Monday, August 21, 2017

செங்கிப்பட்டியில் எய்ம்ஸ்... குறுக்கே நிற்கும் காந்தி?

செங்கிப்பட்டியில் எய்ம்ஸ்... குறுக்கே நிற்கும் காந்தி?

ஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள காசநோய் மருத்துவமனை, மகாத்மா காந்தி பெயரில் இருப்பதால்தான், அங்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவர பி.ஜே.பி எதிர்ப்பு தெரிவிக்கிறது எனச் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைப்பதா, தஞ்சையில் அமைப்பதா  என்கிற விவாதம் இன்னும் தீரவில்லை. செங்கிப்பட்டியில் உள்ள பழமையான காசநோய் மருத்துவமனையை மத்திய அரசிடம் தமிழக அரசு முதலில் பரிந்துரை செய்தது. பல நூறு ஏக்கரில் பரந்து விரிந்த இயற்கைச் சூழல்; அனைத்து மாவட்ட மக்களும் எளிதாக வந்துசெல்வதற்கு ஏற்ற இதயப்பகுதி; பேருந்து, ரயில், விமானம் என அனைத்துப் போக்குவரத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஏரியா எனப் பல சாதகமான காரணங்கள் சொல்லப்பட்டன.

ஆனாலும், இந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய பி.ஜே.பி அரசுக்குத் தயக்கம் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது பற்றி மத்திய அரசு வெளிப்படையாக இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்துக்கும் போயிருக்கிறது.செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு பி.ஜே.பி-யினரே முட்டுக்கட்டை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெ.ஜீவக்குமாரிடம் பேசினோம். “செங்கிப்பட்டி மகாத்மா காந்தி நினைவு காசநோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனையானது, தமிழ்நாட்டின் மிகவும் பழமையான மருத்துவமனை. இதற்குச் சொந்தமான நிலப்பரப்பு, சுமார் ஆயிரம் ஏக்கர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தஞ்சை கலெக்டராக இருந்த மெக்லாங்கிடனின் முன் முயற்சியில்தான், இது வந்தது. 1947-ம் ஆண்டு இதற்கான நில தானம், நிதி தானம் தொடங்கப்பட்டது. மக்கள் பங்களிப்பாக 10 லட்சம் ரூபாய் நிதி சேர்ந்தது. இதற்கான குழுவினர், அரசு உயரதிகாரிகளிடம் இந்த நிதியை ஒப்படைக்கக் காத்திருந்த தினத்தில்தான், தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி வந்தது. அந்தத் தருணத்திலேயே, இந்த மருத்துவமனைக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்ட முடிவெடுத்தனர்.

காந்தி மீது பி.ஜே.பி-க்கு இருக்கும் வெறுப்பு உணர்ச்சிதான், இங்கு எய்ம்ஸ் வரத் தடையாக உள்ளது. தஞ்சையைச் சேர்ந்த பி.ஜே.பி தலைவர் ஒருவரே, செங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனையில் எய்ம்ஸ் அமையக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அவர்தான், ‘செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமைய வாய்ப்பில்லை’ என முதலில் சொன்னவர். மற்ற தமிழக பி.ஜே.பி தலைவர்களும் இதில் சேர்ந்துகொண்டு, செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமைவதற்கு எதிரான வேலைகளைத் திரைமறைவிலிருந்து செய்கிறார்கள்” என்றார் ஆதங்கத்துடன்.  

 - கு.ராமகிருஷ்ணன்
படங்கள்: கே.குணசீலன்

News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment