Friday, February 09, 2018

கம்பேரிஸன் கோவாலு!

‘திடுக் திடுக்’ அறிவிப்புகளை வெளியிடுவதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. சமீபத்தில் செய்தியாளர்களிடம், ‘‘அ.தி.மு.க உறுப்பினர் அட்டை இருந்தால்தான், அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியும்’’ என்ற அடடே அறிவிப்பை வெளியிட்டார். எதிர்ப்பு வலுத்ததும், ‘‘என் வாயா அப்படிப் பேசுச்சு? நோ... நெவர்’’ எனப் பம்மியிருக்கிறார். இப்படித்தான், மத்திய அரசும் ஆதாரைக் கட்டாயப்படுத்தி நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு அட்டைகளுக்கும் என்ன வித்தியாசம்?
ஆதார் 
இதில் உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் இருக்கும். போக உங்கள் கைரேகை, கருவிழிப் பதிவு போன்ற அட்வான்ஸ்டு அயிட்டங்களும் இடம்பெற்றிருக்கும்.

அ.தி.மு.க அட்டை
இதில் பெயர், ஊர் போன்ற உங்களின் அடிப்படைத் தகவல்கள் மட்டுமே இருக்கும். நீங்கள் இப்போது அ.தி.மு.க-வின் எந்த அணியில் இருக்கிறீர்கள், எந்த அணித்தலைவர் சொல்லி நீங்கள் இந்த அணியில் ஸ்லீப்பர்செல்லாக இருக்கிறீர்கள் போன்ற அட்வான்ஸ்டு தகவல்கள் இருக்காது.

ஆதார் 
மிட்நைட்டில் கறுப்புப் பணத்தை ஒழிப்பது எப்படி, புரியாத மொழியில் பட்ஜெட் தாக்கல் செய்வது எப்படி... போன்ற அரிய அறிவியல் திட்டங்களைச் செயல்படுத்தும் விஞ்ஞானி மோடிதான், இந்த அட்டையின் பிராண்ட் அம்பாசிடர்.

அ.தி.மு.க அட்டை
தெர்மகோலால் தண்ணீரைக் காப்பது எப்படி, வாயைவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்வது எப்படி... போன்ற அறிவியல் திட்டங்களைக் கொண்டுவந்த சயின்டிஸ்ட் செல்லூர் ராஜுதான், இந்தத் திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடர்.

ஆதார் 
நீங்கள் விரும்பினால் மற்றவர்களின் ஆதார் அட்டைகளில் இருக்கும் அவர்களின் ரகசியத் தகவல்களைச் சுலபமாகக் காசு கொடுத்து வாங்கலாம்.

அ.தி.மு.க அட்டை
அரசு மானியம், இருபது ரூபாய் டோக்கன் போன்றவற்றைக் கொடுத்து உங்களையே விலைக்கு வாங்கித்தான் இந்த அட்டையைத் தயாரிப்பார்கள்.

ஆதார் 
‘அரசின் திட்டங்களுக்கு ஆதார் தேவையே இல்லை’ என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அ.தி.மு.க அட்டை
அ.தி.மு.க-வே தேவையில்லை என ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பொதுமக்கள் உரக்கச் சொல்லிவிட்டார்கள்.

ஆதார் 
இதன் அதிகபட்ச பலனே, ஒரு அடையாள அட்டையாக நடுஇரவில் வரும் போலீஸ் பேட்ரோலிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதுதான்.

அ.தி.மு.க அட்டை
அதி.மு.க-வே வேண்டாம் என்றான பிறகு அட்டைக்கு மட்டும் என்ன பயன் இருக்கப்போகிறது? ஆனால், சிலரை ஐ.டி ரெய்டுகளிலிருந்து காப்பாற்றும் ஒரே முக்கிய ஆவணம், இந்த அ.தி.முக உறுப்பினர் அட்டைதான்.

ஓவியம்: பிரேம் டாவின்ஸி
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment