Saturday, May 06, 2017

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

’பிரேமம்’ புகழ் சாய்பல்லவி நடிக்க, விஜய் இயக்க இருக்கும் புதிய படத்திற்கு ‘கரு’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். விஜய் இயக்கிய ‘வனமகன்’ இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்குப் பிறகு, மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘சார்லி’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய இருந்தார் விஜய். இப்போது, அதற்கு முன்பாக ‘கரு’ படத்தை எடுத்து முடிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். க்ரைம் த்ரில்லர் கதையான இது, ஹீரோயினை மையப்படுத்திய படமாக இருக்குமாம்.

னுஷ் நடிக்க இருக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு மே 14-ம் தேதி தொடங்குகிறது. ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஃபகிர் என்ற கேரக்டரில் நடிக்கிறார் தனுஷ். கனடாவைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில், ரொமான்டிக் காமெடியாக இப்படம் உருவாகிறது. ‘ஆர்ட்டிஸ்ட்’ படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை பெரெனைஸ் பிஜோ, தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். 

  டிகை சமந்தா சிலம்பம் சுற்றும் வீடியோ, சில நாள்களுக்கு முன் வைரல் ஆனது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதற்காக சமந்தா சிலம்பம் கற்றுக்கொண்டபோது எடுத்த வீடியோவாம் இது. இந்தத் தகவலை இயக்குநர் பொன்ராம் உறுதிப்படுத்தி இருக்கிறார். படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.

மிஸ்டர் மியாவ்

சிங்கம்-3’க்குப் பிறகு மீண்டும் சூர்யா - ஹரி கூட்டணி இணைகிறது.  அது ‘சிங்கம்-4’ அல்ல என்பதையும், அது போலீஸ் கதையும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஹரி. ஆனால், திரைக்கதையின் வேகம் இதுவரை இயக்கிய படங்களைவிட இன்னும் அதிகமாகவே இருக்குமாம். தற்போது விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ‘சாமி-2’ படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் ஹரி, இதை முடித்ததும் சூர்யா படத்தின் வேலைகளைத் தொடங்குகிறார்.

ட்லி இயக்கும் படத்தில் மூன்று கேரக்டர்களில் நடித்திருக்கிறார் விஜய். இதேபோல, நடிகர் விஷாலும் முதல்முறையாக மூன்று கேரக்டர்களில் நடிக்கிறார். ‘நாளை நமதே’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை, இயக்குநர் பொன்ராமின் உதவியாளர் வெங்கடேஷன் இயக்குகிறார். காமெடி கேரக்டரில் சதீஷ் நடிக்கிறார்.

மியாவ் பதில்

‘‘ ‘போகன்’ படத்துக்குப்பிறகு ஹன்சிகா பற்றி எந்தப் பேச்சும் இல்லையே? அவர் என்ன ஆனார்?’’

‘‘நல்ல கதை வேண்டும், நல்ல சம்பளமும் வேண்டும். இந்த இரண்டில் ஒன்று அமைந்தால், இன்னொன்று அமைய மறுப்பதுதான் ஹன்சிகாவின் பிரச்னை. அவர் கைவசம் தமிழில் இப்போது எந்தப் படமும் இல்லை. அதனால் மும்பை வீட்டிலேயே இருக்கிறாராம். ஹன்சிகாவின் அடுத்த பிரச்னை, அவரின் அம்மா. சீனியர் ஹீரோக்களுடன் நடிக்க வரும் வாய்ப்புகளை, ‘இவர்களோடு நடித்தால், உன்னையும் சீனியர் நடிகை லிஸ்ட்ல ஒதுக்கிடுவாங்க’ என்று குறுக்கே விழுந்து தடுக்கிறாராம். ‘இப்ப மட்டும் என்ன வாழுதாம்’ என்கிற ஹன்சிகாவின் மைண்ட் வாய்ஸ் மும்பையில் இருந்து கோடம்பாக்கம் வரை கேட்கிறது.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment