Friday, August 18, 2017

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

காந்தி, காமராசர், கக்கன் போன்ற அரசியல்வாதிகள் இன்று ஏன் உருவாகவில்லை?

பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் காலத்தில், காந்தியும் காமராசரும் கக்கனும் எப்படி உருவாவார்கள்?!

ரஜினியிடம் வலியச் சென்று அரசியலுக்கு வரக் கேட்டு அழைப்பு விடுக்கும் பி.ஜே.பி தலைவர்கள், கமல்ஹாசன் அரசியல் பேசினால் கடுமையாக எதிர்ப்பது ஏன்?

கமல் பேசும் அரசியல் பி.ஜே.பி-க்கு எதிரானது என்பதால் இருக்கலாம்.

இந்திய அளவில் ராகுல் காந்தியின் புகழ் தற்போது எப்படி உள்ளது?

சொல்லிக்கொள்வது மாதிரி இல்லை. அவர் திடீரென ஏதாவது ஒரு மாநிலத்துக்குச் சென்றால், அங்கு அவரை நோக்கி மீடியா வெளிச்சம் அதிகமாகப் பாய்கிறது. மற்றபடி, தொடர்ச்சியான கவனிப்புக்குரியவராக ராகுல் இல்லை.

பரவாயில்லையே... ‘ஜெயலலிதா இல்லாத சட்டசபை, சத்தசபையாக இருக்கும்’ என்று எதிர்பார்த்தால், சட்டசபைக் கூட்டத் தொடரைச் சாந்தசொரூபியாக முடித்துவிட்டாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

சத்தம் போட வேண்டிய ஆட்கள் எல்லாம் சைலன்ட் செய்யப்பட்டால் எப்படி சத்தம் வரும்? எடப்பாடி மிகப்பெரிய ராஜதந்திரிதான். ஆடுற மாட்டை ஆடிக் கறப்பதிலும், பாடுற மாட்டைப் பாடிக் கறப்பதிலும் வல்லவராக இருக்கிறார்.

‘மழைக்காலங்களில் கண்காணிப்புக் கேமராக்களில் தூசி படிவதால், தேனாம்பேட்டை காவல் நிலையத்தின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் உருவம் தெளிவாகத் தெரியவில்லை’ என்று முதல்வர் பழனிசாமி தெளிவுபடுத்தி உள்ளாரே?

ஓஹோ! ‘மழைக்காலங்களில் குற்றம் செய்தால் கண்காணிப்புக் கேமராக்கள் வேலை செய்யாது, அந்தக் காலகட்டங்களில் குற்றம் செய்யுங்கள்’ என்று சொல்லித் தருகிறாரா? இதெல்லாம் ஒரு காரணமா? ஒரு காவல்நிலையத்தில் தினமும் காலையும் மாலையும் இரவும் கண்காணிப்பு கேமரா வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டாமா?

என்ன நாடு இது? கண்காணிப்பு கேமரா வசதியே இல்லாத சாதாரண கிளினிக்கில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அனுமதிக்கப்படுகிறார்! என்ன நாடு இது?

தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட அ.தி.மு.க வலையில் வீழ்ந்துவிட்டார்களே?

வலை வீசினால் எல்லா மீன்களும்தானே மாட்டும்? இது வீசும் வலையைப் பொறுத்ததுதானே தவிர, மீனைப் பொறுத்தது அல்ல.

கழுகார் பதில்கள்!

ஜெயலலிதாவின் சமாதியில் இனியும் போலீஸ் பந்தோபஸ்து தேவையா?

யாராவது திடீரென வந்து அமர்ந்து யோகா செய்துவிடக்கூடாது அல்லவா? அதனால்தான்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்ன, ‘வினாச காலே விபரீத புத்தி’ என்ற வாசகம் தமிழ்நாட்டு அரசியலுக்கும் ஆட்சிக்கும் பொருந்திவரும் போல் தெரிகிறதே?

உண்மைதான்! ‘அழிவுக்காலம் ஆரம்பித்து விட்டதால் புத்தி விபரீதமாக யோசிக்கும்’ என்ற அர்த்தமுள்ள இந்த சமஸ்கிருத ஸ்லோகத்தை, அதிகாரம் பொருந்திய இந்திரா காந்தியைப் பார்த்து ஜெ.பி சொன்னார். ஆனால், இங்கு இருப்பவர்கள் எந்த அதிகாரமும் இல்லாமல் அல்லவா ஆட்டம் போடுகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் பி.ஜே.பி-யில் சேர்ந்து மத்திய அமைச்சர் ஆகப் போகிறார் என்று பரவும் செய்தி பற்றி?

அ.தி.மு.க-வில் அவர் நினைப்பது எதுவும் நடக்காத நிலையில் பி.ஜே.பி-யில் பன்னீர் சேரலாம். மத்திய அமைச்சர் ஆவாரா என்பது சந்தேகம்தான்! ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க சேரப் போவதாக டெல்லியில் தகவல் பரவியிருப்பது உண்மை.

கழுகார் பதில்கள்!

பேராசிரியர் ஜவாஹிருல்லா,
தலைவர், மனிதநேய மக்கள் கட்சி.

பள்ளிக்கல்வித் துறையின் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் விரைவில் மாற்றப்படுவார் என்றும், ஊழலுக்குத் துணைபோகாத காரணத்தால்தான் இது நடக்கிறது என்றும் சொல்லப்படுகிறதே. உண்மைதானா?

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும் அவரைப் பணிமாற்றும் முடிவு தள்ளி வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ‘பன்னீர் - எடப்பாடி இணைப்பு விரைவில் நடக்க இருக்கிறது. அதன்பிறகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் நியமிக்கப்பட இருக்கிறார். அப்போது பள்ளிக்கல்வித் துறை செயலாளரை மாற்றினால், விஷயம் பெரிதாக வெளியில் பேசப்படாது’ என்று திட்டமிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. நல்லவேளையாக சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு, பள்ளிக்கல்வி பாடத்திட்டங்களை மாற்றும்வரை உதயசந்திரனை டிரான்ஸ்ஃபர் செய்வதற்குத் தடை விதித்துவிட்டது.

ஊழலுக்கு உடந்தையாக இருக்க உதயசந்திரன் மறுத்ததால்தான், அவருக்குச் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். பள்ளிக்கல்வித் துறையில் கட்டமைப்பு வசதிகளுக்கு என ஒதுக்கப்பட்ட பணத்தைத் தங்கள் விருப்பத்துக்குப் பயன்படுத்த ஒரு குரூப் திட்டமிடுகிறது. இப்போது அரசுத் துறையில் பெரும் முறைகேடு நடப்பதே, மொத்தம் மொத்தமாக இடமாறுதல் செய்வதில்தான். இடமாறுதல் பெற்றவர்கள் பணம் கொடுத்தால், முன்பிருந்த இடம் கிடைக்கும். அதையும் பள்ளிக்கல்வித் துறையில் தடுத்துவிட்டார் உதயசந்திரன். எதிலும் பணம் விளையாடி விடாத மாதிரி ஒரு சிஸ்டத்தை உருவாக்கிவருகிறார். இவை அனைத்தும் சேர்ந்துதான், அவரது பதவிக்கு வேட்டு வைக்கக் காத்திருந்தன.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:  
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 
757, அண்ணா சாலை, சென்னை- 600 002  
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment