Friday, May 19, 2017

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

அக்‌ஷரா ஹேப்பி!

அஜித்தின் ‘வேதாளம்’ படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்தார். இப்பொழுது ‘விவேகம்’ படத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்திருக்கிறார். கமலின் இளைய மகள் தமிழில் அறிமுகமாகும் முதல் படம். படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி செம வைரல். ஹேப்பி மோடில் இருக்கும் அக்‌ஷரா, நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

தூள் கிளப்பும் துல்கர்!

‘டேவிட்’ பட இயக்குநர் பிஜாய் நம்பியார் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கிவரும் படம் ‘சோலோ’. நான்கு கதைகள், வேறு வேறு களங்களைக் கொண்ட திரைக்கதை. படத்தில் லீட் ரோல் துல்கர் சல்மானுக்கு. பின்னிப் பெடல் எடுப்பதாகப் பேச்சு. படப்பிடிப்பு மற்றும் டெக்னிக்கல் வேலைகள் சென்னையில் நடந்துவருகின்றன.

காதல் 96!

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கும் படம், ‘96’. முழுக்க முழுக்க காதலும் காதல் நிமித்தமும்தான் படம். ‘பசங்க’, ‘சுந்தரபாண்டியன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார்தான் இப்படத்தை இயக்குகிறார். விஜய்சேதுபதி, த்ரிஷா சிறுவயது போர்ஷனும் படத்தில் வருகிறதாம். அந்தக் காட்சிகளைத்தான் முதலில் ஷூட் செய்கிறார்கள். 

சுதா - சிவா காம்பினேஷன்!

‘பாக்ஸிங்’ கதைக்களத்தால் ‘இறுதிச்சுற்று’ ஹிட் விளாசிய இயக்குநர் சுதா கொங்கரா. இவரின் அடுத்த படம், ‘த்ரில்லர்’. இதுவும் நிஜ சம்பவங்களை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட கதைதான். இதில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இப்போது மோகன்ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவா. அந்தப் படம் முடிந்தபின் சுதா - சிவா காம்பினேஷன் படம் அறிவிக்கப்படலாம்.

News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment