண்டுபோய் நிறுத்தியுள்ளன. 

மக்கள் தங்களது தேவைகளை, கோரிக்கைகளை, விருப்பங்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தங்களது தொகுதி எம்.எல்.ஏ-க்களிடம் கொடுத்துப் பதில் பெறும் நடைமுறையைச் செயல்படுத்தினால், அரசியல்வாதிகள் நிச்சயம் திருந்துவார்கள்; திருத்த முடியும். தேர்தல் நேரத்தில் ஓட்டுப் போடுவதோடு கடமை முடிந்துவிட்டது என்று மக்கள் நினைத்தால், இந்த நிலைமை மாறவே மாறாது.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:  
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment