Saturday, May 06, 2017

குழந்தைகளை குற்றவாளிகள் ஆக்கும் சீர்திருத்தப் பள்ளிகள்! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

குழந்தைகளை குற்றவாளிகள் ஆக்கும் சீர்திருத்தப் பள்ளிகள்! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

‘சீர்திருத்தப் பள்ளியில் இருந்து சிறுவர்கள் தப்பி ஓட்டம்’ என்னும் செய்தியை அடிக்கடி படிக்க நேரிடும். ‘குழந்தைகள் ஏன் குற்ற வழக்குகளில் சிக்கி, இப்படிப்பட்ட சீர்திருத்தப் பள்ளிகளுக்கு வருகிறார்கள்? இந்தப் பள்ளிகள் அவர்களைத் திருத்துகின்றனவா? இவை அவர்களைத் திருத்தும் இடங்கள் என்றால், அங்கிருந்து அவர்கள் ஏன் ஓடிப்போக வேண்டும்? சீர்திருத்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு இடையே மோதல் ஏன் வருகிறது?’ என்ற கேள்விகள் சிலருக்கு எழக்கூடும். நம் வீடுகளில் கார்ட்டூன் சேனலில் உலகையே மறந்து போயிருக்கும் ஒரு குழந்தையைப் போன்றவர்கள்தான், இவர்களும் என்பதை நம்மில் பலர் உணர்வது இல்லை! 

சிறு வயதுக் குற்றவாளிகள் உருவாகுவதற்கான காரணங்கள் என்ன? தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கூர்நோக்ககத்தின் மாநில அமைப்பாளரான பேராசிரியர் ஆண்ரூ சேசுராஜிடம் கேட்டோம்.

“முதலில் அவர்களைக் குற்ற வாளிகள் என்றே குறிப்பிடக் கூடாது. அவர்கள், தவறு செய்ததாகக் கருதப்படும் குழந்தைகள். பொதுவாக ஒரு குழந்தை ஏழு வயது வரை என்னவிதமான செயல்கள் செய்தாலும், சட்டப்படி அது குற்றச் செயல்பாடு எனும் வகையில் அடங்காது. ஏழு வயதுக்கு மேல் 12 வயதுக்குள் உள்ள குழந்தைகள் தவறு செய்ததாகக் கருதப்பட்டால், அவர்களின் வயதுக்கு உரிய மன வளர்ச்சியைக் கொண்டிருக் கிறார்களா என்பதை முதலில் சோதிப்பார்கள். அதன் பின்தான் குற்றச் செயல்பாடா என உறுதி செய்வார்கள். 18 வயது வரை உள்ளவர்கள் குழந்தைகள் என்றே கருதப்படுவர். டெல்லியில் நிகழ்ந்த நிர்பயா கொலைக்குப் பிறகு செய்யப்பட்ட சட்டச் சீர்திருத்தத்தால் 16 - 18 வயது வரைக்குமான குழந்தைகளுக்கு, அவர்கள் செய்த செயலின் நோக்கமும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. பாலியல் மற்றும் தீவிரக் குற்றம் எனில், தெரிந்தே அந்தத் தவற்றைச் செய்திருக்கிறார்களா என்று சோதிக்கப்படுவர்.

குழந்தைகளை குற்றவாளிகள் ஆக்கும் சீர்திருத்தப் பள்ளிகள்! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

ஒரு குழந்தை தவறு செய்திருக்கிறது என்று கருதும்பட்சத்தில் கொலை, பாலியல் வன்புணர்வு, தீவிரவாதச் செயல் போன்ற அதிதீவிரக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே அவர்களைக் கையகப்படுத்துவார்கள். அதைக் கைது என்றும் சொல்வதில்லை. இதுதவிர, மற்ற தவறுகளுக்கு கையகப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அந்தக் குழந்தைக்கு மற்றவர் களால் ஆபத்து நேரும் சூழல் இருந்தால், கையகப்படுத்தலாம்.

குழந்தைகளை குற்றவாளிகள் ஆக்கும் சீர்திருத்தப் பள்ளிகள்! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

இதிலும் சில வழிமுறைகள் உண்டு. குற்றம் நடைபெறும் இடத்தில் கையகப்படுத்தினால் மட்டுமே, காவல் அதிகாரி சீருடையில் இருக்கலாம். மற்ற நேரங்களில் கையகப்படுத்தும்போது சீருடையில் இருக்கக் கூடாது. அந்தக் குழந்தைகளை விசாரிப்பதில் பொதுவான காவலர்கள் ஈடுபடக் கூடாது. சிறுவர்களை விசாரிப்பதற்கு என்று நியமிக்கப் பட்டுள்ள காவலரே (Child Welfare Police Officer) விசாரிக்க வேண்டும். இவ்வாறு கையகப்படுத்திய குழந்தைகளைத் தங்க வைக்கவே சிறுவர் கூர்நோக்கு இல்லம். விசாரணைக் காலம் வரை மட்டுமே இங்கு குழந்தைகளை வைத்திருக்க முடியும். அதிகபட்சமாக மூன்று மாதங்கள். இங்கு கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் இருக்காது. கைத்தொழில் பயிற்சி, நடனம், இசை போன்றவை மூலம் குழந்தைகளின் மனநிலையை ஆற்றுப்படுத்துகிற முயற்சிகள் நடக்கும்.

குழந்தைகளை விசாரிக்கும் முறையும் வழக்கமானதைவிட வேறுபட்டதுதான். நீதிமன்றம், வழக்கறிஞர் என்று குழந்தைகளை மிரளவைக்கிற விஷயங்கள் தவிர்க்கப்படும். ‘இளம் சிறார் நீதிக் குழுமம்’ என்பது இதன் பெயர். விசாரிப்பதற்கும், தீர்வு சொல்வதற்கும் மூவர் அடங்கிய குழு இருக்கும். குழுவின் தலைமைப் பொறுப் பில் ஒரு நீதிபதி இருப்பார். மற்ற இருவர் உறுப்பினர்கள். அவர்கள் சமூகப் பணியாளர் களாக இருப்பர். இங்கு தரப்படும் தீர்ப்பின் அடிப்படையில்தான், சீர்திருத்தப்பள்ளிக்கு சிறுவர்கள் அழைத்துச் செல்லப்படுவர். அங்கு படிப்போடு, கைவினைத் தொழில்கள் உள்ளிட்டவை கற்றுத்தரப்படும்.

குழந்தைகளை குற்றவாளிகள் ஆக்கும் சீர்திருத்தப் பள்ளிகள்! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

குழந்தைகளை குற்றவாளிகள் ஆக்கும் சீர்திருத்தப் பள்ளிகள்! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

ஆனால், நடைமுறையில் இது சரியாகப் பின்பற்றப் படுகிறதா என்பது கேள்விக்குறிதான். குழந்தைகளை அடித்து இழுத்துச் செல்வதும், கூர்நோக்கு இல்லங்களில் அவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் சித்திர வதைக்கும் ஆளாகுவது நடக் கிறது” என ஆதங்கத்துடன் முடித்தார் ஆண்ரூ சேசுராஜ். ஒரு சிறிய தவறுக்காக ‘உள்ளே’ போன குழந்தை, ‘எல்லாம் கற்றுக்கொண்டு’ முழுமையான குற்றவாளியாக வெளியில் வருவதும் நடக்கிறது. எங்கே இருக்கிறது தவறு?

குழந்தைகளை குற்றவாளிகள் ஆக்கும் சீர்திருத்தப் பள்ளிகள்! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

‘இந்தியன் கவுன்சில் ஃபார் சில்ட்ரன் வெல்ஃபேர்’ அமைப்பின் பொதுச் செயலாளர் கிரிஜா, “ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். மற்றபடி சட்டம் சரியாகவே கடைபிடிக்கப்படுகிறது’’ என்கிறார். ‘‘குழந்தைகளைக் கையகப்படுத்தும்போது விலங்கு மாட்டுவதோ, லாக்கப்பில் அடைப்பதோ இல்லை. சைல்ட் வெல்ஃபேர் ஆபீஸர்களே விசாரிக் கின்றனர். விசாரணை நடக்கும் இடத்தில் நீதிபதியோ, வழக்கறிஞர்களோ, காவல் அதிகாரிகளோ சீருடையில் இருக்க மாட்டார்கள். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். குழந்தைகளைக் காவல் துறையினர் அடித்தார்களா என்று நிச்சயம் விசாரிப்போம். குழந்தைகள் எந்தவிதமான குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படும். ஒருவேளை வெளியே அனுப்பினால் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனத் தெரிந்தால், கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி விடுவோம். இவையெல்லாமே குழந்தையின் நலனை முன்னிறுத்தியே செய்யப்படுகின்றன” என்றார் கிரிஜா.

குழந்தைகளை குற்றவாளிகள் ஆக்கும் சீர்திருத்தப் பள்ளிகள்! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

சட்டம் சொல்பவை நடைமுறையில் இருப்பதில்லை. இதற்கு என்னதான் தீர்வு? முன்னாள் டி.ஜி.பி ஆர்.நட்ராஜிடம் பேசினோம். ‘‘சிறிய தவறு செய்து, சீர்த்திருத்தப் பள்ளிக்குச் செல்பவரை முழுமையான மனிதராக மாற்றும் பொறுப்பு, மூன்று தரப்புக்கு இருக்கிறது. காவல் துறை, சிறைத் துறை, சமூக ஆர்வலர்கள். சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்களுக்குள் மோதல் வருவதற்கான காரணங்களை ஆராய வேண்டும். சிலர் ஏதேனும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கலாம். அதிலிருந்து மீளமுடியாமல் வன்முறை பிரயோகிப்ப வராக மாறக்கூடும். அப்படிப்பட்டவர் களுக்கு சரியான சிகிச்சையும் கவுன்சிலிங்கும் அளிக்கப்பட வேண்டும். சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளியே வந்தபின், திரும்பவும் தவறு செய்யாதபடி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அந்தச் சிறாரை தவறு செய்யத் தூண்டுவதற்கு யாரேனும் முயற்சி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என்பார்கள். சிறிய தவறு செய்துவிட்டு மாட்டிக்கொள்ளும் சிறுவர்கள்கூட இந்த நடைமுறைச் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர். அவர்களில் பலர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சிப்பது, காப்பாளரிடம் சண்டை வளர்ப்பது என்பதாக மாறிவிடுகிறார்கள். ‘குற்றவாளிகள் திருத்தப்பட வேண்டும்’ என்பதே சட்டத்தின் நோக்கம் என்னும்போது, செய்தது சரியா, தவறா என்றே தெரியாத நிலையில் உள்ள குழந்தைகள் இன்னும் கவனத்துடன் கையாளப்பட வேண்டும்’’ என்கிறார் அவர்.

குழந்தைகளை குற்றவாளிகள் ஆக்கும் சீர்திருத்தப் பள்ளிகள்! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

ஜல்லிக்கட்டு முடிந்தும் மல்லுக்கட்டு!

சட்டம் நடைமுறையில் குழந்தைகளை கவனத்துடன் பாதுகாக்கிறதா? ‘இல்லை’ என்பதற்கான சாட்சி இது. ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி சென்னை, மெரினாவில் இளைஞர்கள் ஒன்றுகூடி போராடினர். அதன் இறுதி நாளில் சென்னையில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. சென்னை, வடபழனியும் அதில் ஒன்று. அந்த வழக்கில் 40-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கையகப்படுத்தப்பட்டு, சில நாட்கள் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை அவர்களின் வாக்குமூலமாகவே கேட்டோம். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

சந்திரன் (வயது 16): ``ரோட்டில் நின்று வேடிக்கை பார்த்தேன். அதற்காகப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். ரப்பர் குழாயால் அடித்தார்கள். எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்று எவ்வளவு கதறியும் கேட்கவே இல்லை.’’

முத்து (வயது 17): ``என்னுடைய நண்பன் ஒருவனைப் பிடித்து, ‘வேறு யாரையாவது சொல்லு... உன்னை விட்டுவிடுகிறேன்’ என்று மிரட்டியிருக்காங்க. அவன் என் பெயரைச் சொல்லிவிட்டான். அதனால் என் வீட்டில் வந்து அரெஸ்ட் பண்ணிட்டாங்க. எனக்கும் நிறைய அடி விழுந்தது. ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றபோதுகூட அவர்கள், ‘அடித்ததை டாக்டரிடம் சொல்லக்கூடாது’ என மிரட்டினாங்க.’’

பரமு (வயது 15): ``அடித்ததில் கைகள் வீங்கிவிட்டன. ஆனால், நீதிபதியிடம் இதைச் சொன்னால் ‘மறுபடியும் கடுமையாக அடி விழும்’ என மிரட்டினார்கள். அதற்கு பயந்துகொண்டே சொல்லவில்லை.’’

கூர்நோக்கு இல்லத்தில் கொடுக்கப்பட்ட சாப்பாட்டை வாயிலேயே வைக்க முடியவில்லை என்றும் கூறினர். தங்குமிடம், கழிப்பறை என எல்லாமே மோசமாக இருக்குமாம். 

இவர்களுக்காக சட்டப் போராட்டம் நடத்திவரும் வழக்கறிஞர் காருண்யா தேவி, ‘‘இந்தச் சிறுவர்களுக்கும் அந்த வன்முறைச் சம்பவங்களுக்கும் துளியும் தொடர்பில்லை என்று தெரிந்தும் இந்த வழக்கு முடிக்கப்படாமல் இருக்கிறது. இதில் கையகப்படுத்தப்பட்ட ஒரு சிறுவனின் தந்தை, இந்தத் துக்கம் தாளாமல் இறந்து விட்டார். அந்தக் குடும்பம் இன்று வருமானம் இன்றித் தவிக்கிறது. இன்னொருவனை, `இந்த ஆண்டு படிக்க வராதே’ என்று பள்ளியைவிட்டு அனுப்பிவிட்டார்கள். அடுத்த ஆண்டு அனுமதிப்பார்களா என்பதும் நிச்சயமில்லை. இன்னொரு வரின் அப்பா தள்ளுவண்டியில் பழங்கள், காய்கறிகள் விற்பவர். அவருக்கு இந்த வழக்கின் தன்மையையே புரிந்துகொள்ள முடியவில்லை. பிள்ளை ஜாமீனில் வெளிவந்தபோது எல்லாம் முடிந்து விட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டார். ஆனால், வழக்கு தொடர்ந்து நடக்கும் என்றதுமே கண் கலங்க ஆரம்பித்துவிட்டார். சொல்வதற்கு இப்படி ஏராளமான சோகங்கள் இருக்கின்றன. சிறுவர்களின் மனநிலையையும் குடும்பச் சூழலையும் மனதில் வைத்து உடனடியாக இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

யார் காரணம்?

‘வறுமையே குற்றங்களுக்குக் காரணம்’ என இளவயது குற்றச் செயல்பாடுகளை அடித்தட்டுக் குடும்பங்களோடு முடிச்சுப் போட்டுவிட்டுக் கடந்து போய்விட முடியாது. எல்லா குடும்பங்களிலும் இப்படிப்பட்டவர்கள் உருவெடுக்க இப்போது காரணங்கள் இருக்கின்றன. ‘‘ஏழைக் குடும்பங்களில் வேண்டுமானால், வறுமையும் பசியும் காரணமாக இருக்கலாம். பெற்றோர் இருவருமே பணிக்குச் செல்பவர்களாக இருக்கும் நடுத்தரக் குடும்பங்களில், குழந்தைகளோடு செலவிட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. ஒருவித வெறுமையுடன் வளரும் குழந்தைகள், குற்றங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். சற்றே வசதியான குடும்பங்களில், குழந்தைகளின் மீது நிறைய எதிர்பார்ப்புகளை பெற்றோர் சுமத்துகின்றனர். நிறைய மார்க், விதவிதமான திறமைகள் எனப் பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற முடியாத அழுத்தம், குழந்தைகளை வேறு திசையில் தள்ளுகிறது. பணக்காரக் குடும்பங்களில், குழந்தைகள் ஆசைப்படும் எல்லாவற்றையுமே தருகிறார்கள். ஆனால், எது அறம், எது நியாயம் என ஒழுக்கம் கற்றுத் தருவதற்குத் தவறுகிறார்கள். இப்படி, குழந்தைகளின் எல்லா தவறுகளுக்குமே குடும்பங்களும் சமூகமுமே காரணம்’’ என்கிறார், இளைஞர் மேம்பாடு சங்கத்தின் இயக்குனர் டாக்டர் ராஜேஷ்குமார்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment