Tuesday, August 15, 2017

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

சாய்பல்லவி நடித்த ‘பிரேமம்’, மலையாள சினிமாவின் வசூலில் டாப் 5 பட்டியலில் இருக்கிறது. அதுபோல தெலுங்கில் அவர் நடித்த ‘ஃபிடா’, 60 கோடி ரூபாயைத் தாண்டி வசூலை அள்ளியது. இப்போது தமிழில் அறிமுகமாகும் ‘கரு’ ஹிட்டானால், சாய்பல்லவி கோலிவுட்டின் லக்கி கேர்ள் ஆகிவிடலாம். ராசியான மலர் டீச்சர்!

விஜய் இயக்கத்தில் `வனமகன்’ படத்தில் அறிமுகமானவர் சாயிஷா. இப்போது தமிழ்ப்பட வாய்ப்புகள் இவருக்கு அடுத்தடுத்து குவிகின்றன. அதற்கு நன்றிக்கடனாக, ரக்‌ஷா பந்தன் தினத்தில் விஜய்யைச் சந்தித்து ராக்கி கட்டிவிட்டுக் கொண்டாடியிருக்கிறார் சாயிஷா. அன்புச் சகோதரி!

மிஸ்டர் மியாவ்

தமிழில் வாய்ப்புகள் இல்லாததால், மும்பையில் செட்டிலானார் ராய்லட்சுமி. பாலிவுட்டிலும் வாய்ப்புகள் இல்லாமல் போக, பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை நெட்டில் தட்டிவிட்டு ரசிகர்களை டர்ரியலாக்குகிறார் ராய்லட்சுமி. வாய்ப்புத் தூண்டில் போடும் டெக்னிக்கோ?

மிஸ்டர் மியாவ்

இப்போது, அப்போது என்கிறார்கள். ஆனால், செல்வராகவன் படம் ரிலீஸ் ஆகவில்லையே? 

கடைசியாக ரிலீஸான செல்வராகவன் படம், `இரண்டாம் உலகம்’. இப்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட வேலைகள் முடிந்து ரிலீஸுக்குத் தயார். ஆனால், ரிலீஸ் பண்ண ஆள் இல்லை என்பதே உண்மை. இந்தப் படத்தை வெளியிடும் நிறுவனத்துக்கு முந்தைய படங்களினால் ஏற்பட்ட இழப்பும், செல்வாவின் முந்தைய படத் தோல்வியும், இந்தப் படத்தில் மீது வேதாளமாக ஏறிவிட்டன. ஆனால், சந்தானத்தை வைத்து ‘மன்னவன் வந்தானடி’, அதன் பிறகு சூர்யா நடிக்கும் படம் என செல்வா பிஸியாகத்தான் இருக்கிறார்.

News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment