Monday, August 21, 2017
அறிவிக்கும் அதிகாரம் எடப்பாடிக்கு இல்லை! - தீபா; என்னிடம் முன்கூட்டியே சொல்லவில்லை! - தீபக்
Monday, August 21, 2017அ.தி.மு.க-வின் தலைமைக் கழகம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கிறது. பெயருக்குத்தான் அது தலைமைக் கழகம். ஒருபோதும், அ.தி.மு.க-வின் அரசியல் அங்கு தீர்மானிக்கப்பட்டதே கிடையாது.
எம்.ஜி.ஆர் இருந்தவரை ராமாவரம் தோட்டத்தை மையமாக வைத்தே, அ.தி.மு.க இயங்கியது. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குக் கட்சி வந்ததும், அவர் வசித்த போயஸ் கார்டன் வேதா நிலையம்தான் அ.தி.மு.க-வின் அதிகார மையமாக செயல்பட்டது. அந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டன் முதல், அமைச்சர்கள் வரை போயஸ் கார்டனைத்தான் தங்களின் வழிபாட்டுத் தலமாக வணங்கினர். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மிகக் குறுகிய காலம் சசிகலாவால் நடத்தப்பட்ட அ.தி.மு.க அரசியலும் அந்த கார்டனில்தான் நடந்தது. அங்கே வைத்துத்தான் அது முடிவுக்கும் வந்தது. இப்படி அ.தி.மு.க-வின் உயிர்நாடியாகத் திகழ்ந்த போயஸ் கார்டன் இல்லம், ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால், இதற்கு ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்களே எதிர்ப்பு தெரிவிப்பதுதான் திருப்பம்.
போயஸ் கார்டன் யாருக்குச் சொந்தம் என்பதில், ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக் - தீபா மற்றும் சசிகலா குடும்பத்துக்கு இடையில் மறைமுக மோதல் தொடர்ந்தது. கடந்த ஜூன் 11-ம் தேதி, தீபா-தீபக்-சசிகலாவின் பாதுகாவலர்களுக்கு இடையே அந்த வீட்டின் முன் நடைபெற்ற அசிங்கமான மோதல், அதை அம்பலப்படுத்தியது. சட்டப்படி, ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகளான தீபா மற்றும் தீபக்குக்கு போயஸ் கார்டன் சொந்தமாக இருந்தாலும், அதன் கட்டுப்பாடு சசிகலாவின் கைவசம்தான் இருக்கிறது.
முதல்வரின் அறிவிப்பு வெளியானதுமே, தீபக்கிடம் நாம் பேசினோம். “இந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்படுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பது முன்பே எனக்குத் தெரியவந்தது. அதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு நாள் முன்பே, முதலமைச்சர், சென்னை கலெக்டர், சம்பந்தப்பட்ட பகுதியின் தாசில்தார் ஆகியோருக்குத் தனித் தனியாகக் கடிதம் எழுதினேன். அதில், ‘போயஸ் கார்டன், வேதா நிலையம் தனியார் சொத்து. எங்கள் அத்தையின் சொத்தான அந்த வீட்டுக்கு, எங்கள் பாட்டி எழுதி வைத்திருக்கும் உயில்படியும், இந்து வாரிசுரிமைச் சட்டப்படியும் நாங்கள்தான் உரிமையாளர் ஆகிறோம். அத்தையின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதில் எங்களுக்கும் விருப்பம் இருந்தாலும், அதில் சட்ட நடைமுறைகளை அரசாங்கம் சரியாகப் பின்பற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டேன். அந்தக் கடிதத்தை அனுப்பிய மறுநாள், முதல்வர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். முன்கூட்டியே எங்களிடம் இது தொடர்பாக அவர் சொல்லி இருக்கலாம். அப்படிச் செய்யாதது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம்தான்” என்றார் தீபக்.
இதைத் தொடர்ந்து தீபாவிடம் பேசினோம். ‘‘போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக அறிவிக்கும் உரிமை எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அது, சட்டப்படி ஜெயலலிதாவின் ரத்த உறவுகளான எனக்கும் தீபக்குக்கும் சொந்தமானது. போயஸ் கார்டன் வீடு மட்டுமில்லை... ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் அ.தி.மு.க தலைமை அலுவலகமும் எங்களுக்குத்தான் சொந்தம். முறையாக எங்களிடம் எந்த அனுமதியையும் அரசு சார்பில் யாரும் வாங்கவில்லை. அதனால், நாங்கள் நீதிமன்றத்துக்குப் போய் அரசின் அறிவிப்புக்குத் தடை உத்தரவு வாங்குவோம்” என்றார்.
இதுபற்றி அரசுத் தரப்பில் பேசினோம். “தலைவர்கள் வாழ்ந்த வீடுகளை, நினைவு இல்லமாக மாற்ற அரசுக்குச் சட்டப்படி உரிமை உண்டு. யாரேனும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், அதை சட்டப்படி சந்திப்போம். அரசு மதிப்பீட்டில், அந்த வீட்டுக்கு எவ்வளவு இழப்பீடு என்பதைக் கணக்கிட்டு அதையும் நீதிமன்றத்திலேயே கட்டிவிடுவோம். நீதிமன்றம் உண்மையான வாரிசுகள் யார் என்பதைத் தீர்மானித்து, அவர்களிடம் அந்தத் தொகையை ஒப்படைக்கும்” என்றனர்.
‘நினைவு இல்லமாக மாற்றும் இந்த அறிவிப்பு, ஜெயலலிதாவின் மீதான மதிப்பு காரணமாக வெளியானது அல்ல; அது சசிகலா குடும்பத்தின் மீதான வெறுப்பில் செய்யப்பட்டது’ என்கின்றனர் சசிகலா தரப்பில். இந்த அறிவிப்பின் மூலம், சசிகலாவுக்கும் போயஸ் வீட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை எடப்பாடி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 18-ம் தேதி சசிகலாவின் பிறந்த நாள். சசிகலாவால் முதல்வராக முன்மொழியப்பட்டு, சசிகலாவை வணங்கி அந்தப் பொறுப்பை ஏற்ற முதல்வர் எடப்பாடி, சசிகலாவுக்கு வழங்கிய பிறந்தநாள் பரிசுதான் இந்த அறிவிப்பு.
By:
News2
News2
This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.
you may also like
Subscribe to:
Post Comments (Atom)
- Junior-Vikatan (37)

social counter
[socialcounter]
[facebook][#][215K]
[twitter][#][115K]
[youtube][#][215,635]
[dribbble][#][14K]
[linkedin][#][556]
[google-plus][#][200K]
[instagram][#][152,500]
[rss][#][5124]

No comments:
Post a comment