Wednesday, August 30, 2017

“பன்னீருக்கே பதவி கொடுத்தவன் நான்!” - ராஜன் செல்லப்பா

“பன்னீருக்கே பதவி கொடுத்தவன் நான்!” - ராஜன் செல்லப்பா

டி.டி.வி.தினகரனின் எலிமினேஷன் லிஸ்ட்டில் ஒற்றை ஆச்சர்யம் ராஜன் செல்லப்பா. சிறையிலிருந்து வந்தபோது தினகரனைச் சந்தித்தவர்களில் இவரும் ஒருவர். மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான இவரை, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் தினகரன். இந்தச் சூழலில், ராஜன் செல்லப்பாவைச் சந்தித்தோம்.
“தொடர் நீக்கங்களால் ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதே?’’

“இந்த ஆட்சி தொடர வேண்டுமென்றுதான் அனைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் நினைப்பார்கள். அதனால், ஆட்சிக்கு எந்தப் பாதிப்பும் வராது. தினகரன் பக்கம் இருப்பவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவி தருவதாகச் சொன்னால், அனைவரும் வந்துவிடுவார்கள். தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில், பதவிக்கு வரவேண்டு மென்றுதான் அரசியலுக்கு வருகிறார்கள். தியாகம் செய்ய நினைப்பவர்கள் வேறு கட்சிகளில் இருப்பார்கள். அமைச்சராக வேண்டுமென்ற ஆசை எனக்கும் உண்டு. அதற்கான தகுதி, அனுபவம் எனக்கு இருப்பதாக நினைக்கிறேன்.’’

“உங்களால் மதிக்கப்பட்ட தினகரன், உங்களை நீக்கியிருக்கிறாரே?’’ 

“மதுரை மாவட்டத்தில் சீனியர் கட்சிக்காரன் நான். ஐம்பதாண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவன். 
ஓ.பி.எஸ்-ஸை அரசியலில் வளர்த்தவர் தினகரன் என்கிறார்கள். அதற்கு முன்பே மாநில இளைஞரணிச் செயலாளராக நான் இருந்தபோது, பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்த பன்னீர்செல்வத்தின் முகத்தைப் பார்க்காமலேயே நகர இளைஞரணி தலைவராக்கினேன். கட்சியைவிட்டு விலக்குவதிலும், மீண்டும் சேர்ப்பதிலும் எனக்குப் பல படிப்பினைகள் உண்டு. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் என்னைப் பலமுறை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். பின்னர் சேர்த்திருக்கின்றனர். நான் இதுவரை சின்னம்மாவையோ, தினகரனையோ விமர்சித்துப் பேசியதில்லை. எஸ்.டி.எஸ்-ஸின் `நமது கழகம்’ சார்பில் மதுரையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவந்த திவாகரனை, அப்போதே எனக்குத் தெரியும். தினகரன் என்னை நீக்குவதில் அவசரப்பட்டுவிட்டார். அவ்வளவுதான்!’’

“கட்சிப் பிரச்னைகளைப் பார்த்தது போதும்; மக்கள் நலத்திட்டங்களை உடனே செயல்படுத்துங்கள் என்று முதல்வருக்குக் கோரிக்கை வைக்கிறீர்களே?’’

“ஆமாம். திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால்தான், ஒவ்வொரு தொகுதியிலும் ஆட்சிக்கு மரியாதை வரும். கட்சியினரும் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். சும்மா அறிவித்தால் மட்டும் போதுமா? சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேலை வாங்க வேண்டும். தற்போது அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள். ‘மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்கப்படும்’ என்று முதல்வர் அறிவித்து இரண்டு மாதங்களாகிவிட்டன. இன்னும் அதற்கான எந்த முயற்சியையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.”

அ.தி.மு.க-வுக்குள் ராஜன் செல்லப்பா போல தனித்தனி அணிகள் பல உள்ளன. தினகரனிடமே திணறும் எடப்பாடி, இவர்களையெல்லாம் எப்படி சமாளிக்கப்போகிறார் என்று தெரியவில்லை.

- செ.சல்மான்
படம்: வீ.சதீஷ்குமார்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment