Wednesday, August 30, 2017

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரும் மேடைப்பேச்சில் கலக்குகிறார்களே?

அரசியலுக்கு முதலீடே நாக்கு தானே! அதில் மூவரும் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் தினகரன், கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் சொந்த விமர்சனங்களாக வைக்கிறார். எடப்பாடி எழுதிக்கொடுத்ததை வாசிக்கிறார். அவருக்குக் குட்டிக் கதைகள் கைகொடுக்கின்றன. இதை விடப் பிரமாதமான பேச்சை எல்லாம் கேட்டுள்ளோமே? எவ்வளவுக் காலம் ஓடுகிறது என்று பார்ப்போம்!

‘மு.க.ஸ்டாலினைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றி கமல் பேசலாமா?’ என்று கேட்கிறாரே சீமான்?

2ஜி வழக்கின் தீர்ப்பு வரும் வரை பேசட்டுமே!

மு.க.அழகிரியின் இன்றைய அரசியல் நிலைப்பாடு என்ன?

‘சும்மா இருப்பதே சுகம்’ என்று முடிவெடுத்துவிட்டார் அஞ்சா நெஞ்சன். சில நாள்களுக்கு முன் நாகப்பட்டினத்துக்கு வந்த அழகிரி, ‘கலைஞருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு தமிழக அரசியல் முடிந்துவிட்டது’ என்று சொன்னார். அதாவது, ‘தன்னுடைய அரசியல் அத்தோடு முடிந்துவிட்டது’ என்று அவர் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

மேலூர் பொதுக்கூட்டத்தில் காவித் துணி சுற்றிய கூண்டில் இருந்து இரண்டு புறாக்களை தினகரன் பறக்கவிட்டாரே... என்ன சொல்ல வருகிறார்கள்?

ஒரு புறாவின் காலில் ஓ.பி.எஸ். என்றும் இன்னொரு புறாவின் காலில் இ.பி.எஸ். என்றும் எழுதப்பட்டு இருந்ததாக இந்த கூண்டைக் கொண்டுவந்த இனியன் ஜான் சொல்கிறார். ‘பன்னீரும் எடப்பாடியும் பி.ஜே.பி-யின் கூண்டில் இருக்கிறார்கள், அவர்களை விடுவிக்க வேண்டும்’ என்பதை சிம்பாலிக்காகச் சொன்னார்களாம்.

கருணாநிதி நலமாக இருந்திருந்தால் இன்றைய அரசியல் சூழ்நிலையை எப்படிப் பயன்படுத்தி இருப்பார்?

திக்குத்தெரியாத காட்டில் தினகரன் திணறுகிறார், பன்னீரின் அரசியல் வேரில் வெந்நீர் ஊற்றப்பட்டது, எட்டிப்பிடிக்க முடியாத எடப்பாடி... என்று எதுகை மோனையில் கலக்கியிருப்பார். மற்றபடி இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் தி.மு.க செய்வதற்கு என்ன இருக்கிறது?

நடிகர் விஜய்யிடம் அரசியல் ஆர்வம் உள்ளதா?

அவருக்கு உள்ளதோ, இல்லையோ... அவருடைய அப்பாவுக்கு இருக்கிறது. ‘மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய பலரும், ‘விஜய் அரசியலுக்கு வர வேண்டும்’, ‘வந்துவிட்டார்’, ‘அடுத்த முதல்வர்’, ‘இங்கு இருப்பவர்களில் எத்தனை பேர் நாளைய எம்.எல்.ஏ-க்களோ...’ என்றெல்லாம் சீண்டி விட்டார்கள். ஆனால், எதற்கும் விஜய் பதில் சொல்லவே இல்லை. ‘‘நம்மை யாராவது தூண்டிவிடுவார்கள், வம்பில் இழுத்துவிடப் பார்ப்பார்கள். நாம் அதில் பட்டுக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’ என்று விஜய் சொன்னார். இதை எல்லாம் பார்க்கும்போது, விஜய் வேடிக்கை பார்க்கிறார் என்று மட்டுமே தெரிகிறது.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் நல்ல தீர்ப்பு கிடைக்குமா?

விசாரணை நடந்தால்தானே இப்படி ஒரு கேள்வி எழ வேண்டும். அது சும்மா.

பன்னீர் மீண்டும் இணைவதற்காக ஒரு சமாதான அறிவிப்பு. சசிகலா குடும்பத்தை மிரட்டுவதற்கான ஒரு கிலியூட்டும் அறிவிப்பு.

திவாகரன் - தினகரன் ஒற்றுமை பற்றி?

மொத்தக் குடும்பத்துக்கும் பிரச்னை வந்தபிறகு, உள்ளுக்குள் சண்டை போடக் கூடாது என்று அவர்களுக்குத் தெரியாதா? யாராவது ஒருவர் கையில் அதிகாரம் போனபிறகு உள்ளுக்குள் அடித்துக்கொள்வார்கள். அதுவரை வெள்ளைக் கொடிதான் பறக்கும்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு இனி இறங்குமுகமா, ஏறுமுகமா?

இதுவரை இந்த ஆட்சி மீதான விமர்சனங்கள் ஓ.பி.எஸ் மீது விழவில்லை. இனி இந்த ஆட்சி மீதான கோபங்களும் அவர்மீது விழும். கட்சி சார்பற்றவர்களிலும் குறிப்பிட்ட பகுதியினர் அவரை ஆதரித்து வந்தார்கள். அவர்கள் தங்களது ஆதரவை மெள்ள விலக்கிக்கொண்டார்கள். ‘தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர்களில் ஒருவர்’ என்று பன்னீர் கணிக்கப்பட்டார். எடப்பாடிக்குக் கீழே துணை முதல்வர் ஆனதால், அந்தப் பெயரையும் இழக்கிறார். இவை அனைத்தையும் சேர்த்துவைத்துப் பார்த்தால், பன்னீருக்கு இது இறங்குமுகம்தான்.

‘பாதாளம் வரை பாயும்’ என்று திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளாரே?

அவர் எப்போதும் உண்மையைத்தான் பேசுவார். அதை திண்டுக்கல்வாசிகள் அனைவரும் அறிவார்கள்.

கழுகார் பதில்கள்!

தமிழகத்தில் பி.ஜே.பி-யின் முகமாக நிர்மலா சீதாராமனைக் கொண்டுவரப்போவதாகச் சொல்கிறார்களே?

பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தர்ராஜன், எச்.ராஜா, சுப்பிரமணியன் சுவாமி, இல.கணேசன்... இவர்கள் எல்லாம் பி.ஜே.பி-யின் முகங்கள் இல்லையா? நிர்மலா சீதாராமன்தான் பி.ஜே.பி-யை வளர்க்க முடியும் என்றால், அவர் கையில் கட்சியை உடனடியாக ஒப்படைப்பதே சரியானது.

கழுகார் பதில்கள்!

பேராசிரியர் அ.மார்க்ஸ், மனித உரிமை செயற்பாட்டாளர்

தமிழகத்தில் இடதுசாரி இயக்கங்கள் பின்னடைவைச் சந்தித்ததற்கான காரணங்களாக எதையெல்லாம் சொல்வீர்கள்?

இடதுசாரி இயக்கங்கள் வர்க்கப் பிரச்னைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைத் தேசிய இனப்பிரச்னைக்கும் மொழிப் பிரச்னைக்கும் ஆரம்பக்காலத்தில் தரவில்லை. அதேபோல் சாதியையும் வர்க்கத்தையும் ஒன்றாகக் குழப்பி வந்தன. இதுவே பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழ்த்தேசியம் ஆகிய சிந்தனைகளிலிருந்து அவர்களை அந்நியப்படுத்தியது. பிற்காலத்தில் இதை உணர்ந்ததால், இன்றைய சூழலில் பெருமளவு சிந்தனை மாற்றம் இடதுசாரி இயக்கங்களுக்குள் நடந்துள்ளது. இருந்தாலும், இடதுசாரி இயக்கங்கள் அகில இந்தியத் தலைமையின் தீர்மானத்தின்படி நடப்பதால், முழுமையாக அவர்களால் இந்தச் சிந்தனைக்குள் மூழ்க முடியவில்லை. இந்த நடைமுறை நெருக்கடியும் அவர்களுக்கு இருக்கிறது. 

இடதுசாரி இயக்கங்களில் மிகத் தீவிரத்தன்மையைக்கொண்ட சில அமைப்புகளும் இந்த நெருக்கடியைச் சந்திக்கின்றன. அகில இந்திய ஜனநாயகப் புரட்சியா, மாநிலத் தன்னுரிமையா என்ற குழப்பமும் சில இயக்கங்களுக்கு உள்ளது. மேலும், இந்தச் சிந்தனைவயப்பட்டவர்கள் விவாதம் என்ற பெயரால் சிறுசிறு குழுக்களாக ஆகிவிட்டார்கள். இந்த உடைப்பும் பின்னடைவுக்குக் காரணம். 

எப்படி ஏகாதிபத்தியம் என்பது ஒன்றுபட்ட எதிரியாக இருக்கிறதோ, அதேபோல இன்று வகுப்புவாதமும் முக்கியமான எதிரியாக மாறி வருகிறது. இந்தச் சூழலை உணர்ந்து, இடதுசாரி இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment