Monday, August 21, 2017

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

விக்ரம் நடிக்கும் ‘சாமி 2’ பட ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்குகிறது. திருநெல்வேலியில் ஆரம்பிக்கும் படப்பிடிப்பு, டெல்லி தாண்டி நேபாளம் வரை போகிறது. கதைக்களம் அங்குவரை நீள்கிறதாம். விக்ரமின் மனைவியாக த்ரிஷா நடித்தாலும் மெயின் ரோல் கீர்த்தி சுரேஷுக்குத்தானாம்.

`படத்தில் மட்டுமே நடிப்பேன். படம் தொடர்பான புரொமோஷன்களில் பங்கேற்க மாட்டேன்...’ இதுவே படத்தில் கமிட்டாகும்போது நயன்தாரா போடும் முதல் கண்டிஷன். ஆனால், தன்னுடைய ‘அறம்’ படத்துக்காகப் பட விழாக்களில் கலந்துகொள்ள ரெடியாகிவிட்டார். காரணம், இந்தப் படத்துக்காக இவரும் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார் என்பதே.  

`இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ இரண்டாம் பாகத்துக்கான முதல்கட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டார் இயக்குநர் சிம்புதேவன். ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருப்பதால், உடல் எடையைக் குறைக்கும் பயிற்சியில் இருக்கிறார் வடிவேலு.

மிஸ்டர் மியாவ்

‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளிருந்து ஓவியா வெளியே வந்தது முதல் நிகழ்ச்சி செம டல். ஓவியாவை மீண்டும் `பிக் பாஸ்’ வீட்டுக்குள் இழுக்க, பேச்சுவார்த்தை நடக்கிறது. முதலில் கொடுத்த சம்பளத்தைவிட இரு மடங்கு பேசியும் ஓவியா எந்தப் பதிலும் சொல்லாமல் சுற்றிவருவதால், செய்வதறியாமல் திணறுகிறது டி.வி நிறுவனம். 

பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ இந்தி உள்பட நான்கு மொழிகளில் உருவாவதால், நாயகியாக நடிக்க பிரபலமான முகமாகத் தேடியது படக்குழு. காத்ரீனா கைஃபிடம் முதலில் பேசப்பட்டது. அடுத்ததாக அனுஷ்கா பெயரைப் பரிசீலித்தார்கள். இறுதியில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரதா கபூர் கமிட்டாகியிருக்கிறார்.

மியாவ் பதில்

விவசாயிகள்மீது அதிக அக்கறை கொள்கிறாரே தனுஷ்? 

கிராமப்புறப் பின்னணியிலிருந்து வந்த தனுஷ், விவசாயிகளை அதிகம் மதிக்கக்கூடியவர். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம், எப்போதுமே அவருக்கு உண்டு. அதனாலேயே, வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட 125 தமிழக விவசாயிகளின் குடும்பத்துக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்தார். இந்த நிதி உதவி தற்காலிகமாகவே உதவும் என்பதையும் அவர் புரிந்து வைத்திருக்கிறார். விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையிலும், நிரந்தரமாக உதவுகிற வகையிலும் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறார். அதற்காக இயக்குநர்கள், சமூக ஆர்வலர்கள், மூத்த விவசாயிகள் என அனைவரிடமும் பேசி வருகிறார். விவசாயிகளுக்கு தனுஷால் சீக்கிரமே நல்லது நடக்கும்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment