Tuesday, October 10, 2017

தூய்மைப் பணியில் அற்புதப் புதையல்!

“எங்க கல்லூரி தூய்மைப்பணியில் ஈடுபட்டபோது, மண்பானைபோல ஒரு பொருள் கிடைச்சது. பிறகு அது முதுமக்கள் தாழிதான்னு உறுதியாச்சு” என உற்சாகத்துடன் பேசினார்கள், திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை மாணவர்கள்.
இதே கல்லூரியில் 1978-ல் இதேபோல முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது. இப்போது, மீண்டும் ஒன்று கிடைத்திருக்கிறது. இதுபற்றிக் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத் தொல்லியல்துறை காப்பாட்சியர் உமாசங்கரிடம் பேசினோம்.
“ஒருவர் இறந்த பிறகு, அவரது உடல் அல்லது எலும்புகளை ஒரு தாழியில் வைத்துப் புதைத்துவிடுவதை ஈமத்தாழி, முதுமக்கள் தாழி என்று குறிப்பிடுவோம். இது,  தாயின் கருப்பைபோல ஒரு நீள்வட்ட வடிவம்கொண்ட பானையாக இருக்கும். இவ்வாறு கிடைக்கும் ஈமத்தாழிகளில் சிலவற்றை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டு, மற்றதை அருங்காட்சியகத்துக்கு வழங்கிவிடுவோம். தற்போது கண்டெடுக்கப்பட்டது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஈமத்தாழி என்று உறுதியாகியுள்ளது. பூண்டி, அச்சரப்பாக்கம் சுற்றுவட்டாரங்களில் பல ஈமத்தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் அந்தப் பானைகளில் உள்ள கலை வேலைப்பாடுகளை வைத்து ஆய்வு மேற்கொள்வோம்.  

தங்கத்துடன் ஈமத்தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன என்றால், அப்போதே தமிழர்கள்  பொருளாதாரத்திலும் அரசியலிலும் சிறப்பாக இருந்தனர் என்பதனை இதன்மூலம் அறிய முடிகின்றது. ஈமத்தாழிகள்மூலம் தமிழர்களின் வாழ்வியல் முறை, நெறிகள் குறித்து அறியலாம். மண்ணுக்குக்கீழே கிடைக்கும் பொருள்களை அரசிடம் ஒப்படைத்தால், அதன்பிறகு தமது நிலத்தைத் தொல்லியல்துறை ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளுமோ என்று அச்சப்பட்டு, பொதுமக்கள் தகவல்களைத் தெரிவிப்பதில்லை. மக்களின் நிலங்களை அவசியமில்லாமல் தொல்லியல்துறை எடுத்துக்கொள்ளாது. அரசிடம் ஒப்படைக்கும் பொருள்களுக்கு அவற்றின் இன்றைய மதிப்புக்கேற்ப சன்மானமும் கொடுக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற பொருள் எங்கு தென்பட்டாலும், தகவலை உடனே கொடுத்தால் நம் தொன்மைகளை உலகறியச் செய்யலாம்” என்றார். 

பழமை அறியாமல் புதுமையைப் படைக்க இயலாது. முதுமக்கள் தாழிகள் ஒவ்வொன்றும்  தமிழர்களின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கான அற்புதப் புதையல்கள்.

- சே.த.இளங்கோவன்
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment