‘முதல் குற்றவாளியாக ஓர் ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்ட நபர் மரணம் அடைந்துவிட்டால், அவர் சார்ந்த வழக்கும் செயலற்றது ஆகிவிடும். எனவே, மற்றவர்கள் மீதான குற்றங்களும் விலக்கப்படும்’ என்று கடந்த 91-ம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. இதுபோன்ற முன் உதாரணத் தீர்ப்புகள் பலவற்றை சுட்டிக் காட்டி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், முதல் குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்ததால், அவர் தொடர்பான மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது உச்ச நீதிமன்றம். மற்ற மூவருக்கும் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் பத்து கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்து கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதைத் தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மூவரும் அடைக்கப்பட்ட 77 நாட்களுக்குப் பிறகு நல்ல நேரம் பார்த்து, கடந்த மே 3-ம் தேதி புதன்கிழமை மாலை ஆறு மணியளவில், இவர்களின் வழக்கறிஞர், உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் மேற்கண்ட மனுக்களை தாக்கல் செய்தார்.
‘பொதுவாழ்வில் இருந்த ஜெயலலிதா இறந்து விட்டதால், பொது ஊழியர்கள் அல்லாத சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு மட்டும் தண்டனை வழங்கியது தவறு’ என்பதும் இவர்களின் தற்போதைய வாதம். இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது ஜூன் மாதத்துக்குக்குப் பின்னர்தான் தெரியவரும்.
ஏனென்றால், மே 10-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. அது ஒரு பக்கம் என்றால், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய முதன்மை நீதிபதியான பினாகி சந்திரகோஷ், மே 27-ம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். ஆகவே, இரண்டாம் நீதிபதியான அமிதவா ராயுடன் வேறு ஒரு புதிய நீதிபதிதான் இந்தச் சீராய்வு மனுவை விசாரிப்பார். அந்தப் புதிய நீதிபதி யாராக இருப்பார் என்கிற யூகங்கள்தான் தற்போது நீதிமன்ற வட்டாரத்தில் அலசலாக உள்ளது. நீதிமன்றத்தில் வக்கீல்களின் வாதங்களோடு இவை விசாரிக்கப்பட மாட்டாது. தீர்ப்பு தந்த நீதிபதிகளிடம் சீராய்வு மனு சுற்றுக்கு விடப்படும். அவர்கள் தங்கள் சேம்பரில் இருந்தபடி தீர்ப்பு வழங்குவார்கள். பெரும்பாலான சீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதே வழக்கமாக இருக்கிறது.
‘ஜெயலலிதா மரணித்துவிட்டார் என்பதால் மட்டுமே அவர் விடுவிக்கப் பட்டிருக்கிறார்’ என்பதைத் தீர்ப்பில் தெளிவாக சுட்டிக்காட்டி இருந்தனர் நீதிபதிகள். கூடவே, அமிதவா ராய் தனியாக தனது ஏழு பக்க தீர்ப்பில் ஊழல் தொடர்பாகவும், ஊழலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும் மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே பிப்ரவரி தீர்ப்பை யாரும் அசைக்க முடியாது என்பதுதான் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களின் கருத்தாக உள்ளது.இந்த வாய்ப்பு நிராகரிக்கப்பட்டாலும் ‘மறுசீராய்வு மனு’ என்கிற கடைசி வாய்ப்பும் உள்ளது.
முதல் குற்றவாளியாக ஓர் ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்ட நபர் மரணம் அடைந்துவிட்டால், அவர் சார்ந்த வழக்கும் செயலற்றது ஆகிவிடும். எனவே, மற்றவர்கள் மீதான குற்றங்களும் விலக்கப்படும்’ ::::::: அப்படி என்றல், இதை மனதில் வைத்து கொண்டு தான் Jaya கொல்லப்பட்டாரா ?? It was a conspiracy to eliminate Jaya and escape from the case.
No comments:
Post a comment