Wednesday, April 26, 2017

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

தீபாவுக்கு ஓய்வு எடுக்க நேரம் கிடைத்துவிட்டது. அடுத்து என்ன செய்யப் போகிறார்?

அவரால் ஓய்வு எடுக்க முடியாது. இதோ மாதவன்தான் புதுக்கட்சி ஆரம்பித்து விட்டாரே. அவருக்குப் பதில் சொல்ல வேண்டாமா? 

‘தீபாவை முதலமைச்சர் ஆக்குவதுதான் என்னுடைய நோக்கம்’ என்று சொல்லி இருந்தார் மாதவன். ஒருவேளை முதலமைச்சர் ஆக்கிவிட்டால், தீபா எப்படி ஓய்வு எடுக்க முடியும்?

என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு ஜெயலலிதா,  அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இனி என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை. ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்றும் சொல்ல முடியாது. ‘எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகத்தான் நடக்கும்’ என்றும் சொல்ல முடியாது. மொத்தத்தில் நாடாகவும் இல்லை; காடாகவும் இல்லை. மர்மப் பிரதேசமாய் மட்டும்தான் இருக்கிறது. இதில் அ.தி.மு.க மட்டுமல்ல, எல்லாக் கட்சிகளுமே முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டு முழித்தபடி இருக்கின்றன. 

‘ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி, வேறு எங்கோ செல்கிறது’ என்று உயர் நீதிமன்றம் கருத்து சொல்லி இருக்கிறதே?

உங்கள் கேள்வியிலேயே ‘ஒதுக்கப்படும்’ என்று இருக்கிறது. ‘ஏழைகளின் நலனுக்காக...’ என்று சொல்லி ஒதுக்கிவிடுகிறார்கள். அது, ஏழைகளுக்காக அல்ல. அதனை உயர் நீதிமன்றமும் இப்போது வழிமொழிந்துள்ளது. அதற்காக ஒதுக்கப்படுவது நின்றுவிடுமா? தொடரத்தான் செய்யும்!

ஆன்மிகத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பு எப்போது ஏற்பட்டு இருக்கும்?

அரசியல் தொடங்கியபோதே!

அரசியல் பிழைத்தாரை அறக்கடவுள் தண்டிக்கத் தொடங்கிவிட்டாரா?

இல்லை. இதுவரை இல்லை!

பொதுநலன், பதவி, அதிகாரம்... எதைச் சார்ந்தது அரசியல்?

முதலில் பொதுநலன் சார்ந்ததாக இருந்தது.

‘ராமர் கோயிலுக்காகத் தூக்கிலும் தொங்குவேன்’ என்கிறாரே மத்திய அமைச்சர் உமாபாரதி?

ஏன்? அவருக்கு நரேந்திர மோடி மீது நம்பிக்கை இல்லையா? மோடி காலத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற நம்பிக்கை உமாபாரதிக்கு இல்லையா?

தமிழக அமைச்சர்களின் அதிகாரம், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பலிக்கவில்லையே?

வருமானவரிச் சோதனை நடத்தும் நேரத்தில், அந்த அதிகாரிகளுக்கான அதிகாரம் அதிகம். அதனை அமைச்சர்களால் தடுக்க முடியாது. ஒரு அமைச்சர் வீட்டில் சோதனை நடந்தால், அமைச்சர் போல அவர் செயல்பட முடியாது. சோதனைக்கு உள்ளானவராகத்தான் அவர் நடந்துகொள்ள முடியும். அங்கு மற்ற அமைச்சர்கள் வந்தாலு, அவர்கள் அமைச்சர்கள் போல செயல்பட முடியாது.

ஆனால், பூதாகரமாக நடத்தப்படும் ரெய்டுகள் ஒரு கட்டத்துக்குப் பிறகு சுணங்கி விடுகின்றனவே... அதற்கு என்ன காரணம்? அமைச்சர்கள் பின்னர் ‘வெற்றி’ பெற்றுவிடுகிறார்களே. அவர்கள் மீது நடவடிக்கைகள் பெரிய அளவில் இருப்பது இல்லையே, ஏன்?

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில், அவர் தலைமைச் செயலாளராக இருக்கும்போதே ரெய்டு நடத்தப்பட்டது. அவர் பதவி பறிக்கப்பட்டது. சில வாரங்கள் பதவி இல்லாமல் இருந்தார். இப்போது அவருக்குப் பதவி தரப்பட்டு விட்டது. வருமான வரித்துறை எதுவும் செய்யவில்லையே? அதன் அதிகாரத்தைச் செயல்பட விடாமல் தடுத்தவர் யார்?

அதன்பிறகு பதவி ஆசையாக மாறியது. பின்னர் அது இப்போது அதிகார வெறியாக மட்டுமே இருக்கிறது. மீண்டும் பொதுநலனாக மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு மேலும் மேலும் கடனாளி ஆகி வருகிறதே?

வருமானத்தைப் பெருக்கும் சிந்தனை இல்லாமல் கடன் வாங்கிக்கொண்டே இருந்தால், கடனாளியாகத்தான் ஆவோம். 

‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்’

என்கிறார் வள்ளுவர். ‘பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை, இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து போகும்’ என்பது இதன் பொருள். அமைச்சர்களுக்கு அவர்களது வருமானத்தைப் பற்றித்தான் கவலை. தமிழ்நாடு அரசு கடன் வாங்கி அதிகம் செலவு செய்தால், அவர்களது வருமானம் கூடுகிறதே!

கழுகார் பதில்கள்

சீமான்  ஒருங்கிணைப்பாளர்,  நாம் தமிழர் கட்சி

என்று ஒழியும் இந்தக் கொடுமை அரசியல்? எப்போது மலரும் உண்மையும் நேர்மையும் எளிமையுமான தூய அரசியல்?

மிகமிக விரைவில்! கூடங்குளத்தில் தொடங்கிய மக்கள் எழுச்சி, காவிரிக்காக, முல்லைப் பெரியாறுக்காக, மீத்தேனை எதிர்த்து, ஹைட்ரோ கார்பனை எதிர்த்து, ஜல்லிக்கட்டை ஆதரித்து... என நாலாபக்கமும் பரவத் தொடங்கிவிட்டது.

டாஸ்மாக் கடைகளை எதிர்த்து ஊர் ஊராக, வீதிவீதியாக பெண்களும் இளைஞர்களும் சிறுவர்களும் போராட்டக் களத்துக்கு வந்துவிட்டார்கள். இவர்கள் கடைகளைத் தாக்குகிறார்கள். காவல்துறை தாக்குதலை எதிர்கொள்கிறார்கள். தேதி குறிக்காமல் வீதிக்கு வருகிறார்கள். நேரம், காலம் பார்க்காமல் போராடுகிறார்கள்.

முன்பெல்லாம் ஏதாவது பிரச்னைக்காக அரசியல் கட்சிகள்தான் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் நடத்தும். அதனை ஏற்கும் பொதுமக்கள் வந்து ஆதரவு தெரிவிப்பார்கள். ஆனால், இப்போது பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதாவது, மக்களுக்கான அரசியல் தொடங்கிவிட்டது என்பதைக் இந்தக் காட்சிகள் உணர்த்துகின்றன.

மக்கள் தங்களது கோரிக்கைக்காக வீதியில் இறங்கும்போது, அது வெல்லும் வரை வீதியை விட்டு வீட்டுக்குள் போகமாட்டோம் என்று சொல்லும் நிலைமை இன்னும் சில ஆண்டுகளில் வந்துவிடும். அந்தத் தருணத்தில், இப்போது நாம் பார்க்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ அரசியல் முடிவுக்கு வந்துவிடும். உண்மையும் நேர்மையும் எளிமையுமான தூய அரசியல் தோன்றும். கவருக்குள் வைத்து பணம் கொடுத்தால், அதை எரித்து, கொடுத்தவன் சட்டைப்பையில் போடுவார்கள் மக்கள்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment