Monday, February 12, 2018

தா.பாண்டியன் பொன்மொழிகள்

‘‘கோவைக்குச் சென்று குப்பை பெருக்கும் கவர்னர், அம்பத்தூரிலும் பெருக்கினால் நன்றாக இருக்கும்.’’

‘‘ஏகாதிபத்தியம், கார்ப்பரேட் நிறுவனங்கள், வகுப்புவாதம் இவை அத்தனையும் ஒரே பேயாக உருவெடுத்து வந்திருப்பதுதான் பி.ஜே.பி!’’

‘‘தமிழ்நாட்டுக் குளத்தில் தாமரை பூக்கும் என்று கண் இருப்பவன் எவனாவது சொல்வானா?’’

‘‘நெற்றிக்கண்ணைத் திறந்தால் பொசுக்கிவிடும் சிவன் சிலையையே கடத்திக்கொண்டுபோய் ஆஸ்திரேலியாவில் விற்றுவிடுகிறான்.’’ 

‘‘மத்திய அரசே! வாகனங்களுக்குப் பதிலாக மந்திரிகளுக்கெல்லாம் மயில் பிடித்துக் கொடு; மற்றவனுக்கெல்லாம் மாடு பிடித்துக் கொடு, எருமை பிடித்துக்கொடு... எங்களைத் தயவுசெய்து விட்டுவிடு!’’

‘‘தமிழிசை என்ற நல்ல பெயருக்கும், அவரது பேச்சு மற்றும் நடைமுறைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.’’

‘‘இந்திய ராணுவத்துக்கு இனிமேல், அர்ஜுனன் பயன்படுத்திய வில் தரப்படும், பீமன் பயன்படுத்திய கதாயுதம் வழங்கப்படும் என்று பி.ஜே.பி-யினர் சொன்னாலும் சொல்வார்கள்.’’
‘‘எங்களால் ‘நாக்கை அறு, கழுத்தை அறு’ என்றெல்லாம் பேச மட்டுமல்ல... செய்யவும் முடியும். ஆனால், கூடாது என்றுதான் இருக்கிறோமே தவிர, முடியாததால் அல்ல.’’

‘‘பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகவேண்டுமென்றால், அறிவும் பட்டமும் மட்டும் போதாது; பெட்டியும் பணமும் வேண்டும்.’’

‘‘பல தேர்தல்களில் நான் தோல்வியைச் சந்தித்திருக்கிறேன்; நான் வெற்றிபெற்றது மட்டும்தான் ஆச்சர்யம்.’’ 

‘‘திருப்பதி வெங்கடாஜலபதி தமிழக முதல்வருக்கு நாமம் போட்டாரா அல்லது வெங்கடாஜலபதிக்கு முதல்வர் நாமம் போட்டாரா என்று தெரியவில்லை.’’

‘‘ரஜினி, ஒரே அடியில் 20 பேரை வீழ்த்திவிடுகிறார்; அவரை இந்திய எல்லைக்கு அனுப்பவேண்டும்.’’

‘‘வீட்டிலே சாப்பிடுகிறவன் ஜி.எஸ்.டி கட்டிவிட்டுச் சாப்பிடுகிறான்; ஹோட்டலில் சாப்பிடுகிறவன் சாப்பிட்டுவிட்டுக் கட்டுகிறான்.’’

- த.கதிரவன்  ஓவியம்: நெடுமாறன்
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment