Monday, February 12, 2018

கம்பேரிஸன் கோவாலு!

புதிதாக 2,500 தமிழ் வார்த்தைகளை அரசாணையாக வெளியிட உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன். நல்ல விஷயம்தான். அப்படியே, ஏற்கெனவே இருக்கும் சில தமிழ் வார்த்தைகளுக்கு இப்போதுள்ள அர்த்தங்களையும் அப்டேட் செய்துவிட்டால் செம்மொழி செழித்து வளரும். அந்த வார்த்தைகள்...

நிதிநிலை அறிக்கை 

முழுக்க முழுக்க ‘ஹம் ஆப் கே கோன் ஐஸ், வாய்ல வச்சா நைஸ்’ என இந்தியிலேயே பாட்டுப் பாடி பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் அருண் ஜெட்லி. ‘இந்தில பேசுனா மட்டும் எங்களுக்கு உருப்படியா ஏதாவது சொல்லிடுவீங்களாக்கும்’ என நொந்துகொள்கிறார் சாமானியத் தமிழன். எனவே, நிதிநிலை அறிக்கை என்ற வார்த்தைக்கு ‘இந்தியில் ஆத்தப்படும் பேருரை’ என அர்த்தம் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு 

ஆயிரம் உயரங்களைத் தொட்டாலும் பழசை மறக்காத புண்ணியாத்மாக்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் மோடியும் அமித் ஷாவும். ‘பக்கோடா விற்கிறதுகூட வேலைவாய்ப்புதான்’ என செல்லூர் ராஜு ஸ்டைல் ஸ்டேட்மென்ட் விட்டு அசத்துகிறார்கள். எனவே, ‘வேலைவாய்ப்பு’ என்ற வார்த்தைக்கு ‘கடல்லயே இல்லையாம்’ என்ற அர்த்தத்தை அப்டேட் செய்யவும்!
தர்மயுத்தம் 

ஏழரைக் கோடி தமிழர்களையும் இந்த ஒற்றை வார்த்தையைச் சொல்லி ஓராண்டு காலம் வரை ஏமாற்றியது ஒரு கோஷ்டி. இதைக்கேட்டு நாடி நரம்பெல்லாம் நாக்குப்பூச்சி தெறிக்க சவுண்டு விட்டவர்கள், இப்போது ஆள் அட்ரஸே தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள். எனவே, இந்த வார்த்தைக்குச் சரியான தமிழ் அர்த்தமாக ‘பிம்பிலிக்கா பிலாக்கி’ என்பதை அப்டேட் செய்ய வேண்டுகிறோம்.

வந்தேறி 

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் காணாமல்போன நியாண்டர்தால் மனிதன் தொடங்கி, பல் கூட முளைக்காத குழந்தை வரைக்கும் எல்லாரையும் இந்தப் பெயர் சொல்லி திட்டுகிறார்கள் சிலர். ஒருகட்டத்தில் திட்ட ஆளில்லாமல், கண்ணாடி பார்த்தே சொல்லிக்கொள்வார்கள் போல. எனவே இந்த வார்த்தைக்கு, ‘வேறு பொழப்பில்லாமல் பேசுவது’ என்ற அர்த்தத்தை அப்டேட் செய்ய வேண்டுகிறோம்.

ஆன்மா 

கடந்த ஓராண்டில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள், அம்மாவும் ஆன்மாவும்தான். கேட்க ரைமிங்காக இருக்கிறது என்பதற்காகப் பேசும்போதெல்லாம் ‘அம்மாவின் ஆன்மா’ என மனசாட்சி இல்லாமல் சொன்னவர்களை நிஜ ஆன்மா மன்னிக்க வாய்ப்பே இல்லை. இப்படி சகட்டுமேனிக்கு பயன்படுத்தப்பட்டதால் அந்த வார்த்தைக்கு ‘சும்மானாச்சிக்கி’ என்ற அர்த்தத்தை அப்டேட் செய்ய வேண்டுகிறோம்.
ஓவியம்: பிரேம் டாவின்ஸி
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment