Monday, August 21, 2017

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கறுப்புக் கண்ணாடி அணிவதால் கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் பிடித்துவிடுவாரா?

கண் சிகிச்சை காரணமாக ஸ்டாலின், கறுப்புக் கண்ணாடி அணிவதாகச் சொல்லப்படுகிறது. ‘கறுப்புக் கண்ணாடி அணிவதால் கருணாநிதி ஆகலாம்’ என்று ஸ்டாலின் நினைக்க மாட்டார். அந்த அளவுக்கு அவர் குழந்தையாக இருக்க மாட்டார் என்று நம்புவோம்!

மு.க.ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் யோகம் உண்டா? மு.க.அழகிரி இனியும் அரசியலில் ஜொலிப்பாரா?

ஜோதிடர்களிடம் கேட்டால் ஆரூடம் சொல்லலாம்!

கழுகார் பதில்கள்!

‘ரஜினி, கமல் ஆகிய இருவருக்குமே அரசியலுக்கு வருகிற தகுதி கிடையாது’ என்று சாருஹாசன் சொல்லி இருக்கிறாரே?

தம்பியைப் பற்றி அண்ணன் எதுவும் சொல்லலாம். இதில் ரஜினியையும் சாருஹாசன் ஏன் சேர்த்துக் கொண்டார் என்று தெரியவில்லை.

கழுகார் பதில்கள்!

இந்த மூன்று ஆண்டுகளில் மோடி அரசின் ஹைலைட் என்ன?

ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது, சரக்கு மற்றும் சேவை வரியை நாடு முழுக்க ஒருமுகப்படுத்தியது, வெளிநாட்டுப் பயணங்கள், அத்வானியை ஓரங்கட்டியது, காங்கிரஸ் கொண்டுவந்த மாடு வெட்டத் தடையை சாதகமாக்கிக்கொண்டு அமல்படுத்தியது... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

கழுகார் பதில்கள்!

‘அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ளலாம்’ என்று அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் வலை வீசுகிறாரே?

திருநாவுக்கரசர் மீது அதிருப்தி கொண்டு இருப்பவர்கள் எந்தக் கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கிறது. அதனை ஒட்ட வைப்பதற்கான காரியங்களில் அரசர் இறங்க வேண்டும். அதை விட்டுவிட்டு அ.தி.மு.க-வையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பது சரியல்ல.

‘புதுவை மாநில வளர்ச்சிக்காக 50 முறை டெல்லி சென்றும் மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் வரவில்லை’ என்று புதுவை அமைச்சர் கந்தசாமி வேதனையுடன் சொல்லி இருக்கிறாரே?

புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஆளுநர் கிரண் பேடியிடம் நிதி ஆதாரங்களை வாங்கித் தரச் சொல்லலாமே? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கு இல்லாத அதிகாரம், நியமன கவர்னருக்கு இருப்பதாக கிரண் பேடி நினைத்துக்கொண்டு இருக்கிறாரே!

‘ரஜினிகாந்த் ஆள நினைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று சீமான் கூறுவது பற்றி..?

‘நாம் தமிழர் கட்சி’யுடன் கூட்டணி வைக்க ரஜினியும் சம்மதிக்க மாட்டார் அல்லவா?

என்ன மனநிலையில் இருக்கிறார்கள் நம் அமைச்சர்கள்?

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் மனநிலையில். ஓடும் காலம் வரை ஓடட்டும் என்ற மனநிலையில்.

கழுகார் பதில்கள்!

வி.ஐ.பி கேள்வி

ஈஸ்வரன் பொதுச்செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி.

ஊழல், வறட்சி, சுகாதாரச் சீர்கேடு, வறுமை இல்லாத தமிழகம் வேண்டும் என்பதுதான் அனைத்து மக்களின் ஆசை. இதைச் சாதிக்க அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு குடிமகனும் ஊழலுக்குத் துணை போகாமல் இருக்க வேண்டும். தனிப்பட்ட சுகாதாரத்தில் அக்கறை காட்ட வேண்டும். பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக தாங்களே போராட வேண்டும். ‘நமக்காக யாரோ போடுவார்கள், அதற்கான பலனை மட்டும் நாம் அனுபவிக்கலாம்’ என்று சும்மா இருக்காமல், தங்களது உரிமைகளுக்காக தாங்களே மக்கள் எப்போது போராட ஆரம்பிக்கிறார்களோ, அப்போதுதான் லட்சியங்கள் நிறைவேறும். எல்லாவற்றையும் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்க பெரும்பான்மை மக்கள் பழகிக்கொண்டார்கள். ‘நமக்கென்ன’ என்று இருக்கிறார்கள். வீட்டுக்குள் குறை சொல்கிறார்கள், நண்பர்களிடம் அடுத்தவருக்குத் தெரியாமல் விவாதம் செய்கிறார்கள்... இதைத் தாண்டி வெளிப்படையாக வீதிக்கு வருவது இல்லை. இந்தப் பயமும் கூச்சமும்தான் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் போன்றவர்களுக்கு மெத்தனத்தையும் தவறு செய்யும் துணிச்சலையும் தருகிறது. 

தங்களது கோரிக்கைகளுக்காக சிறுசிறு அமைப்புகளை உருவாக்கி, அந்தந்தப் பகுதியில் சட்டபூர்வமான முயற்சிகளில் இம்மக்கள் இறங்க வேண்டும். இத்தகைய போராட்டங்களே மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment