Saturday, May 06, 2017

தலாக்... தலாக்... தலாக்... அரசு தலையிட்டு தடைச் செய்ய வேண்டும்.

தலாக்... தலாக்... தலாக்... அரசு தலையிட்டு தடைச் செய்ய வேண்டும்.

ந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு, இதர சமூகங்களின் பெண்களுக்கு இருப்பது போல திருமணம் மற்றும் விவாகரத்து உரிமை இருக்கிறதா? இந்தக் கேள்வியோடு முத்தலாக் விவகாரம், நாடு தழுவிய விவாதமாக மாறியுள்ளது. இந்த சர்ச்சை நீண்டகாலமாக இருந்து வந்தபோதிலும், சமீபத்தில் இது பற்றிய விவாதம் தீவிரம் அடைந்திருப்பதற்குக் காரணம், பிரதமர் மோடியின் பேச்சுகளும் உச்ச நீதிமன்ற வழக்கும்தான். 

சமீபத்தில், பி.ஜே.பி-யின் தேசிய செயற்குழுவில் பேசிய மோடி, “முத்தலாக் பிரச்னையால் முஸ்லிம் பெண்கள் பல சிரமங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது” என்றார். அதன் பிறகு கன்னட தத்துவ மேதை பசவேஸ்வரய்யாவின் பிறந்த நாள் விழாவில், “முத்தலாக் என்பதன் தீய விளைவுகளில் இருந்து முஸ்லிம் புதல்விகளைப் பாதுகாக்க வேண்டும். காலாவதியான இந்த வழக்கத்தை ஒழித்துக்கட்டி, நவீன முறைகளைக் கொண்டு வர வேண்டும்” என்று பிரதமர் பேசினார். 

முத்தலாக் முறைக்கு எதிராக இஷ்ரத் ஜகான் என்பவர் உட்பட பலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், ‘முத்தலாக் முறை, சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை. முத்தலாக் முறையால், முஸ்லிம் பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ‘முத்தலாக் முறை முஸ்லிம்களுக்கான மத உரிமை. இதில், அரசு தலையிடக் கூடாது’ என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சொல்கிறது. முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியமோ, முத்தலாக் முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இந்தச் சூழலில் வரும் மே 11 முதல் 19-ம் தேதி வரை ‘முத்தலாக் சட்டபூர்வமான விவாகரத்து ஆகுமா?’ என்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தொடர்ச்சியாக விசாரிக்க இருக்கிறது.

சாதி, மத, தேச எல்லைகளைத் தாண்டி பெண்கள் சந்திக்கின்ற பிரச்னைகள் ஏராளம். இதில், முஸ்லிம் பெண்களும் விதிவிலக்கு இல்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக, தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவது என்று கணவன் முடிவுசெய்துவிட்டால், ஒரே நேரத்தில் ‘தலாக்… தலாக்… தலாக்...’ என மூன்று முறை சொல்லிவிட்டு, கணவர் பிரிந்துசென்றுவிடுகிறார். ‘இது நியாயம் அல்ல’ என்று கொந்தளிக்கிறார்கள் முஸ்லிம் பெண்கள்.

சில சமயங்களில் மனைவியிடம் நேரில் தலாக் சொல்லப்படுவது இல்லை; செல்போனில் சொல்கிறார்கள்; இ-மெயிலிலோ, தபாலிலோ சொல்கிறார்கள்; எஸ்.எம்.எஸ் மூலமாகக்கூட சொல்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. சவுதி அரேபியாவில் வேலைசெய்யும் ஒருவர், ஆந்திராவில் உள்ள தன் மனைவிக்கு, ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, தலாக் சொல்லியிருக்கிறார். அசாமில் இப்படி முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு மாநில பி.ஜே.பி அரசு பென்ஷன் தர உள்ளது. இப்படி பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேசத்துப் பெண்களில் சிலர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். இப்படி தினம் தினம் முத்தலாக் பற்றி விதவிதமாக விவாதங்கள் நடக்கின்றன.

இது குறித்து கவிஞர் சல்மாவிடம் கேட்டோம். “எல்லா மதங்களிலும் விவாகரத்து உண்டு; அதற்கான வழிமுறைகளும் உண்டு. இஸ்லாத்தில், மனைவியிடம் விவாகரத்துப் பெற ஆண்கள் தலாக் சொல்வது... அதுபோல, கணவரிடம் இருந்து விவாகரத்துப்பெற பெண்கள் ‘குலா’ கொடுப்பது என்ற முறைகள் உள்ளன. இதற்கான வழிமுறைகள் குர் ஆனில் சொல்லப்பட்டுள்ளன.

மனைவியை நேருக்கு நேர் பார்த்துதான் தலாக் சொல்ல வேண்டும்; ஒவ்வொரு தலாக் சொல்வதற்கும் குறிப்பிட்ட கால இடைவெளி இருக்க வேண்டும். அதாவது, ஒரு மாதவிடாய் காலம் என்று சொல்வார்கள். மனைவி கர்ப்பமாகி இருக்கிறாரா என்பதை அறிந்துகொள்வதற்காக அந்த ஏற்பாடு. தலாக் சொல்லப்பட்ட காலத்தில், ஒரே வீட்டில்தான் கணவனும் மனைவியும் வாழ வேண்டும். இருவரும் மனம் மாறி மீண்டும் சேரலாம் என்பதற்காக அப்படியொரு ஏற்பாடு. இப்படிப் பல விஷயங்கள் குர் ஆனில் சொல்லப் பட்டுள்ளன. ஆனால் அதன்படி இந்தியாவில் தலாக் முறை பின்பற்றப்படவில்லை. இதனால், நிறையப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். நியாயமான கோபத்தில் பெண்கள் போராடுகிறார்கள், வழக்குத் தொடுக்கிறார்கள். இப்படி ஒரு அநீதி இழைக்கப்படும்போது, அதைப் பார்த்துக்கொண்டு பெண்கள் எப்படி சும்மா இருப்பார்கள்? 

‘குர் ஆனில் சொல்லப்பட்டுள்ளபடி நடந்துகொள்ள வேண்டும்’ என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமோ, ஜமாத்தோ, ஆண்களை வழிமுறைப் படுத்தத் தவறுகின்றன. இவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதால், மதத்துக்கு எதிரான விஷயமாகவும், மதத்திலேயே அநீதி இருக்கிறது என்கிற விஷயமாகவும் இது மாறுகிறது. மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் தங்களுடைய வேறு அரசியல் நோக்கங்களுக்காக இதைப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்காமல், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், முஸ்லிம் அமைப்புகளும் உடனடியாக எடுக்க வேண்டும்” என்றார்.

தலாக்... தலாக்... தலாக்... அரசு தலையிட்டு தடைச் செய்ய வேண்டும்.

பாகிஸ்தான், இராக் உள்ளிட்ட 22 நாடுகளில் முத்தலாக் முறை வழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பிரச்னை குறித்து ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’ அமைப்பைச் சேர்ந்த பி.ஜைனுல் ஆபிதீனிடம் பேசினோம். “மனைவியைப் பிடிக்காவிட்டால், விவாகரத்து செய்ய கணவனுக்கு இஸ்லாமியச் சட்டப்படி மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் தலாக் சொல்லிவிட்டால், அந்தக் கணவன்- மனைவியின் திருமண உறவு அடியோடு முறிந்துவிடாது. அவர்களுக்கு இடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால், இரண்டாவது தலாக் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தலாம். அதன் பிறகும் ஒன்று சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு இடையே நல்லிணக்கம் ஏற்படவில்லை என்றால், மூன்றாவது முறை தலாக் சொல்லலாம். மூன்றாவது தலாக் சொல்லிவிட்டால், அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டுவிடுகிறது. 

விவாகரத்து செய்த பிறகு, மனைவியை ஆதரவற்ற நிலையில் விட்டுவிடக்கூடாது. அந்தப் பெண்ணின் எதிர்காலப் பாதுகாப்புக்காகப் போதுமான தொகையை வழங்க வேண்டும். இதைச் செய்துகொடுப்பது ஜமாஅத்தாரின் கடமை. இதுதான் இஸ்லாமியச் சட்டம். இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத சில முஸ்லிம்கள், ஒரே நேரத்தில் மூன்று தலாக், அதாவது முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்கின்றனர். இது தவறு. இந்த நிலையில், ‘இதில் நாங்கள் தலையிட மாட்டோம். உங்கள் அறிஞர்கள் எல்லாம் கூடி ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள்’ என்று அரசு சொல்ல வேண்டுமே தவிர, இதில் அரசு தலையிடக் கூடாது” என்றார்.

 ‘ஒரு தலாக் சொன்ன பிறகு மூன்று மாதம் காத்திருங்கள். அந்த மூன்று மாதங்கள் கடந்துவிட்டாலே மணமுறிவு ஏற்பட்டுவிடும். அதன்பிறகு சேர வேண்டும் என நினைத்தால் மீண்டும் சேர்ந்துகொள்ள முடியும். ஒரு தலாக்கிலேயே மணமுறிவு ஏற்படும் மனநிலையில் முத்தலாக் சொல்லாதீர்கள்’ என்கிறது முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம். ‘‘முத்தலாக் சொல்பவர்களைச் சமூகத்தில் இருந்து புறக்கணியுங்கள்’’ எனவும் சொல்கிறது. இந்தக் கருத்தையே உச்ச நீதிமன்றத்திலும் பதிவு செய்யப் போகிறார்கள். 

இதற்கிடையே ஜமாத் இ-இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த பெண்கள், ‘‘எங்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், கல்வி வாய்ப்புகளையும், அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திக் கொடுங்கள். எங்கள் மார்க்க விவகாரங்களில் தலையிடாதீர்கள்” என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். 

உடன்கட்டை ஏறுதல், தேவதாசிமுறை என பலதீய பழக்கவழக்கங்களை இந்தியாவில் ஒழிக்கவில்லையா.? இந்துக்களைப் போல் இஸ்லாமியர்களும் நல்லவர்களாக மாற வேண்டும். மதவெறிக் கொண்ட இஸ்லாமியர்களுக்கு எடுத்துச்சொன்னால் புரியாது. கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். பெண்கள் சுதந்திரத்தில், அவர்களின் உரிமைகளில் இஸ்லாம் மதம் குறுக்கிட அனுமதிக்க கூடாது. பாஜக'வால் மட்டுமே முஸ்லீம்களை நல்வழிப்படுத்த முடியும். இஸ்லாமிய பெண்களின் ஒரே தெய்வம் திரு. நரேந்திர மோடி என்றால் அது மிகையாகது. விரைவில் மோடி கடவுள் "தலாக்" முறையை ஒழித்து இஸ்லாமிய பெண்களுக்கு சுதந்திரத்தை தருவார்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment