Saturday, May 06, 2017

‘‘அமைச்சர்களும் 50 எம்.எல்.ஏ-க்களும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்!’’ - பட்டையை கிளப்பும் தோப்பு!

‘‘அமைச்சர்களும் 50 எம்.எல்.ஏ-க்களும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்!’’ - பட்டையை கிளப்பும் தோப்பு!

கொங்கு மண்டல ரகசியக் கூட்டம்

எடப்பாடிக்கு அடுத்தடுத்து சிக்கல்கள். அ.தி.மு.க தலித் எம்.எல்.ஏ-க்கள் ரகசிய கூட்டம் நடந்த நிலையில் அடுத்து கொங்கு மண்டலத்தில் சலசலப்பு.  எடப்பாடி  அரசுக்கு எதிராக, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலரை வைத்து ரகசியக் கூட்டம் நடத்தி கொங்கு மண்டலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்.  

பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ-வான தோப்பு வெங்கடாசலம், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். இவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் 13 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டதாகச் செய்திகள் கிளம்பியிருக்கின்றன. அதில் கலந்துகொண்ட ஒருவரிடம் பேசினோம். “அந்தக் கூட்டத்தில் பலரும் பேசினார்கள். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் ஜெகதீஷ் பேசியபோது, 

‘அ.தி.மு.க-வில் பிரிந்து கிடக்கும் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் பல தவறுகள் செய்தவர்கள். பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரண்டு அணிகளிடமும் கட்சி இல்லை. கோடான கோடித் தொண்டர்களிடம்தான் கட்சி இருக்கிறது. எடப்பாடியும் வேண்டாம், பன்னீரும் வேண்டாம் என்றுதான் அடிமட்டத் தொண்டர்கள் நினைக்கிறார்கள். கண்ணியமான, ஒழுக்கமான, இளமையான, கவர்ச்சியான(?), துணிச்சலான தோப்பு வெங்கடாசலம்தான் முதல்வராக வர வேண்டும் என்று தொண்டர்களும், பொதுமக்களும்(!) நினைக்கிறார்கள். அம்மாவின் ஆத்மாவும், அ.தி.மு.க-வின் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தோப்பு வெங்கடாசலத்தை முதல்வராக முன்மொழிவதற்குத் தயாராக இருக்கிறார்கள்’ எனச் சொன்னார் ஜெகதீஷ். தோப்பு வெங்கடாசலத்தை முதல்வர் ஆக்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.

இது பற்றி அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘தோப்பு வெங்கடாசலத்தின் ரகசியக் கூட்டம் பற்றிய செய்தி, கடந்த ஒரு வாரமாக கொங்கு மண்டலத்தில் பரவி வருகிறது. ஆனால், ரகசியக் கூட்டம் எதையும் அவர் நடத்தவில்லை. மொடக்குறிச்சி எம்,எல்.ஏ-வான சிவசுப்பிரமணிக்கு மட்டுமே தோப்பு வெங்கடாசலம் சீட் வாங்கிக் கொடுத்தார். அவர் மட்டும்தான் இவருடைய ஆதரவாளராக இருந்தார். இப்போது அவரும் செங்கோட்டையன் பக்கம் சாய்ந்து விட்டார்.

வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது, சில தவறுகள் செய்ததால் தோப்பு வெங்கடாசலம், சுற்றுச்சூழல் அமைச்சராக மாற்றப்பட்டார். அங்கேயும் அவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்தன. அதையடுத்து, 2016-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது, தோப்பு வெங்கடாசலத்துக்கு அமைச்சர் பதவியை அம்மா  கொடுக்கவில்லை. தற்போது. தலைமை இல்லாமல் அ.தி.மு.க இருக்கும் நிலையைப் பயன்படுத்தி சில ஆதாயங்களை அடைவதற்காக இப்படிப்பட்ட புரளிகளைப் பரப்பி வருகிறார். 

மே தினத்தன்று அ.தி.மு.க-வின் தொழிலாளர்கள் ஊர்வலத்தை நடத்தி, சக்தி திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் போட்டிருந்தார் தோப்பு வெங்கடாசலம். அதில், ஜெகதீஷ் பேசியபோது, தோப்பு வெங்கடாசலத்தை ஆதரித்தும், அ.தி.மு.க-வை விமர்சித்தும் பேசினார். அதை, தோப்பு வெங்கடாசலம் ரசித்துக் கேட்டதுடன், அந்தச் சம்பவத்தை திரித்துப் பரப்பி வருகிறார். அதன் மூலம், எடப்பாடி அணியிலோ, பன்னீர் அணியிலோ ஆதாயம் பெற முடியுமா என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்’’ என்றார்கள். 

ரகசியக் கூட்டம் பற்றி தோப்பு வெங்கடாசலத்திடம் கேட்டோம். ‘‘ரகசியக் கூட்டம் என்றால், அது ரகசியக் கூட்டம்தான். அதைப் பற்றி நான் எப்படி உங்களிடம் சொல்ல முடியும். எனக்கு 13 எம்.எல்.ஏ-க் களின் ஆதரவு உள்ளது என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். ஆனால், பல அமைச்சர்கள் என்னுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறார்கள். 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். எங்களைப் பொருத்தவரை இரண்டு அணிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்து இரட்டை இலைச் சின்னத்தைப் பெற வேண்டும். நான், இன்று வரை சசிகலா அணியில்தான் இருக்கிறேன். 122 எம்.எல்.ஏ-க்கள் என்ற பெரும்பான்மை என்ற பலத்தோடு இன்று வரை இருந்து வருகிறோம். அதை மட்டும்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும்’’ என்றார். 

Unknown
Unknown

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment