Sunday, April 30, 2017

பணம் பார்சலில் வந்தது! - முட்டுச்சந்து விசாரணையில் தினகரன்

பணம் பார்சலில் வந்தது! - முட்டுச்சந்து விசாரணையில் தினகரன்

நான்கு நாட்கள் தொடர்ந்த மாரத்தான் விசாரணைக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் டி.டி.வி.தினகரனைக் கைதுசெய்தது டெல்லி போலீஸ். தேர்தல் ஆணையத்துக்குப் பணம் கொடுத்து இரட்டைஇலைச் சின்னத்தைப் பெற முயன்ற வழக்கில், தினகரனிடம் விசாரணை நடைபெற்ற டெல்லி க்ரைம் பிராஞ்ச் அலுவலகம், சாணக்யபுரியில் இருக்கும் தீன் மூர்த்தி போலீஸ் குடியிருப்புக்குள் ஒரு முட்டுச்சந்தில் இருக்கிறது. இதனாலேயே தினகரன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ‘முட்டுச்சந்து விசாரணை’ என்றே செய்தியாளர்கள் பெயர் வைத்துவிட்டனர். 

முதல் நாளில் ஒரு கேள்வித்தாள் கொடுத்து சாதாரணமாக ஆரம்பித்த விசாரணை, திங்கள் கிழமை சூடுபிடித்தது. ஒரே கேள்வியை ஐந்து விதங்களாக மாற்றி மாற்றிக் கேட்டு, அதற்கு தினகரன் தந்த பதில்களில் இருந்த வித்தியாசங்களை வைத்து நெருக்கடி கொடுத்தது போலீஸ். ‘திங்கள் கிழமை 4 மணிக்கு விசாரணைக்கு வர வேண்டும்’ என்று தினகரனிடம் சொல்லி இருந்தாலும், சும்மா உட்காரவைத்துவிட்டு இரவு 7 மணிக்கு மேல்தான் விசாரணையைத் தொடங்கினர். அப்போதே, ‘என்னவோ நடக்கப்போகிறது’ என்று தினகரனுக்குப் புரிந்துவிட்டது.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை நடத்திய வழக்கறிஞர் குமார், அன்று காலை புதிதாக விசாரணைக்கு அழைக்கப்பட்டது, டெல்லியில் பல தமிழ் வழக்கறிஞர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தினகரனின் ‘தொடர்பு வட்டாரங்கள்’ குறித்து அவரிடம் விரிவான கேள்விகள் எழுப்பப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், அன்றோடு அவரை விடுவித்துவிட்டனர். மறுநாள் இரவு அவர் அமெரிக்காவுக்கும் புறப்பட்டுவிட்டதாக மற்ற வழக்கறிஞர்கள் கூறினர். பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை விபரங்களில்கூட குமாரின் பெயர் இல்லை. இன்னோர்  ஆச்சர்யம், தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனையும் விசாரணைக்குப் பின் விடுவித்தது போலீஸ். இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர், செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது மிக இயல்பாக இருந்தார்். செய்தியாளர்களிடம், ‘‘என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்...” என்றார்். தினகரன் மற்றும் சுகேஷ் தொடர்பான தொலைபேசி உரையாடல் விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, சுகேஷை மேலும் சில நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரினர். நீதிபதி பூனம் சவுத்ரி கூடுதலாக ஐந்து நாள்களுக்கு அனுமதித்தபோது, ‘‘முக்கிய நபரான தினகரனை ஏன் கைதுசெய்யவில்லை?” என்று சுகேஷின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அப்போது, “உரிய நேரத்தில் கைதுசெய்வோம்” என்று போலீஸ் தரப்பு சொன்னது. சொன்னபடியே அன்று இரவு 11.55 மணிக்கு தினகரன் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களும், வழக்கறிஞர்களும் மட்டுமே அங்கு இருந்தனர். பரபரப்பான தினகரனின் வழக்கறிஞர்கள், இரவு முழுவதும் ஜாமீன் விண்ணப்பங்களைத் தயாரிக்கும் பணியில் பிஸி ஆகினர். நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லும் முன் தினகரனை அவருடைய மனைவி மற்றும் மகள் இருவரும், க்ரைம் பிராஞ்ச் அலுவலகத்திலேயே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். மாலை 3.15 மணிக்கு தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இயல்பான புன்முறுவலுடன்தான் தினகரன் வந்தார். விசாரணை அதிகாரியான சஞ்சய் சராவத், தினகரனின் தோளில் கைபோட்ட படி அழைத்து வந்தார். அவரது உதவியாளர் ஜனார்த்தனன் மற்றும் வழக்கறிஞர்கள் இரண்டு மணிக்கே அங்கே தயாராக இருந்தனர். விசாரணை தொடங்கும் முன் பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்கு தினகரனின் வழக்கறிஞர் விகாஷ் பாவா எதிர்ப்பு தெரிவித்தார். 

பணம் பார்சலில் வந்தது! - முட்டுச்சந்து விசாரணையில் தினகரன்

விசாரணையின்போது ‘‘இரட்டைஇலைச் சின்னத்தைப் பெற 50 கோடி ரூபாய் பணம் கைமாறியது” என அரசு வழக்கறிஞர் பல்வீர் சிங் தெரிவிக்க, கோப்புகளைப் பார்த்துவிட்டு, ‘‘பத்து கோடி ரூபாய் பரிமாற்றம்தானே நடந்துள்ளது’’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். ‘ஐம்பது கோடி’ என போலீஸ் சொன்னபோது மல்லிகார்ஜுனா, தினகரனைப் பார்த்து ‘என்ன இது..?’ என்று சைகையால் கேட்டிருக்கிறார். வெளியே வரும்போது தினகரன் முகம் வாடியிருந்தது. மல்லிகார்ஜுனா சொன்ன சில தகவல்கள் அடிப்படையில் தினகரன் மனைவி அனுராதாவும் விசாரிக்கப்படுகிறார். சில அமைச்சர்களின் பெயர்களையும் டெல்லி போலீஸார் குறிப்புகளில் வைத்துள்ளனர். எனவே, இந்த வழக்கில் பரபரப்பு மேலும் அதிகமாகும் என்றுதான் தகவல்.

டெல்லி ஹயாத் ஹோட்டல் அறையில் ஒரு கோடியே முப்பது லட்ச ரூபாயோடு சுகேஷை போலீஸ் சுற்றி வளைத்தபோது, ‘‘உங்கள் ரேங்கிற்கு ஏற்ப பணத்தைப் பங்கு போட்டுக்கொண்டுக் கிளம்புங்கள். நான் தூங்க வேண்டும்’’ என்று கூலாகச் சொன்னானாம். அதன் பிறகு ஷா ஃபைசல் என்ற ஹவாலா ஏஜென்ட் சிக்கினான். ‘‘சென்னையிலிருந்து ஒரு பார்சலில் எனக்குப் பணம் வந்தது. அதை சுகேஷிடம் கொடுத்தேன்’’ என ஷா வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். இதில் நரேஷ் என்ற இன்னொரு ஹவாலா ஏஜென்டை வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர். இவர்தான் சென்னையில் இருந்து பணம் அனுப்பினாராம். தினகரனை போலீஸ் காவலில் ஐந்து நாட்கள் விசாரித்துவிட்டு, திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, இந்தப் பணம் பயணித்த ரூட்டைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் போலீஸ் உள்ளது. 

News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment